கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில் - திருவாரூர்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:37, 4 ஜூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில்
மூலவர் : அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள்
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் கருமாமுகிலுருவா கனலுருவா புனலுருவா -திருமங்கையாழ்வார்
தல சிறப்பு: இங்கு பெருமாள் நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். தரிசனம் கண்டவர்கள் வியாக்ரபாதர், வியாசர், ஆதிசேஷன் பெருமாளின் 108 திருப்பதிகளுள் 11வது தலம் இது. புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் தில்லை நடராஜப்பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணையிட்டார். அதன்படி இத்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ரபாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இத்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார். பெயர்க்காரணம்: புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக சயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.
தல வரலாறு:
திருவிழா:
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:32, 4 ஜூலை 2011 (UTC) நன்றி - தின் மலர். |
