சோபனம் சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 12மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:38, 31 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அமிர்தக் கடலின் மத்தியில் கற்பகவிருஷங்கள் நிறைந்த தோப்பில் உள்ள ரத்னத் தீவில் கடம்பமரங்கள் நிறைந்த உத்தியானவனம் (நந்தவனம்) உள்ள சிந்தாமணி க்ருஹத்தில் பரம மங்கள வடிவில் அமைந்த சிம்மாஸனத்தில் அம்பிகை காமேசருடன் கூடி வீற்றிருக்கிறாள். இது தேவியின் வாசஸ்தலம் என்பார்கள். சிந்தாமணி கிருஹம் என்பார்கள் இதை. இந்தச் சிந்தாமணி கிருஹத்தைத் தான் விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தார். அண்டங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருத ஸாகரத்தின் மத்தியில் உள்ள ரத்தினத் தீவில் உள்ளது. இருபத்தைந்து வெளிப் பிராகாரங்கள். முதலில் இரும்பு எஃகு, செம்பு, வெள்ளீயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம்,கோமேதகம், வஜ்ரம், வைடூரியம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவளம், நவரத்தினம், நானா ரத்தினம் இவற்றால் அமைந்தவை. இது தவிர மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய மூன்று தத்துவங்களாலும், சூரிய, சந்திர, மன்மதன் ஆகியோரின் தேஜஸ்ஸாலும் அமைந்தவை. இந்த 25 பிராகாரங்களில் எட்டாவது பிராகாரத்தில் கதம்பவனம். அந்தக் கதம்பவனம் மந்திரிணியான சியாமளையின் வாசஸ்தலம். பதினைந்தாவது பிராகாரங்களில் அஷ்ட்திக்பாலகர்களும், பதினாறாம் பிராஹாரத்தில் சேநாநாயகியான தண்டினியான வாராஹியும்,வசிப்பார்கள். இவளோடு சேர்ந்து சியாமளைக்கும் இங்கே ஒரு கிருஹம் உண்டு. “மஹா சதுஷ்ஷ்ஷ்டி கோடி-யோகினீ-கண ஸேவிதா”பதினேழாவதில் யோகினிகளும், பதினெட்டில் மஹாவிஷ்ணுவும், பத்தொன்பதில் ஈசானனும், இருபதில் சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும் தாரா தேவியும், இருபத்தொன்றில் வாருணியும், இருபத்திரண்டில் அஹங்காரக் கோட்டையில் குருகுல்லாதேவியும், “குருகுல்லா குலேஸ்வரீ” இருபத்துமூன்றில் சூரியப் பிராகாரத்தில் மார்த்தாண்ட பைரவரும், “மார்த்தாண்ட- பைரவாத்யா மந்த்ரிணீ-ந்யஸ்த-ராஜ்யதா”இருபத்து நான்கில் சந்திரனும், இருபத்தைந்தாவது சிருங்கார வனத்ஹ்டில் மன்மதனும் இருக்கின்றனர். இதற்குள்ளேயே மகாபத்ம வனமும் கற்பக விருக்ஷங்களால் ஆன தோப்பும் உள்ளன. அதன் நடுவில் சிந்தாமணிக் கிருஹம். அக்கினி மூலையில் அம்பாள் தோன்றிய சிதக்கினிக் குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபக்கமும் மந்த்ரிணியும், தண்டினியும் இருக்கும் கிருஹங்களும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருக்க, நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீ சக்கரம் காக்ஷி கொடுக்கிறது. ஸ்ரீசக்கரத்தின் நடுவில் சர்வாநந்தமயமான பிந்து பீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாதிரிபுரஸுந்தரியான லலிதா காமேஸ்வரி வீற்றிருக்கிறாள். "பஞ்ச பேரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ " இந்தப் பஞ்சப் பிரம்மாஸனம் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியைப் பலகையாயும் கொண்ட கட்டில் ஆகும். இதுவே அ+உ+ம= ஓம் என்பதைக் குறிக்கும் அர்த்த, மாத்திரை, பிந்து வடிவான ஓங்கார மஞ்சம். “மஹா காமேச-மஹிஷீ மஹாத்ரிபுரஸுந்தரி” என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி பட்டர் அம்பிகையின் இந்தக் கோலத்தை வர்ணிக்கையில் “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் என்கிறார். இத்தகைய அம்பிகையை, “நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச இது நாம் ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதே போல் இன்னொரு அந்தாதியிலும் கூறுவார்: “பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் சிலம்பணிந்த சிறிய திருவடிகளை உடைய அம்பிகை தன் கைகளில் பாசமும், அங்குசமும் கொண்டு ஐந்து மலர்ப்பாணங்களையும் கையில் ஏந்தி, சிந்தூரம் போன்ற சிவந்த மேனியோடு திரிபுரசுந்தரியாக வீற்றிருக்கிறாள். அவளே பராசக்தியின் ஐந்தாவது சக்தியான அநுகிரஹ சக்தியான பஞ்சமியாகவும், “பஞ்சமீ பஞ்சபூதேசீ” கருநிறக் காளியாகவும், கோபம் கொண்ட சண்டிகாவாகவும்,” மஹேஸ்வரீ, மஹாகாலி மஹாக்ராஸா மஹாசனா!