அம்பே மா அம்மன் திருக்கோவில்மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:39, 13 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அருள்மிகு அம்பே மா அம்மன் திருக்கோவில்
மூலவர் : அம்பே மா அம்மன் ("சச்சார் சவுக்வாலி')
தல சிறப்பு: கோயிலைச் சுற்றி 8 கி.மீ., தொலைவுக்குள் சோம் நாத் என்ற இடத்தில் சோமேஸ்வர் கோயில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் கப்பார் மவுன்டன் என்ற இடத்தில் பழைய அம்பாஜி கோயில் உள்ளது. 900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு. இங்கு அம்மனின் பாதமும், ஒரு விளக்கும் மட்டுமே இருக்கிறது. கடைகளில் மார்பிள் சிலைகள், பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனை
இந்த யந்திரமே அம்பிகை சிலை போன்ற தோற்றத்தில் உள்ளது. அம் பாஜி அம்பே மா சன்னதி அள வில் சிறியது தான். ஆனால், மண்டபம் மார்பிள் கற்களால் ஆனது. பிரகாரமும் மார்பிள் கற்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தல விருட்சமாக அரசமரம் உள்ளது. தேவியை "அம்பே மா' என்றும், "சச்சார் சவுக்வாலி' என்றும் அழைக் கின்றனர்.கோயில் கோபுரத் தின் உச்சியில் 103 அடி உயரத் தில் மார்பிளால் ஆன கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 3 டன் எடையில் (3ஆயிரம் கிலோ) செய்யப்பட்டு, தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. அம்பாஜி கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஏனெனில், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் கண்ணனாக விளையாடி மகிழ்ந்த போது, அவரது மூன்றாவது வயதில் அவருக்கு இங்கு தான் முடி காணிக்கை தரப்பட்டுள்ளது. நந்தகோபனும், யசோதை தாயும் அவரை இக்கோயிலுக்கு கூட்டி வந்து மொட்டை அடித்துள்ளனர். அன்று முதல் இன்று வரை இக்கோயிலில் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே மொட்டையடிக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இங்கு மொட்டை போடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
வடமாநிலங்களில் விநாயகர் வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது. இங்கு விநாயகர், சித்தி, புத்தி என்ற மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) என்ற மகன்களுடனும், இவர்களது மகன்களான குஷல் மற்றும் சாம் என்ற பேரன்களுடனும் காட்சி தருவது விசேஷ அம்சம். விநாயகருக்கு வடமாநில பாணியில் செந்தூரம் பூசப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், வரங்களை தவறாக பயன் படுத்துவோரையும் அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத் தலத்தில் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மற்றொரு கதையின்படி, ராம, லட்சுமணர்கள் சீதையைத் தேடி, கானகத்தில் திரிந்த போது, சிருங்கி முனி வரைச் சந்தித்தனர். அம்பாஜி அம்பே மா தேவியை தரிசித் தால், இதற்கு வழி கிடைக்கும் என அவர் ராமனிடம் கூறி னார். அம்பே மா தேவி மன மிரங்கி, "அஜய்' என்ற அஸ் திரத்தைக் கொடுத்தாள். அதைக் கொண்டு ராவணனை வென்று, சீதையை மீட்டார் ராமன்.
திருவிழா:- நவராத்திரி
ஆன்ம சத்தியம் விளங்க, அதை மறைத்துக் கொண்டிருக்கும் அனர்த்ம இடையூறுகளை விசாரணையால் விலக்கியே தீரவேண்டும். முடிவில், தோன்றி மறையும் அகந்தையும் விலக்கப் பெறுங்கால், சத்தியம் தடையின்றிப் பிரகாசிக்கும். அது இயல்பாகவே தானே தானாய் என்றும் ஒளிர்வது என்பதை உணர்வோம். தியானிப்பதற்கு தனக்கு அன்னியமான ஓர் புறப்பொருள் அவசியமாயிருக்கிறது. ஆன்ம விசாரணையிலோ தானும் தான் அல்லாததுமான (அறிவும் அறிபடுபொருளுமான) ஒருமை நிலையைத் தவிர வேறு புறப்பொருள் கிடையாது. தியானத்திற்கும் ஆன்ம விசாரணைக்கும் வித்தியாசம் இதுவே.
பவள சங்கரி திருநாவுக்கரசு தேதி - 25 - 02 - 2011. நன்றி - தின மலர். |

