முதற் சங்கத் தமிழ் : ஈனன்னை சீர்பியம்; அறிமுகம்

மரபு விக்கி இருந்து

Ulagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:30, 24 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சுமேருத் தமிழ்: ஈனன்னை சீர்பியம்
தமிழ் உரையும் விளக்கமும் : முனைவர் கி. லோகநாதன்

The Exaltations of Innana

by Enhudu Anna


அன்பர்களே,

சுமேரு மொழி தமிழே என்று நான் அறிய வந்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீப காலத்தில் ஜெர்மனி டாக்டர் கண்ணன் அவர்கள் என்னை சந்தித்த போது இக்கருத்து இப்பொழுது மெதுவாக பல அறிஞர்களிடையே பரவி வருகின்றது என்று சொன்னார். அதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்களாக்கும் இக்கருத்து என்பதால் அதற்கு மறைமுக எதிர்ப்பு இருக்கலாமோ என்றும் படுகின்றது. ஆயினும் இத்தகைய அச்சம் தேவை இல்லை. தமிழர்களின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா அல்லது ஆப்பிரிக்கா தமிழகம்என தென்கிழக்காசிய நாடுகளோடு தொடர்புறிருந்த குமரிக் கண்டமே என நினைக்கின்றேன். ஆக குமரிக் கண்ட கருத்து சுமேருத்தமிழ் இலக்கியங்களிலும் இருக்க இன்னும் பல வலுவான புதுச் சான்றுகளை இவ்விலக்கியங்கள் தரலாம். பண்டைய ஈராக் நாடே இங்கு சுமேர் என்று சுட்டப்படுவதோடு குமரி என்றும் கௌரி என்றும் கூறபப்டுகின்றது. இதுவும் கடல்கோள் கொண்ட குமரியின் நினைவாக இருக்கலாம். அங்கு தமிழ் பேசிய மக்கள் குடியேறிகளாகவே வந்தனர் என்பது தெளிவாகிட, அவர்கள் தமிழ் இலக்கியங்கள் கூறும் குமரிக் கண்டத்திலிருந்து வந்திருக்கலாம் என்றே நினைகின்றேன்.

ஆயினும் அது அவ்வாறு இருக்க சுமேருத் தமிழ் ஆய்விற்கு ஓர் விடிவுகாலம் பிறக்கும் என்ற கருத்தில் தொடக்கத்திலிருந்தே நான் படித்து வரும் மிக அற்புதமான தெய்வீகப்பாடலாகிய ஏண் உடு அன்னா எனும் அம்மையாரின் ' ஈனன்னை சீர்பியம்" என்ற இப்பாடலை தமிழ் படுத்தி சில குறிப்புக்களையும் தந்து ஓர் விருந்தாகப் படைக்கின்றேன். திராவிட பெருமக்களின் மெய்யறிவு வரலாற்றின் ஓர் உன்னத வளர்ச்சி¨ இந்த 153 வரிகளில் வடிக்கப்பட்டுள்ள இவ்வழகிய பாடலில் அன்பர்கள் காணலாம்.

இதன் மூலத்தை களிமண் வட்டுகளிலிருந்து தொகுத்து எழுத்துப்பெயர்ப்பு மொழி பெயர்ப்பு ஆகியவற்றை செய்தவர்கள் சுமேரு அறிஞர்களாகிய William W. Hallo என்பாரும் J.J. A. Van Dijk என்பாரும் ஆகும். இஇவர்கள் தமிழ் அறியாதவர்கள். மேலும் சுமேரு மொழியின் கோலெழுத்தினைத் புரிந்துகொள்வதில் இன்னும் குறைகள் இல்லாமல் இல்லை. சில குறைகளை நீக்கி தமிழ் படுத்தி இலக்கண குறிப்புக்கள், சொற்குறிப்புக்கள் போன்றவற்றோடு இதனை பதிப்பிற்குக் கொண்டு வருகின்றேன்.. பல குறைகள் இருக்கலாம் ஆயினும் எதிர்காலத்தில் தக்க அறிஞர்களால் இக்குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையில் இஇந்தப் பணியில் துணிகின்றேன்.

இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு. 2200 வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாக விளங்கியவர்கள். அவர்களைப் பற்றி ஓர் குறிப்பு இந்த நூலில் வருகின்றது.
"
For at or near the very beginning of classical Sumerian literature, we can now discern a corpus of poetry of the very first rank which not only reveals it's author's name , but delineates that author for us in autobiographical fashion. In the person of Enheduanna, we are confronted by a woman who was at once princess, priestess, and poetess , a personality who set standards in all three of her roles for many succeeding centuries, and whose merits were recognized, in singularly Mesopatamian fashion, long after"

Dr K.Loganathan, 2003

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2011, 06:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,531 முறைகள் அணுகப்பட்டது.