சித்தர் வழியில் காலாங்கி நாதர் 20

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:46, 22 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

காற்றையே உடலாக கொண்டவர் என்றும் காலைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால்

நெருங்க முடியாதவர் என்று காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு. காலங்கி நாதர் சித்தர்களில்

மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்

வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோகமுனிவர் இவரைப் பற்றி கூறியுள்ளார்.

யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசிபெற்ற

சம்பவங்கள் பலவுண்டு.


திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும்,

புயலும் வெள்ளமும் கரைபுரள் பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள்,

யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்

உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்ப காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டே

போனார்.


காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில்

மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கிய சென்று கொண்டிருந்த

காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!...

எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர்.


“சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.

வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரே

ஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினர்கள்.


அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார். அங்கு ஒரு பயங்கரமான புலி

படுத்துக்கிடப்பதை கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு

சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே

அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது.


காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை

மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வ

காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.

அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர்.


மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனித

முகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்கு

தவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?”

என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி. காலங்கி நாதர் அவரை

வணங்கி உபதேசம் பெற்றார்.


பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல

ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும்

திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி

ஆசிப்பெற்றார்.

சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,

குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களை

சந்தித்து அவர்களின் பேரருளைக் பெற்றார்.


அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி

மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான். தான் அவரைப் பார்க்க வந்த நோக்கத்தை

கூறினான்.

சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட வகார தைலக்கிணறு உண்டு.உலோகத்தை தங்கமாக

மாற்றும் தைல மூலிகை கிணறு.சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம் எனும் கிராமத்தில்

இறைபக்தியும்,திருப்பணி கைங்கர்யகளில் சிறந்த வாமதேவன், கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு

எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று ஆலயப்பணியை தொடந்தான்.ஆலயம் பாதிபாகம் கட்டி முடிவதற்குள்

பொருள் பற்றா குறையால் பணியை தொடர இயலவில்லை. பலரிடம் யாசித்தும் யாரும் உதவி புரியவில்லை.


சதுரகிரியில் தவம் புரிந்துக்கொண்டிருக்கும் காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு அவரை சந்திக்க சென்றான்.

நடந்தவற்றை கூறி நின்று போன சிவாலயப் பணி தொடர வழி செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி

நின்றான்.ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக இருந்தார். ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க

வேண்டும் என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து

வந்தான்.


வாமதேவன் உண்மையிலேயே ஆலயம் கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான் என்பதை உணர்ந்து

அவனது எண்ணத்தை நிறைவேற்ற நினைத்தார். மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை,

உதிர வேங்கை,ஜோதி விருட்சம்,கருநெல்லி முதலியவற்றாலும்,முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும்

முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார்.


அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களை தங்கம் உண்டாக்கினார்.'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட

உனக்கு எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து

கோயிலை கட்டி முடி போ என்றார்.காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த பொன்னை எடுத்துச் சென்ற

வணிகன் வாமதேவன் தன் விருப்படியே சிவாலாயம் கட்டி முடித்தான்.


அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி வழிந்து

கொண்டிருப்பதைப் பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர். பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றை கொண்டு மூடிவிட்டார்.

துஷ்டர்கள், பேராசைக்காரர்,வீணர்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,

நான்கு திசைகளுக்கும் வாரகி, காளி, பேச்சியம்மை, கருப்பண்ணன் ஆகிய தெய்வங்களை காவலுக்கு நியமித்து

நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.


[ தைலக் கிணறு சதுரகிரியில் இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி ஆலயத்தின் அருகில் இன்றும் காணலாம்.

கிணற்றின் மீது இரும்பு சட்டங்களால் மூடப்பட்டுள்ளது. இன்றும் சித்தர்கள் அங்கு உருவாகவும், அருவுருவாக

நடமாடுவதை பலரும் கண்டுள்ளனர். குறிப்பாக பெளர்ணமி காலங்கள் விசேஷம் ]


காலாங்கிநாதர் ககனகுளிகையின் உதவியோடு விண்வெளியாக சீன நாடு சென்று காலனுடைய அருள்

பெற்று சமாதி அடைந்தார். சீன நாட்டில் காலங்கி நாதர் சமாதி அடைந்திருந்த முக்காதக் கோட்டைக்குள்

நுழைந்து போகர் முனிவர் வணங்க சமாதியின் கதவு திறந்து ஒளிமயமாக காலாங்கிநாதர் போகருக்கு

தரிசனம் தந்தார்.


[துணை உதவி குறிப்பு:”இந்திய சித்தர்கள்’’ - சித்தர் பாடல்கள்,பதினென் சித்தர்கள்]


--Geetha Sambasivam 09:46, 22 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam