கொங்கு வட்டார சொற்களின் தொகுப்பு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கொங்கு வட்டார சொற்களின் தொகுப்பு
கட்டுரையாளர்:  ராஜசங்கர்


சேலம், ஈரோடு, கோயமுத்தூர், கருர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கின் தமிழ் மற்ற இடங்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. மரியாதையோடு அழைப்பதையும் அமங்கல சொற்களை சொல்லததும் இதன் தனி சிறப்புகள். விவசாயத்தை தொழிலாக கொண்டதால் பல சொற்கள் அதை மையப்படுத்தியே இருக்கும். பெரும்பான்மையான சொற்கள் பல நூறு ஆண்டுகள் ஆன போதும் அதன் தனித்தன்மை மாறாமல் பேசப்படுவது இப்பகுதியின் சிறப்பு.


அட்டாரி: அட்டாலி - பரண்

அண்ணாங்கால் : ஆடு,மாடுகளின் கழுத்தையும் முன்காலையும் சேர்த்து கட்டி விடுதல். இதன் பின் அவைகளால் ஓட முடியாது

அந்திக்கு: இரவுக்கு

அப்பச்சி : அப்புச்சி- தாய்வழித் தாத்தா

அப்பத்தா: அப்பாவின் ஆத்தாள்,அப்பத்தாள்

அப்பயும் குப்பையும் மாய் : சிதறுண்டு போதல். "அந்த காசு அப்பயும் குப்பையுமா போச்சு"

அப்பு : அறை. "அவன ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல

அம்மாயி : அம்மாவின் அம்மா

அருமைக்காரர்: சீர் சடங்குள் செய்யும் உரிமை பெற்றவர். அருமைச்சீர் எனும் ஒரு சீரை செய்தபினே அருமை ஆக முடியும். இதை அருமை வைத்துக்கொண்டார் எனவும் சொல்வார்கள்


 


சொற்கள் விளக்கம்
அக்கட்ட அந்த இடம்
அங்கராக்கு சட்டை
அடசல் அடைத்தல். "கோழி அடச போட்டு பொங்க வைக்கிறோம்"
test test


 


 


 

 


                             

 


பங்களிப்பாளர்கள்

Rajasankar மற்றும் Ksubashini