சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 6மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:19, 3 மார்ச் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் “ஸுமேரு – மத்ய- ஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர -நாயிகா!
“ரதகஜ துரக பதாதிகளுடன் கடல்
சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா
ஸ்ரீசக்ர ராஜ ரதத்திற்கொன்பது தட்டு
மந்த்ரிணி தேரிலும் ஸ்ரீசக்ரம்போலவே
பைரவியும்=பைரவரின் சக்தியான இவள் பார்த்தாலே அச்சம் தருபவளாயும், பஞ்சமியும், சதாசிவத்தின் சக்தியைப் பஞ்சமி என்பார்கள் இங்கே! இது ஐந்தாவது சக்தியான அனுகிரஹ சக்தியாகும். லலிதா சஹஸ்ரநாமம் இவளை, “பஞ்சமி, பஞ்சபூதேசீ பஞ்ச-ஸக்யோபசாரிணீ!” என்கிறது. வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி=சண்டிகா தேவி, கோபத்தோடு வந்து அசுரனை வதம் செய்தவள். “அபர்ணா, சண்டிகா, சண்டமுண்டாசுர நிஷூதனி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். அடுத்து காளி, கருநிறமுள்ள காளியை “மஹேச்வரி, மஹாகாளி” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும். கலா வைரவி மண்டலி =சூரிய, சந்திர மண்டலங்களில் வீற்றிருப்பதைக் குறிக்கும். மாலினி=அக்ஷரமாலையைச் சூடியவள், சூலினி=சூலத்தை ஆயுதமாகக் கொண்டவள், , வாராஹி, விஷ்ணு சக்தி வகையைச் சேர்ந்தவளான இவளை அம்பிகையின் அம்ச சக்திகளுள் தண்டினி என்னும் பெயரோடு அழைக்கப் படுவாள்.
இவ்வாறு அம்பிகை பல சக்திகளாய் விரிந்து நிறைந்து இருப்பதையே பட்டர்,
“வாராஹி தேரிலும் சக்திகள் இருக்கின்றார்
ஆலவட்டம் வெண்கத்திக்குடைகள் கொடிகள்-கொண்டு
தேவி யுத்தத்திற்கு வருகின்றதைக் கேட்டு
அடுத்து விநாயகர் உற்பத்தியும், விக்ன யந்திரம் அழிதலும் பார்க்கலாம்.
ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவ நெளஷதி:
ஈசன் காலாக்கினி ருத்ரனாகத் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தபோது அம்பிகையானவள் தன் குளிர்ந்த நோக்கால் சஞ்சீவனி மருந்து போலச் செயல்பட்டு மன்மதனைப் பிழைக்க வைத்தாள். அத்தகைய சஞ்சீவனி போலவே ருத்ரன் உலகங்களை எரிக்கும்போது எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியைத் தன் பார்வையால் கொடுத்து மன்மதனைப் பிழைக்க வைத்தது போல் அனைவரையும், உலகங்கள் அனைத்தையும் பிழைக்க வைக்கிறாள். ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தோடு அம்பிகையின் ஸ்வரூபமும் கலந்திருக்கின்றதாவது பூவிலே எப்படி மணம் சேர்ந்திருக்கிறதோ அவ்வாறு இருக்கிறதாம். பூவிலிருந்து சுகந்தத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ, அக்னியில் இருந்து பிரகாசத்தை எவ்வாறு பிரிக்க இயலாதோ அப்படியே ஈஸ்வரனையும் அம்பிகையையும் பிரிக்க இயலாது. இந்த அபூர்வ தம்பதிகளின் ஆநந்தமயமான பிரகாசமே அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் ஜீவாதாரமாய் விளங்குகிறது. இதையே லலிதா சஹஸ்ரநாமத்தில் வ்யோமகேசீ, விமானஸ்தா” என்று கூறுகின்றனர். இதை ஆகாச தத்துவம் எனவும் கூறுவர். அர்த்தநாரீச்வரரைக் குறிப்பதாயும் கூறுவார்கள்.
இதை பட்டர்
“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அதிசயமான வியப்பைத் தரும் திருவுருவை உடைய தேவி, அழகிய தாமரை மலர்களால் துதிக்கப்படும் அந்தத் தேவியே அந்தத் தாமரைக்கொடி போன்ற மெல்லிய உடலை உடைய அழகியவள், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய ஈசனைத் தன் வயம் இழுத்து அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டதை எங்கனம் சொல்லுவேன்? என்கிறார். மேலும், அந்த வாமபாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்து ஒன்றி இருக்கும் கோலமும், நம் உள்ளத்துள்ளே உள்ள ஆணவத்தைப் போக்கி நம்மைத் தடுத்தாட்கொள்ளுகிறதாம். அதுவும் எப்போது?? “வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே!” என்கிறார்.