அபர்ணா சண்டிகா சண்டமுண்டாசுர நிஷூதநீ” சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருக்கும் மண்டலியாகவும் காட்சி அளிக்கிறாள். “பாநு மண்டல மத்யஸ்தா” என லலிதா சஹஸ்ரநாமாவளி கூறும். இனி லலிதாம்பாளின் ஸ்ரீசக்ர வர்ணனையின் சோபனப்பாடலைக் காண்போம். இந்த வர்ணனை மட்டும் நடுவிலிருந்து போடாமல் பாடல் எண் 166ல் இருந்து பாடல் எண் 188 வரையும் முழுவதும் கொடுக்கப் படும். தரணியில் ஒன்பதும் சமுத்திரத்தில் ஏழும் ஒன்றாவது கோட்டை இரும்பாக்குமதற்கு இந்த வாசல் போலே நாலு வாசலுக்கும் ஏழு யோஜனையுள்ள நடு இடைவெளிதன்னில் வெண்கலக் கோட்டையில் வஸந்தருது காவல் பஞ்சலோகக் கோட்டைக்குப் பாரிஜாதம் வேலி அழகிய கந்தர்வாள் வைரக் கிரஹந்தன்னில்
“மாணிக்க மண்டபத்தில் விஷ்ணுவும் இருக்கின்றார் சந்திரபிம்பத்தில் சிங்காரமாகவே அதற்குக்கிழக்கிலே மும்மூர்த்திகளுக்கும் அக்கினி முடுக்கிலே அக்கினிக்குண்டம் சிந்தாமணிக்கிருஹத்தின் நடுமத்தியிலே தட்டு தோறும் இதுபோல் உயரம் வீதி “ஸர்வாருணா நவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா ஸுமேரு-மத்ய – ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதற்கேற்ப, இங்கே அம்பிகை வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம். மஞ்சத்தின் மேல் ஹம்ஸதூளிகா மெத்தையும் சர்வ சக்தி வாய்ந்த அம்பிகை கிழக்கில் இந்திராணி சக்தியாகவும், அக்னி மூலையில் அக்னி தேவதையாகவும் தெற்கில் வாராஹியாகவும், நிருருதி மூலையில் கட்கதாரிணியாகவும் காக்கிறாள். மேற்கில் வாருணீயாகவும், வாயுமூலையில் மிருகவாஹினியாக வாயுசக்தியும், வடக்கில் கெளமாரியும், ஈசான்யமூலையில் சூலதாரிணியாகவும் காத்து வருகிறாள். பிரஹ்மாணி மேலேயும், விஷ்ணு சக்தி கீழேயும் ஆக மொத்தம் பத்துத் திசைகளையும் தன் சக்தியால் சாமுண்டா தேவி காத்தருள்கிறாள். தேவியைப் பிரார்த்திக்கையில், ஜய சக்தி நம் முன்னால் இருக்கவேண்டும் என்றும், விஜய சக்தி பின்னாலும், அஜிதா இடப்பக்கமும், அபராஜிதா வலப்பக்கத்தில் இருக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கவேண்டும். மேலும் நம் சிகையை உத்யோதினீ தேவியும், சிரசில் உறையும் உமா சிரசையும், லலாடத்தை மாலாதாரிணியான சக்தியும், புருவத்தை யஷஸ்வினியும் காக்கவேண்டும். புருவ மத்தியை த்ரிநேத்ரதாரியான அம்பிகையும், நாசியை யமகண்டாதேவியும், கண்களின் நடுவே சங்கினீ சக்தியும், காதுகளில் துவாரவாஸினீ சக்தியும் ரக்ஷிக்கவேண்டும். கன்னத்தில் காளிகா தேவியும், கர்ணமூலத்தில் சங்கரியும், நாசிகைகளில் ஸுகந்தா தேவியும், மேலுதட்டில் சர்ச்சிகா தேவியும், கீழுதட்டில் அம்ருதகலாதேவியும், நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காக்கவேண்டும். பற்களில் கெளமாரியும், கழுத்தின் நடுவில் சண்டிகையும் காக்கவேண்டும். உள்நாக்கைச் சித்ரகண்டா தேவியும், தாடையை மஹாமாயையும், மோவாய்க்கட்டையைக் காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்களா தேவியும் காக்கவேண்டும். கழுத்தில் பத்ரகாளியும், முதுகெலும்பில் தருத்தரீ தேவியும் கழுத்தின் வெளியில் நீலக்ரீவாதேவியும், கழுத்தெலும்பை நளகூபரீ தேவியும் காக்கவேண்டும்.
--Geetha Sambasivam 13:38, 31 மார்ச் 2011 (UTC)
|