கலித்தொகை - குறும்பில் ஒளிந்திருக்கும் குறும்புகள்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:46, 8 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் கட்டுரையாளர்:மன்னை. மகா நன்றி:- தினமணி - தொகுத்து அனுப்பியவர்: டாக்டர். கண்ணன் நடராசன்
அத்தகு இலக்கியங்கள் பலவற்றுள்
இவை தனித்தன்மை மிக்கவை.
இப்பாடல்களுள் பயின்று வரும் மாந்தர்கள் பிறரிடம் நிகழ்த்தும் உரையாடலை நாடகப் போக்குப் பாடல் எனவும், தன் நெஞ்சோடு கிளத்தலை நாடகத் தனிமொழி எனவும் வகைப்படுத்த இயலும்.
பாடலைப் பாடும் புலவரின் கூற்று இவற்றுள் அமையப் பெறுவதில்லை.
கலித்தொகை பாடல்கள் பெரும்பாலும் நாடகப் போக்குத் தன்மையுடன் விளங்கி வருகின்றன.
குறிப்பாக "சுடர்த் தொடீஇ கேளாய்" என்ற பாடல் அனைவர் மனத்திலும் தலைவனின் குறும்புச் செயல்களை வியந்து போற்றி நீங்கா இடம்பெற்ற நாடகப்போக்குப் பாடலாக சிறப்புடன் திகழ்வதைப் போல, அகப்பாட்டு ஒன்றில் காணப்படும் நாடகத் தனி மொழியில் காணப்படும் தலைவனின் குறும்புத் திறத்தை அறிவோம்.
புதிதாய் மணமுடித்த தலைவன் ஒருவனோடு ஊடல் கொண்டிருக்கத் தலைப்பட்டாள்
ஆனால், அம் முயற்சி அவனுக்குக் கைகூடாததுடன் மேன்மேலும் அவளுடைய ஊடல்
இது ஓர் உளத் தற்காப்பு உத்தியாகும்.
அன்று தான் அத்திருமணத் தம்பதியினருக்கு தலைநாள் இரவு.
விருப்பம் ஒன்று கூடிவர தூய ஆடையுடுத்திப் பொலிவுடன் நல் அணிகலன்கள் பல
அத்தகு புதுத்தன்மை இழக்காத புடவையால் மேனி முழுவதும் போர்த்தி பெரும் "உன் பிறை போன்ற நெற்றியில் அரும்பும் வியர்வையினை காற்று மிகக்கொண்டு ஆற்றும்
பின்னர், இதழ் பருத்த பெரிய ஆம்பல் மலர் மாலையின் மணம் வீசியும் வண்டுகள்
"தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி
இல்லத்தலைவி மீதான இத்தகைய இரக்கமற்ற சீண்டல்களை ஆணாதிக்க சமூகம்
அதுபோல், பெண் என்பவள், ஆடவனின் உடைமை மற்றும் நுகர்வுப் பொருளாகவும்,
ஆண் வண்டினம் மொய்த்து ஆரவாரத்துடன் களிக்கத்தக்க மலராகப் பெண்
நல்லது செய்வதாகக் கூறி அல்லது செய்து பெண்ணை பெரும் துன்பத்துக்கு
மேலும், நல்ல இல்லத் தலைவி, கணவனின் எத்தகைய விரும்பத்தக்க மற்றும்
இவ்வித அடிமைக் கற்பு நிலை வரலாறு நெடுக தடம்பதித்தே வந்துள்ளது.
ஆகவே, இதுபோன்ற நாடகத் தனிமொழிப் பாடல்களில் பொதிந்து காணப்படுகின்ற
அப்படி அடிபணிந்து ஒழுகியவள் இப்போது தொடர்ந்து புரிந்துவரும் ஊடலுக்குக் காரணம் யாதோ?
என்று தனக்குள்ளாகப் புலம்பும் ஐயப்பாடே இங்கு கருத்து வெளிப்பாட்டுப் பாங்கியலாக உள்ளது நன்கு புலப்படும். இவ் ஊடலுக்குக் காரணம் பெண் தன்னெழுச்சியுற்று தன் மதிப்பை விழைவதேயாகும். ஏனெனில், புனிதம் என்பது இங்கு எதுவுமில்லை. எல்லாம் மீள்வாசிப்பிற்கும், மறுசிந்தனைக்கும் உள்பட்டது.
இப்பாடல் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை மானுடம் போற்றும் மனிதர் கட்டாயம் அறிவர். |