சண்முகநாதர் திருக்கோவில் - புதுக்கோட்டைமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:51, 26 மே 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில்
மூலவர் : சண்முக நாதன் ( ஆறுமுகம் ) தல விருட்சம் : விராலிச் செடி தீர்த்தம் : நாகதீர்த்தம் - ஊர் : விராலிமலை மாவட்டம் புதுக்கோட்டை மாநிலம் : தமிழ்நாடு
சந்ததம் பந்தத் - தொடராலே
தல சிறப்பு:
மயில்கள் நிறைந்த மலை.
ஆறுமுகப் பெருமான் வீற்றிருக்கும் தெற்கு பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப் படுகிறது.
வயலூரில்அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிரி நாதர் வந்துள்ளார்.வயலூரிலிருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலைத் தலம். வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலைத்தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை)வழங்கியுள்ளார்.இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.
திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை.
திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம்.
ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம்.
தீர்த்தம் : நாகதீர்த்தம்(தீர்த்தம் நடுவே நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது)
தல வரலாறு:
திருவிழா:
திறக்கும் நேரம்:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:19, 22 ஏப்ரல் 2011 (UTC). நன்றி - தின மலர்
|


