முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -பாடல்கள் 11&12மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:22, 24 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 11&12 உரை முனைவர் கி. லோகநாதன் ஈனன்னை சீர்பியம் : பாடல் 11 இந்த பத்தாவது பாடலை நாம் இன்னும் ஆழமாக சிந்திக்கவேண்டும். கீழ் சிக்கம்(ki-si-ka) என்ற அவள் கூறும் சிறைச்சாலை உண்மையில் என்ன? அந்த உளுகள் அண்ணே யார்? ஏன் இவள் "ஆண்" தான் தன்னை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கமுடியும் என்று நினைக்கவேண்டும்? மேலும் அந்த விடுதியை அடைய சோமனின் உதவியை ஏன் நாட வேண்டும்? இஇப்படிப் பல கேள்விகளை எழுப்பி அவள் குமுறல்களை மீண்டும் அலசும்போதுதான் இஇந்த பாடலின், இஇந்த சீர்பியத்தின் உள்ளார்ந்த அர்த்தம் புரியத்தொடங்குகிறது. நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றது. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்படிப்பட்ட ஆழமான கருத்துக்கள் நம் இஇன் தமிழிலா? என்று வியக்கவைக்கின்றது. Su'en என்ற சொல் 'சோயன்' “சோமன்' ‘சேயன்' என்றோ பிற்காலத்தில் வரும் சொற்களின் மூலமாக இருக்கலாம். ஆயினும் காமாட்சியாகத் தோன்றி உயிர்களின் சந்தான விருத்திக்கு காரணமாகிய காமவேட்கையை ஆட்சி செய்யும் ஈனன்னை இஇவனின் மூத்தமகள் (du-mu-gal su'en-na) என்று வருவதைப் பார்க்க, இஇவன் வேதங்களில் போற்றப்படும் சோமந்தான், சேயோன் அல்லது செய்யன்' ஆகிய திருமால்தான், காமப்பாலின் மூலமாகிய சோமப்பாலை, சித்தர்கள் பெரிதும் வழங்குமாறு, ஊட்டுவது இஇந்த தெய்வந்தான். இஇந்த தெய்வம் பரிந்துரைக்கத்தான் ஆண் ஆகிய பராபரன் ஏண் உடு அன்னாவை விடுவிப்பானாம். ஏன் இஇப்படி ? சோமனுக்குத்தான் தெரியும் யாருக்கு இஇனி இஇந்த சோமப்பால் தேவையில்லை, யார் அந்த பக்குவத்தைக் கடந்து விட்டார்கள் என்று. அப்படி என்றால், கீழ் சிக்கமாகிய சிறை யாது? காமயிச்சைக்கு ஆளாகி இஇந்த உலகியல் வாழ்க்கையில் பட்டு உழல்வதுதான். மாயாமல தொந்தனையால் அசுத்தமாயாத் தனுவில் உழல்வதே சிறைபட்டுக் கிடப்பது. அந்த சிறைப் படத்தான் ஒளி இஇல்லாது போக இருள் கவ்வுகின்றது; ஞானம் இஇல்லாது போக அஞ்ஞனா இஇருள் படர்கின்றது. அவளது சொரூபம் வேண்மான் அல்லது வேண்மாளாகத் திகழ்வது. "en me-en" என்று தன்னை வற்புறுத்துவதின் பொருள் இஇப்பொழுது விளங்குகிறது. அவளது சொரூபம் வேண்மாள்-- தெய்வீகமாகிய நிலை, ஏண் உடு அன்னா, தெய்வீகமாகிய விண்மீனாக வானுலகில் சுடர்வது. உடு: விண்மீன். அந்த சொரூபத்தில் தான் இஇல்லாது, "ஆண்"டவன் சந்நிதியில் இஇருந்து அவனுக்கே ஆளாகி நிற்பதிலிருந்து அவள் விரட்டப்பட்டுவிட்டாள். பாசத்தளைகளில் கட்டப்பட்டு ஓர் உடம்போடு உழலுமாறு சிறை செய்யப்பட்டு விட்டாள். இஇங்கு மெய்கண்டார் "சிறை செய் புலன்" (8:4:1) என்று சிவஞானபோத்தில் கூறுவதைக் காண்க. இஇந்த புலச் சிறையிலிருந்து, இஇந்தப் பாசத்தளைகளிருந்து தன்னை விடுவிக்கக் கூடியவன் அந்த ஆண் ஒருவன் தான், அதுவும் இஇந்த சோமனின் பரிந்துரையால்தான் முடியும். "e-du-e" என்ற சொல் இஇவ்வாறு நோக்குகையில் மிக கருத்தாழம் மிக்கதாக விளங்குகிறது. இஇதுவே விடுதி, வீடுவேறு. இறைவனாகிய ஆண் விடுவிக்க அமைவதே விடுதி, வீடுபேறு. அப்படியென்றால் "விடுதி" என்பது "மோக்கம், மோட்சம், நிர்வாணம், முத்தி" என்பதெல்லாம் பண்டே தமிழச் சிந்தனையில் இஇருந்ததுதான் புதியதல்ல; புதைந்து கிடந்து பத்தி காலத்தில் புதிய வீறுடன் மீண்டும் எழுந்த ஒன்று என்றும் ஆகின்றது. அப்படியென்றால் யார் இஇந்த உளுகள் அண்ணே: யாரோவோர் ஆண்மகன், ஏன் உடு அன்னவின் உள்ளத்தில் காமத்தை எழுப்பி அவள் உலக வாழ்க்கையில் சிறை செய்கின்றவன், வேண்மாளாகிய அவள் சொரூபத்தை இஇழக்கச் செய்கின்றவன். காமதேவனாக, அனங்கனாக இஇருக்கலாம். அவன் தன் ஆண்மை¨ இஇழக்கச் செய்தால் தான், இஇவள் அவன் பிடியிலிருந்து தப்ப முடியும். அதனால் தான் அவள் இஇந்த ஈனன்னையால்தான் அவனது ஆண்மையை கரைக்க முடியும் என்கின்றாள் (nam-lugal-an-ne mi--e ba-ab-ka-re) . இஇங்கு உளுகள் அண்ணனின் "நாஅம்" அல்லது "நலம்" அல்லது "நயம் " என்பதெல்லாம் அவனது இஇளமை வீரியம்தான். சங்க இஇலக்கியத்தில் ஓர் பெண்ணின் "நலம்" என்றால் அவளது இஇளமைப் பொலிவினால் ஓர் ஆண்மகன் அடையும் காம இஇன்பங்களே ஆகும். ஏமாற்றப்பட்ட மகளிர் "என் நலம் உண்டு சென்றானே" என்று புலம்புவதைக் கான்கின்றோம். சுமேரு/குமரித் தமிழ் காலத்தில் இஇந்த "நலம்" ஆண்களுக்கும் இஇருப்பதாக கொள்ளப்படுவதைக் காண்கிறோம். அந்த நலத்தை கரைத்து இஇல்லாது போக்கக் கூடியவள் காமாட்சியாகிய அம்மை தான், காமவிருந்து வைத்து அதனை பலிகொள்கின்றாள்! இஇல்லாது கரைத்து விடுகின்றாள்! இஇந்த ஆழப்பார்வையோடு தொடர்ந்து செல்வோம். ஈனன்னை சீர்பியம்:பாடல் 11 84. as-im-babbar na-an-kus-u-de ஆதிம்பாப்பார் நாஅன் கூசுத்தே 85. su-luh-an-ku-ga-ke ni-nam-ma-ni in-kur சுலோகம் ஆண் கோகக்கே நனம் குறைமனின் 86. an-da e-an-na ha-ba-an-kar ஆண்ட இஇல்அன்னா அவன் காரு 87. an-lu-gu-la-ta ni ba-ra-ba-da-te வான்உளுகுலத்த நீ பர படுதேய் 88. e-bi la-la-bi ba-ra-mu-un-gi hi-lu-bi ba-ra-mu-un-til இஇல்பி அழ-அழபி பரமுன்மீ எழில்பி பர முன் தீர் 89. e-bi hul-a hu-mu-di-ni-in-ku இஇல்பி கொல்ல உம்மோ இஇடினின் குறை 90. tab mu-si-in-ku-ra-ni muru-ma-ne hu-mu-un-te தபு மோ சீயின் கூரனி மருமானே உம்முன் தேய் 91. sun-zi-mu lu he-mi-sar-re lu he-im-mi-in-dab-be சூன் ஜீமோ உளு இஇம்மே செற்றே, இஇம்மினின் அடப்பே குறிப்பு: 84. as-im-babbar> ஆதிம்பாப்பார்> ஆதி பார்ப்பனன்> பிரம்மா?, சிவபெருமான்? 85. su-luh> சுலோகம், சூலை? இஇது வடமொழி அல்ல, தமிழ் என்று தெரிகிறது. வேள்வியின் போது ஓதப்படும் தெய்வீகப் பாடல்? Ni-nam > நீனம்> நனம்: மிக நன்றாக ; kur> குறை: தகுதியை இழக்கச் செய்தல்; அவமானப் படுத்தி கீழிறக்கல்? 86. e-an-na> இஇல் அன்னா?அண்ணா: இஇங்கு "அண்ணா" : மிக உயர்ந்த ; ha-ba-an> அபன் >அவன்: இஇந்தச் உயர்திணை ஆண்பால் சுட்டு முற்றாக இஇங்கு வெளிப்படுகின்றது; kar> காரு: கருப்பாக்கல், அல்லது கரத்தல் 87. an-lu-gu-la> வான்உளுகுலம்: வானில் உள்ள குலம்?: தெய்வங்கள்? ba-ra> பர, வேறு?; ni> நீ: இஇங்கு அவன் எனும் சுட்டு; ba-da-te> படுதேய்> தேய்படு : உறவாடி நிற்றல் 88 la-la-bi>அழ-அழ-பி அல்லது லலிபி> லலிதா, லலிதம் என்பனபோன்ற சொற்களைக் காண்க. til> தீர்: தீர்தல்,முடிதல் 89. kul-la>hul-a> கொல்லு> குலை, களை 90. tab> தம்பு: இஇங்கு தோழன்; maru-ma-ne> மருமான்: இஇன்றும் வழங்கும் அழகிய தமிழ் சொல் 91. sun> சூன், சூர்: ; sar-re> செற்றே அல்லது சரியே: வீழ்த்தல்; dab-be> தப்பே, தகைப்பே, அடைப்பே; he-mi, he-im-mi=in> இஇம்மனின்: உடனடியாக; "இஇம்" எனும் காலக்குறிப்பு ஈனன்னை சீர்பியம்: பாடல் 12 பதினோறாம் பாடல் பல உண்மைகளை தெளிவாக்குகின்றது. வேண்மாளின் அகப்போராட்டமும் மிக நன்றாகப் புரிகின்றது. யாரோ ஒருவன் தன் தந்தைக்கு தம்பி என வந்து மருமான் ஆகப்பார்க்கின்றானாம். எவ்வளவு அழகானத் தமிழ்! "தம்பு மோ சீயின் கூரனி மருமானே உம்முந்தேய்" (tab mu-si-in-ku-ra-ni muru-mane hu-mu-un-te). இஇது தமிழ் இல்லையென்றால், சுமேருமொழி பழந்தமிழ் என்று கூறுதற்கு வெள்ளைகார அறிஞர்கள் சிலரின் ஆதரவு சொற்கள் வேண்டும் என்றால், கண்ணிருந்தும் குருடர்கள் காதிருந்தும் செவிடர்கள்தாம் இஇந்தத் தமிழர்கள். இஇனியாகிலும் அந்த சுயபுத்தியை இஇழந்த தமிழர்கள் நம்மிடையே இஇல்லை என்ற நம்பிக்கையில் இஇந்த ஆய்வினைத் தொடர்வோம். இஇந்த அம்மையார் வாழ்க்கையில் இஇந்த உளுகள் அண்ணே உண்மையான ஓர் ஆடவனாக இஇருக்கலாம். தந்தையோடு தோழமை பாராட்டி பிறகு தன்னை மணந்து மருமகன் ஆகிவிட முயற்சிக்கின்றான். அதுவே இஇவளை பெரும் வேதனைக்கு ஆளாக்குகின்றது. இஇதனால் இஇந்த வேண்மாள் இஇந்த பாட்டினை எழுதிய பொழுது திருமணம் ஆகாத பருவ மங்கையாக இஇருக்கவேண்டும் என்பதொடு சீஆண்டாள் போன்று ஓர் மானிடனை கணவனாக நினைக்கவே முடியாதவளாகிவிட்டவள் என்றும் காட்டுகின்றது. இஇந்த ஆடவனின் காம எண்ணங்கள், அதனால் அவள் உள்ளத்தில் எழுந்த சபலங்கள் இஇந்த அகப்போராட்டத்தை உண்டாக்கி இஇருக்கலாம். தான் தவறு செய்து விட்டதாக, அசுத்தமாகி விட்டதாக நோகின்றாள். ஆதிம்பார்ப்பராகிய அந்த பரசிவனை இஇனி எப்படி தணிவிப்பேன் என்று அரற்றுகின்றாள் (as-im-babbar na-an-kus-u-de). பரசிவந்தான் ஆதிப்பார்ப்பான், அவன் நெஞ்சில் முப்புரிநூல் புரளும். அவனுக்குக் குறைகள் இந்த அற்ப மானிடனால்! இஇங்கு su-luh என்ற சொல் பயில்கின்றது. இஇது சுலோகம் என்ற வடசொல்லின் மூலமாக இஇருக்கலாம். தமிழ் " சொல் " "சொல்லுக" என்பவற்றோடு தொடர்புடையது. மலாய் மொழியில் "suruh" என்றும் பயில்கிறது. ஆண் தந்த சுலோகங்ளை, சொற்களை, ஆணைகளை இஇந்த உளுகள் அண்ணே