அன்றொரு நாள்: ஆகஸ்ட் 8 ~2

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:57, 15 ஆகஸ்ட் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Hy11Krishnadevaraya 103305e.jpg
இன்னம்பூரான்


                                                                                                                    

வரலாற்றின் ஏடுகளை புரட்டுவதற்கு, இடமும், பொருளும், ஏவலும் துணை போகும். ஆனால், மனமிருந்தால் தான் மார்கமுண்டு. அந்த மனம் கனவிலும் மிதக்கலாம்; நனவிலும் மிதக்கலாம். ஒரே சமயத்தில் இரண்டிலும் யாத்திரை செய்யலாம். ஒரு காலகட்டத்தில், திருமலையில் சலுகைகள் இருந்ததால், சாவதானமாக விஜயநகர சக்கரவர்த்தி ஶ்ரீகிருஷ்ணதேவராயர் தம்பதிகளின் சிலைகளை தரிசிக்கும் போது, ஏழுமலையிலிருந்து இறங்கி, அகண்ட காவேரி சென்று, ஶ்ரீரங்கநாதர் கோயிலில் உள்ள ராயர் கோபுரம் வரை சென்றது மனம்; அங்கிருந்து வானாளவிய ‘அரசு முத்திரை’ கோயில் ஶ்ரீவில்லிப்புத்தூர் சென்று, கோதாப்பிராட்டியிடம் சரணாரவிந்தம் அடைந்தது. எல்லாம் க்ஷண நேரம். ஶ்ரீ கிருஷ்ணதேவராயரின் பேசும் மொழி துளு. எழுதும் மொழி தெலுங்கு. அவரோ புவியாள்பவர் மட்டுமல்ல; கவிதா சிரோன்மணி. படைத்த அருமையான காவியம், ‘ஆமுக்த மால்யதா’; காவியத்தின் வகை, ‘பிரபந்தமு’ ~ஒரு தொடர்காவியம். ஆண்டாள் உலகமாதா; சிறுமி; பசலையால் வாடும் தலைவி. காவியத்தின் நுட்பம், அவளழகுடன், காலபருவத்தையும், கொட்டும் மழையும், இயற்கையழகையும் இணைத்து வருணித்த நேர்த்தி. இறையுடன் அவள் இணைந்துவிடுவதை மோக்ஷசாம்ராஜ்யமாகவல்லவா கவி பாடுகிறார், இந்த மன்னர் மன்னன். எத்தனை உபகதைகள் - தந்தை பெரியாழ்வாருக்கு திவ்ய தரிசனம், பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, பரிசில் இறங்கி வந்த அற்புதம், ‘விஷ்ணுசித்தர் வந்தார்’ என்று பாண்டிய மன்னனின் உபசாரம், கண்டிகையில் உலா, யமுனாச்சாரியர், ‘சண்டாள ~பிரும்மராக்ஷஸ விவாதமு’. பக்தி ரசம் ததும்பும் கவிதோத்தமம்.(அக்காவியத்தை தமிழாக்கம்
செய்ததற்காக, சாகித்ய அகாதெமி முதன் முதலில் தனது மொழிபெயர்ப்புக்கான விருதை ஜகந்நாதராஜாவுக்கு அளித்துச் சிறப்பித்தது.)
பேரரசர் கன்னட மொழியிலும், சம்ஸ்கிருதத்திலும் புலவர். அவரது சம்ஸ்கிருத நூல்: ஜாம்பவதி கல்யாணமு.
சரி. அவர் ராஜ்யபாரம் வகித்ததை பற்றி சொல்லாமல், ஹம்பியை பற்றி சொல்லாமல், போரும் சமரும் செய்த சாகசங்களை சொல்லாமல், புலமையை பற்றி மட்டும் சொல்வது போதுமா? என்று தானே கேட்கிறீர்கள். நியாயம் தான். இன்னொரு நாள் தான் மீதி எழுதவேண்டும். ஆனால், அதற்குள் இதையெல்லாம் படித்து விடுங்கள்.
1.A Forgotten Empire: Vijayanagar; A Contribution to the History of India by Robert Sewell
http://www.gutenberg.org/ebooks/3310
(இந்திய வரலாறு/இலக்கியங்கள் இந்த பிரபல மின்~நூலகத்தில் குறைவு. இந்த நூலும், ரபீந்தரநாத் தாகூரின் படைப்புகளும் அங்கு உளன.)

தெனாலிராமன் கதைகள்.
http://www.thehindu.com/news/cities/Hyderabad/article393909.ece?homepage=true&css=print








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:47, 15 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஆகஸ்ட்_8_%7E2&oldid=7888" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 ஆகஸ்ட் 2011, 13:57 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,033 முறைகள் அணுகப்பட்டது.