அன்றொரு நாள்: ஜூலை 20: Iமரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:53, 25 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
ஹூஸ்டன்! நிம்மதி தளமிது. கழுகார் இறங்கிவிட்டார்.’-
அப்போல்லோ 11ல் சென்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் சந்திரனிடமிருந்து அனுப்பிய செய்தி, மாலை 4:17:40: அமெரிக்க கிழக்கு பிராந்திய நேரம்: ஜூலை 20, 1969. ஆறு மணி 30 நிமிடங்களுக்கு பிறகு, மெதுவாக காலெடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின், உலகெங்கும் எதிரொலித்த பொன்மொழி:
‘இது சிறிய திருவடி! இதுவே மனிதகுலத்தின் பெரிய திருவடி என்க. (இவர் எப்போ வாமனாவதாரம் பற்றி படித்தார்!) டெலிவிஷன் கேமராக்கள் சுழல, லக்ஷக்கணக்கான மக்கள், வாயை பிளந்து கொண்டு, இந்த ஆச்சரியமான சம்பவத்தை கண்டனர். ‘ இங்கு மணல் மாவு போல் நைஸ். மெதுவாக நடக்கிறேன். பாதம் பதிந்தத் தடம் தெரிகிறது என்று குழந்தை போல் சொல்கிறார். ஶ்ரீராமனுக்கு தண்ணீர் நிறைந்தத் தாம்பாளத்தில் நிலாவை சுமந்திரர் பிடித்துக்கொடுத்ததை நினைத்துக் கொள்கிறேன்.
2006ல் சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் என் பெண் முனைவர் பட்டம் வாங்கும் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் தான் முக்கிய விருந்தினர். அவருடைய சொற்பொழிவை கேட்டேன். அடக்கித்தான் வாசித்தார். என் சிரிப்பை தான் அடக்கமுடியவில்லை. ஜோக்கை நினைத்து! ‘மூன்வாக்’எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே. சுருக்கமாக முடித்து விடுகிறேன். இன்றே ஒரு தாக்குதல் நடத்த வேண்டியிருக்கு, அன்றொரு நாள்: ஜூலை 20: I Iல்..................
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:53, 25 ஜூலை 2011 (UTC) |