குறைத்துவிட்டானாம். அதனால் என்ன வாயிற்று? ஆண் உடைய "இஇல் அண்ணாவை" காரிவிட்டானாம்! குற்றமுடையதாக, அழுக்கான ஒன்றாக ஆக்கிவிட்டானாம். (an-da e- an-na ha-ba-an-kar) இதனால் வான் உளுகுலத்தோடு தேய் படுவது பிறகாகி விட்டதாம். (an-lu-gu-la-ta ni ba-ra-ba-da-te) . மேலும் su-luh என்பதை ‘சூலை: என்பதின் பழம்வடிவு என்ரு கொண்டு வேள்வித் தீ எனும் கொள்ளலாம். இதன் தாத்பரியம் இப்பொழுது புரிகிறது. பிற்காலத்தில் செமித்திய பாபிலோனியர்கள் இஇதனைத் திரித்து ஆணாதிக்கத்துக் கதையாக்கி, சபலத்தை தந்து சுவர்க்கத்திலிருந்து இஇறைவனால் ஆதாமையும் ஆவாளையும் வெளியேற்றுவதற்கு ஆவாள் காமக்கனியை விரும்பியதுதான் என்றாக்கி, பெண்கள் மேல் பழியைப்போட்டு அது தொடங்கி சுவர்க்கபுரியிலிருந்து விரட்டப்பட்ட பாவிகளாக மக்களை ஆக்கிவிட்டனர்! ஆக அழ-அழ இஇல், உவல்ல இல்” "இல் அண்ணா"என்பனவெல்லாம் சுவர்க்க புரியே, அது ஆதிபார்ப்பானாகிய பரசிவனின் சந்நிதியே, தில்லையம்பலமே, சிதம்பரமே! கோயிலே! இஇனி தொடர்வோம் ஈனன்னை சீர்பியம் : பாடல்12 92. ki-za-sa-ga-la-ka ga-e a-na-me-en கீழ்ஜீவ சால்காலகம் ஙானே என்னமன்? 93 ki-bala-hul-gig-nanna-za-a-kam an-ne ha-ba-ab-si-mu கீழ்பால ஒல்கிக்க நன்னா ஜாஅகம் ஆண்ணே அப ஆப் சீவு 94. uru-bi an-ne ha-ba-ra-an-si-il-le ஊருபி ஆண்ணே அவன்றான் சில்லே 95 en-lil-le nam ha-ba-da-ku-de ஏண்லீல்லே நாஅம் அவன்ட கோடே 96. dumu-ir-pa-da-bi ama-ne na-an-sed-de தமு ஈர்படுபி அம்மானே நாஅன் செத்தே 97. nin a-nir ki-gar-ra நின் அந்நீர் கீழ் காரு 98. ma-a-nir-ra-zu ki-kur-ra he-bi-in-tag மாஅ அந்நீர ஜுவ கீழ் கூற்ற ஏ பீயின் தங்கு 99. sir-ku-ga-ke-es i-ug-ge-de-es சீர் கோகக்கேயிசு ஈ உக்கிடுயிசு குறிப்பு 92. ki-zi-sa-gal-la-ka> கீழ்ஜீ சால் கால்லகம்: உயிர்கள் செவ்வே வாழுமிடம்; -ka> அகம்; gal> கால்: நிற்றல், நிலைத்தல். a-na-me-en> என்னமன்?, ஒன்றுமில்லை என்றவாறு; a-na> என்ன? வினாவின் பெயர், இஇன்றும் பழகுவது 93. ki-bala>கீழ்பால்ல> கீழ்பார: பிரிந்து செல்வோர்; hul-gig> ஒல் கைக்கு> சிறுமதியர்; ஒல்லியோர் ; si-mu> சீமு>சீவு : தலையை சீவி எறிந்து அழித்தல் 94 si-il-le> சில்லே: சில்லுதல்: வெட்டி வெட்டி சிலைத்தல் 95. nam ha-ba-da-ku-de> நாஅம் அவன்ட கோடே: கோடுதல்: வளைத்தல்; இஇங்கு நாஅம் என்னும் விதியை மாற்றுதல் 96. dumu-ir-pa-da-bi> தமு ஈர்பாடுபி அல்லது தமு ஈர் படுபி: கண்ணீர் விட்டு அழுகின்ற சிசு; ama-ne> அம்மானே> அம்மாவால்; sed-de> செத்தே> சாந்தி படுத்தல்; "சாந்தி " "சாது " போன்ற சொற்களைக் காண்க 97. a-nir> அந்நீர்: "அன்" இங்கு மிகுதி பொருட்டு; ஒப்பாரி வைத்துஅழுதல் போலும் 98. ma> மாஅ> மரம்: இங்கு மரத்தால் ஆகிய கப்பல்; ki-kur-ra> கீழ் கூற்ற: எமலோகம்; tag> தங்கு 99 i- ug-ge-de-es> ஈ உக்கிடுயிசு: "ஈ" இங்கு சுட்டு; உக்கல்> சிதைந்து அழிதல்
|