கர்னாடகத்துக் கோயில்கள் - மேல்கோட்டை!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 2 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
மேல்கோட்டை!
சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் பரம்பரையாக கீழ்க்கண்ட பெயர்கள் கூறப்படுகின்றன. பத்ம கூடா, புஷ்கரா, புதம சேகரா, ஆனந்த மாயா, யாதவகிரி, நாராயணாத்ரி, வேதாத்ரி, வித்யா((ஞான) மண்டல், தட்சிணபத்ரி. ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம் ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காலமேகம் ஸ்ரீ ஹஸ்தி ஷைல ஸிகரோஜ்வல பாரிஜாதம் ஸ்ரீஸம் நமாமி சிரஸா யதுசைல தீபம். தெற்குதிசைக்கு ஸ்ரீரங்கமும்(கருணா நிவாசன் ஸ்ரீரங்கநாதன்) கிழக்குதிசைக்கு காஞ்சீபுரமும்(ஸ்ரீ வரதராஜன்) வடதிசைக்கு திருப்பதியும்(ஸ்ரீவேங்கடாசலபதி) மேற்கு திசைக்கு-மேல்கோட்டையும்(ஸ்ரீசம்பத்குமாரர்) என்று ஆகம் சாஸ்த்திரப்படி நான்கு திருக்கோயிலகளும் கலை அழகு மிளிர நிர்மாணிக்கப்பட்டு அர்ச்சா மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. கர்ப்பகிருஹத்தில் மூலமூர்த்தி திருநாராயண பகவான் சங்கசக்ரத்துடன் சதுர்புஜம் ,அபயஹஸ்தம்,தண்டாயுதம்(கதை) ,அற்புதமான ரத்னம் இழைத்த தங்கக்கிரீடம், பூநூல் ,நாகாபரணம் முதலிய திவ்ய அலங்காரத்துடன் சேவை சாதிக்கிறார். தாயார் யதுகிரிநாச்சியார். ஆசார்யர்களுக்கும் ஆழ்வார்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. கோயிலின் வெளியே வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் நம்மாழ்வார் திருமங்கை ஆழ்வார் குலசேகர ஆழ்வார் சந்நிதிகளும் அமைந்துவிளங்குகின்றன. குலசேகர ஆழ்வார் சந்நிதி முன்பாக அக்கா தங்கைக் குளங்கள் என இரண்டு குளங்கள், பெருங்குளமும் சிறுகுளமுமாய் எழிலுடன் இணைந்து காட்சி அளிக்கின்றன. இரண்டுசகோதரிகள் கோயிலின் ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்தில் முக்கியபங்கு கொண்டு கைங்கர்யம் செய்தனர். அக்காள் தனது சார்பில்குளம் வெட்டி அந்தக் கைங்கர்யத்தில் ஆன செலவை கணக்குப்பார்த்தாளாம், தங்கை அப்படிக்கணக்குப்பார்க்கவில்லையாம் !அதனால் அக்காளின் குளத்துநீர் உப்பாகவும் தங்கையின்குளத்துநீர் இனிப்பாகவும் இருக்குமாம்!(இந்த சம்பவத்தின்மூலம் நமக்கிடைக்கும் படிப்பினை, பக்திதொண்டிற்குநாம் செய்யும் பணிக்குசெலவாகும்தொகையை கணக்குபார்ப்பது சரியல்லஎன்பதாகும்.) இது மேல்கோட்டை பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ளது. இத்திருக்குளத்தின் கிழக்கே சுமார் 50படிக்கட்டுக்களுடன் கூடிய மலைக்கோயிலில் ஸ்ரீயோகநரசிங்கன் அருள்பாலிக்கிறார். கல்யாணிதீர்த்தத்தின் கரையில் ஸ்ரீவராஹப்பெருமான் ஆலயமும் சப்தரிஷி ஷேத்ரமும், சீதாரண்யமும் கருடன் தன் இருகைகளுடன் வலது திருக்கரத்தில் திருமண் மலையைவைத்துக்கொண்டு வாஹன வடிவில் அமர்ந்து காட்சி நல்கும் தார்ஷ்ய ஷேத்ரமும் புவனேஸ்வரி மண்டபமும் அகோபிலமடமும் உள்ளன. ஸ்ரீதிருநாராயணர்கோயிலின் பிரதான வாசலுக்கு எதிரே ஓர் இலந்தைமரத்து அடியில் ஒரு சிறிய நாராயணன் சந்நிதிஉள்ளது இங்கும் நித்யாராதனம்(தினப்படிபூஜை) நடைபெற்றுவருகிறது. இங்கு சாண்டில்ய மஹரிஷியை மெச்சி பத்ரிநாத் பகவான் அவருக்கு தரிசனம் அளித்து அனுக்ரஹித்தார் ஆகவே இதை தட்சிணபத்ரி எனவும் அழைக்கிறார்கள். ஸ்ரீ பலராமனும் ஸ்ரீகிருஷ்ணனும் தங்களின் தீர்த்த யாத்திரையின்போது இங்கு விஜயம் செய்து பகவானை தரிசித்தார்கள் அப்போது கிருஷ்ணன் ஒரு வைரமுடி பகவானுக்கு சமர்ப்பித்தார் என்று சொல்லப்படுகிறது. கோவிலின் விமானம் ஆனந்தமய விமானம். கோவிலுக்குஎதிரே த்வஜஸ்தம்பம்(கொடிமரம்)உள்ளது அதைதாண்டி 24 கம்பங்கள் உள்ள மண்டபத்தில் 7அடி உயரமுள்ள கருடபகவானை தரிசிக்கலாம். இது, ராமானுஜரின் அபிமான ஸ்தலம், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வநாரயணன், திருநாராணன், வண்புகழ் நாரணன், வாழ்புகழ்நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிகக்லாம். ஸ்ரீரங்கமிருந்து தொண்டனூருக்கு ராமானுஜர் வந்ததும் அவருக்கு நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் திருமண் தீர்ந்துவிட்டது அதை யோசித்தபடியே படுத்தவரின் கனவில் ஸ்ரீநாராயணன் தோன்றி ”எனது படிமம்:Download (2).jpgஅருகாமையில் திருமண் நிரம்ப இருக்கிறது இங்கு துளசிசெடிகள் மத்தியில் உங்களை எதிர்பார்க்கிறேன் ”என்று கூறினாராம். மறுநாள்காலை ராமானுஜர் கிராமத்துமுக்கியஸ்தர்களுடன் அங்கேசென்று அந்த இடத்தைத் தோண்டியதில் திருமண்ணும் திவ்யமூர்த்தியும் கிடைக்க அனைவரும் மகிழ்ந்தனர். உடனே அழகான் கோயில்கட்டி பெருமானை பிரதிஷ்டைசெய்தனர். இந்தக்கோயிலின் புனருத்தான கைங்கர்யத்தில் அரசன் விஷ்ணுவர்த்தன் பெரிதும் உதவினான் ராமானுஜரின் சிஷ்யர்களோடு அவருடைய யாத்திரையில் எல்லாவகை உதவிகளையும் அளித்த அந்தபிரதேசத்துப் பழங்குடி மக்களை பெரிதும் மதித்த எதிராஜர் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களை ‘திருக்குலத்தார் ’என்றுபெயரிட்டு அழைக்கலானார். அவர்களின் தன்னலமற்ற சேவையை மதிக்கும் பொருட்டு கோயிலின் உதசவஙக்ளில் அவர்களுக்கு கோயிலின் உள்ளேசென்று இறைவனை தரிசிக்கவும் கல்யாணி தீர்த்தக்குளத்தில் ஸ்னானம் செய்யவும் அனுமதிதந்து மேலும் பலவசதிகள் செய்துகொடுத்தார். சுமார் 1000ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் மிகப்பெரியபுரட்சி என இது கருதப்படுகிறது. முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார். சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும. விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான். உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் என் செல்லப் பிள்ளாய் வருக என்று குழைவா அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். நிபந்தனைப்படியே உற்சவத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றே அழைக்கப்படுகிறது. சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து 'பீபீ நாச்சியார் என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர். மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 'வைரமுடி சேவை' விழா தனிச்சிறப்புடையது. இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்தது!. இத்தகைய மேல்கோட்டைஎனும் திருநாராயணபுரத்தில்,வரும் மார்ச் 25ம் தேதி மேல்கோட்டையில் வைரமுடி சேவை நடக்க இருக்கிறது!. பக்தர்கள் திரளாக வந்து அந்தச் சிறுகிராமத்தை முற்றுகையிட்டு எம்பெருமாளின் அருளுக்குப் பாத்திரமாக இருக்கிறார்கள்! அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
தேதி - 02 - 04 - 2011. |




