திருக்குரான் - இறைவன் கருணையுள்ளவன்.
- உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (இந்த உண்மையை அறிந்து கொள்ள சான்று வேண்டுமாயின்)
- மனிதர்களைப் படைத்து வாழ்வாதாரம் வழங்கியதோடு நின்றுவிடாமல், தன் தூதர்கள் வாயிலாக அவர்களை நேர் வழியில் செலுத்தும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான். நேர்வழியை அருள்வதும் இறைப்பண்புகளில் ஒன்றாகும்.
- உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்து விடுகின்றான்; மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.
அனைவரிடமும் அன்பாயிருங்கள்
நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்:
* ""படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்
(நூல்: பைஹகி)
- மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால்
விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.
(நூல்: திர்மிதி)
- நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறை நம்பிக்கையாளர்களாக முடியாது.
* நபித்தோழர்கள்: நாங்கள் ஒவ்வொருவரும் அன்பு செலுத்துபவர்களாகவே உள்ளோம்.
- நபிகள் நாயகம்(ஸல்): அன்பு என்பது உங்கள்
உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.
(நூல்: பத்ஹுல் பாரி)
நேரான வழியே பலனளிக்கும்
- நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச் செயலாகும்.
- அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.
* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.
- மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.
- ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.
- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:38, 15 ஏப்ரல் 2011 (UTC)
நன்றி - தின மலர்.