ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 31 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஜூன் 4- நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்!
ஆழ்வார்களில் முக்கியமானவரான நம்மாழ்வாருக்குரிய தலம் ஆழ்வார்திருநகரி; ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கருதப்படும் இவர், வைகாசி விசாகத்தன்று அவதரித்தவர். இதையொட்டி, நம்மாழ்வார் உற்சவம், பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
சடகோபரை, ஆழ்வார் திருநகரியிலுள்ள பொலிந்து நின்ற பிரான்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரத்தடி பொந்தில் அமர்ந்து கொண்டார் சடகோபர். பெற்றோர், அவரைத் தூக்க முயன்றனர்; ஆனால், அசைக்கவே முடியவில்லை. 16 ஆண்டுகள், அந்த மரத்தடியிலேயே உணவில்லாமல் இருந்தார்; ஆனால், ஒரு இளைஞருக்குரிய வளர்ச்சி ஏற்பட்டு விட்டது . அப்போது, வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. அயோத்தி சென்ற அவர், இறைவனை வணங்கும் போது, தென்திசையில் ஒரு பேரொளியை கண்டார்; அந்த ஒளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த ஒளி வெகுதூரம் அவரை இழுத்து வந்து விட்டது. ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரத்தடிக்கு வந்ததும், ஒளி மறைந்து விட்டது. அந்த மரப்பொந்தில், மகாஞானி ஒருவர் இருப்பதைக் கண்டார் மதுரகவி ஆழ்வார்.
இங்கு பெருமாளை விட, நம்மாழ்வாருக்குதத் தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம், ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் இலைகள் மூடாத காரணத்தால், இம்மரம், "உறங்காப்புளி' என்று அழைக்கப் படுகிறது. நம்மாழ்வார் தன், 35ம் வயதில், மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். மரத்தின் அடியில் தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டது. தன் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி, பெருமை< அடைந்தார் மதுரகவி ஆழ்வார்.
ஆழ்வார்திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோவிலில், நம்மாழ்வார் உற்சவம் மிகவும் பிரபலம். திருநெல்வேலியில் இருந்து, திருச்செந்தூர் செல்லும் வழியில், 40 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் அவதரித்தார். எனவே, அதற்கு, பத்து நாட்கள் முன்னதாக விழா துவங்கி விடும். இந்த விழாவைக் காணும் மாணவர்கள், குருவாகிய நம்மாழ்வாரின் அருளால் சிறந்த கல்வியறிவைப் பெறுவர்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:58, 31 மே 2011 (UTC) நன்றி - தின மணி.
|