“வவ்விய பாகத்திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
காலன் வந்து நம் உயிரைக்கொள்ளும்பொருட்டு வரும்போது அம்பிகையின் தரிசனம் வேண்டிப் பிரார்த்திக்கொள்ளவேண்டும் என்கிறார் பட்டர். இனி லலிதையின் சேனை எவ்வாறு யுத்தம் செய்தது என்று பார்ப்போம். “பண்டஸைந்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா!
“விதவித சர்ப்பங்கள் விஷத்தைக் கக்கிக்கொண்டு
இதைக் கண்ட பண்டாசுரன் தன் ஏழு பிலாஸ்கார் மந்திரி ராணுவத்தை அனுப்பி சூரியனையும் மிகவும் வருத்தித் தன் வரத்தாலே அம்மன் சேனையை ஸ்தம்பிக்க வைத்தான். அப்போது தண்டினி முன்னால் ஓடோடி வந்து மந்திரிகளின் கண்களைக் குருடாக்கி அனைவரின் தலைகளையும் கொய்து மாலையாகப் போட்டுக்கொள்கிறாள். பண்டாசுரன் தன் சகோதரர்களோடு கலந்து ஆலோசித்துவிட்டுக் குடிலாக்ஷனை மேலும் சேனைகளோடு அனுப்பி லலிதையை உயிரோடு பிடித்துக்கொண்டு வரச் சொல்கிறான். தேரைச் சுற்றி வளைத்துக்கொண்ட குடிலாக்ஷனின் கொடுமையால் சக்திகள் தேவியிடம் முறையிடுகின்றனர். அப்போது,
“பின்னே கள்ளர் வந்து செய்யுங் கலகத்தைப்
அன்னையின் கோபத்தைக் கண்ட பதினைந்து காமேச்வர சக்திகள் அசுரனைக் கொல்ல அம்மனால் அனுப்பப் பட்டனர். ஜ்வாலா மாலினி முதல் பதினைந்து அசுரர்களையும் கொன்றழிக்க, குடிலாக்ஷனை வாராஹி துரத்துகிறாள். பின்னர் ஜ்வாலா மாலினியின் உதவியோடு அக்னிக் கோட்டையை நிர்மாணம் செய்து சக்திகள் அனைவரோடும் அம்பிகை உள்ளே இருக்கின்றாள்.
“குடிலாக்ஷனையும் துரத்தினாள் வாராஹி
முப்பது யோஜனை உயரமுள்ள கோட்டை
இப்போது பாலா திரிபுரசுந்தரியை அனுப்புகிறாள் தேவி. தண்டினியும், மந்த்ரிணியும் துணைக்கு வர, சின்னஞ்சிறு பெண்ணான பாலா கண்டித ரதத்தில் ஏறிக்கொண்டு போருக்குப் போகிறாள். பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா!” என மேலே கூறியுள்ள படிக்கு பண்டாசுரனின் புத்திரர்களையும், கூட வந்த அசுரர்களையும் பாலா திரிபுர சுந்தரி அழிக்கிறாள். அதைக் கேள்விப் பட்ட பண்டாசுரன் கொடிய அசுரன் ஆன விசுக்கிரனை அனுப்பி விக்ன யந்திரம் செய்யச் சொல்கின்றான்.
“பாலாதேவி கையால் பிள்ளைகள் மாண்டதைப்
யந்திரத்தால் சக்திகள் புத்தி மயங்கியே
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா!
அம்பாள் தன் பார்வையைக் காமேச்வரர் பக்கம் திருப்ப, அம்பாளின் மறுபாதியான ஈசனும் அம்பிகையின் எண்ணம் தெரிந்து விக்னேஸ்வரரை அவதரிக்க வைக்கிறார். விக்னேஸ்வரர் வந்து தன் கொம்பாலே விக்ன யந்திரத்தைப் பொடிப் பொடியாக்கி நிர்மூலமாக்கி அம்பாள் மனதைக் குளிர வைக்கிறார்.
அடுத்து பண்டாசுரனின் சகோதரர்கள் வதமும், பண்டாசுரன் யுத்தம் செய்தலும். ஒரு யோஜனை என்பது கிட்டத் தட்ட பனிரண்டு, அல்லது பதின்மூன்று மைல்களைக் குறிக்கும்.
கூடிய வரைக்கும் ரொம்பவே எளிமையான வார்த்தைகளாய்ப் போட்டே விளக்கம் சொல்கிறேன். தத்வார்த்தமான விளக்கத்துக்கு எல்லாம் போகலை! ஆகவே புரியலைனா சொல்லிடுங்க. :))))))) --Geetha Sambasivam 11:03, 3 மார்ச் 2011 (UTC) |



