சிங்கப்பூரில் தமிழ்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:19, 22 பெப்ரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
சிங்கப்பூரில் தமிழ்
சீனர்களைப் போல தமிழர்களும் சிங்கப்பூரின் வந்தேறிகள் தாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் திட்டமிட்ட படி நவீன சிங்கப்பூர் நகரம் உருவாக ஆரம்பித்த நேரம். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து தமிழர்களை பல்வேறு வேலைகளுக்கு என்று கப்பலில் கூட்டி வந்தனர். பெரும்பாலும் சாலை அமைக்கும் பணியைப்போலக் கடினவேலைகளுக்கு என்று சொல்லலாம். இதில் ஆங்கிலேய ஆட்சியில் 'குற்றவாளிகள்' என்று சிறைபடுத்தப் பட்டோரும் அதிகம். தண்டனையின் ஒரு பகுதியாக தீவின் காடுகளை அழித்து அப்புறப்படுத்தி, சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். சிலருக்கு இது தவிர, தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சி காரணமாக பிழைப்பு தேடிய சில தமிழர்களை சிங்கப்பூர் இழுத்தது. வேலையும் வணிகமும் செய்தனர் இவர்கள். காவல்துறையிலும் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்படியெல்லாம் வந்தவர்களின் சந்ததியினர் தான் இன்றைய சிங்கப்பூர் தமிழர்களின் பெரும்பகுதியினர். இதில் இஸ்லாமியர்களும் அடங்குவர். இன்றைய வளர்ச்சியடைந்த சிங்கப்பூரின் செழுமைக்கு தமிழர்களின் பங்கும் உண்டு என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். பல்வேறு துறைகளில் வெற்றி கண்ட முன்னோர்கள் பலர் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். காட்டாக, ஏழ்மை நிலையிலிருந்து உழைத்து தற்போது தமிழர்களாகிய நமக்குப் பெருமை சேர்ப்பவர் சிங்கப்பூரின் அதிபர் திரு. எஸ். ஆர். நாதன். இன்றும் சில துறைகளில் பல தமிழர்கள் சமீப சதாப்தங்களில் சிங்கப்பூரில் உயர் பதவிகளுக்கு தமிழகப் பொதுவாகப் பார்த்தால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் சிங்கப்பூரில் அதிக பரதம், கர்நாடக இசை ஆகிய நூண்கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகளான, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், ந்ருத்யாலயா ஈஸ்தெடிக்ஸ் சொஸைட்டி, டெம்பிள் ஆ•ப் •பைன் ஆர்ட்ஸ், ஷ்யாமாஸ், ஆலாபனா போன்ற இசைப்பள்ளிகள் செவ்வனே இயங்கி வருகின்றன. மாணவர்களுக்குப் போட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதன் மூலம் கலை வளர உதவுகின்றனர். சிங்கப்பூரின் கல்வி அமைச்சு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் சான்றிதழ்களை அங்கீகரிக்கிறது. தமிழர்களிடையே பண்பாட்டுணர்வு இருந்தே வருகிறது எனலாம். இங்கு தமிழ்ப் பண்பாடு என்பது தைப்பூசம், தீபாவளி, தீபாவளியை முன்னிட்டு நடக்கும் தீமிதி போன்றவற்றினை அடையாளமாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழி இங்கு அரசாங்க மொழிகளுள் ஒன்று என்பதோடு, தீபாவளிக்கு இங்கு அரசு விடுமுறை. இன்னொரு நாள் அரசு விடுமுறை கிடைத்திருக்க வேண்டியது என்றும், தமிழர்களில் ஒருசிலர் தைப்பூசைத்தைத் தேர்ந்தெடுத்து, வேறு ஒரு குழு பொங்கல், தமிழ்ப் நாட்டின் பெரும்பான்மையிரான சீனர்களின் சிற்சில பழக்கவழக்கங்களை பொதுவாகவே தமிழர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிங்கப்பூரில் சுமார் 30 இந்துக் கோயில்கள் உண்டு. வழிபாட்டு முறைகள் 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் பேசும் சீன டாக்ஸி ஓட்டுனர்களைச் சந்திக்கவும் நேர்வதுண்டு. இந்து மதத்தைச் சாராத இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ தமிழர்களும் அவரவர் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டபடி தானிருக்கின்றன. சமயம் தாண்டி தமிழ் மொழியின் மூலம் இணையவும் செய்கிறார்கள். பொதுவாக தமிழிலக்கிய ஆர்வம் சிங்கப்பூரில் குறைந்துவிடவில்லை எனலாம். சுமார் 4-5 வருடங்களாக கடற்கரைக் 'கவிமாலை' என்ற ஒரு கூட்டம் இதே பாணியில் 'கவிச்சோலை' என்றொன்றும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்று இயங்கி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்துகிறது. இது தவிர, 'முத்தமிழ் விழா' வையும் நடத்துகிறது. இதில் வருடாவருடம் சின்னஞ்சிறார்களுக்கு மாறுவேடப் போட்டி, சிறார்களுக்கு கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி, உயர் நிலை மாணவர்களுக்கு கட்டுரை/கதை எழுதும் போட்டி என்று ஏற்பாடு செய்து வருகிறது. பொதுப்பிரிவில் சிறுகதைப் போட்டியும் நடைபெறும். சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ் நூல்கள் ஏராளமாய் இருக்கின்றன. வருடா வருடம் பெரிய தொகை ஒதுக்கப் படுகிறது தமிழ் நூல்களுக்கென்று. சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு ஆகப் பெரிய தொகையில் நூல்கள் வாங்குவது சிங்கப்பூர் தேசிய நூலகம் தான். அவ்வகையில் அரசாங்கம் தமிழ் வளரப் பெரிதும் உதவுகிறது என்றே சொல்லவேண்டும். மேலைநாட்டு நூலகங்களில் எங்குமே இல்லாத மிக மிக முக்கியமான ஒன்று சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் தமிழுக்கும் இடமிருப்பது தமிழர்களாகிய நாம் பேருவகைப் படக்கூடிய சிறப்பு. திரைப்பட வட்டுகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதல் புத்தகங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் தமிழும் இருக்கும்.நூலகத்தின் தமிழ்த் துறைக்கென்று தொகை ஒதுக்கப் பட்டு வருகிறது. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களைநூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்கிறது. நுலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இரவல் பெறுவது எண்ணிக்கையில் குறையும் போது தமிழுக்கு என்று ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதுவே தமிழ் ஆர்வலர்களின் மிகபெரிய கவலை. நூல்களை இரவல் பெறவென்று ஒரு பெருங்கூட்டம் எப்போதுமே உண்டு. ஆனால், புதிய வாசகர்கள் தான் உருவாவதில்லை. பொது மக்களிடையே தமிழில் நூலகத்தில் வாசித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு 'கதையும் காட்சியும்' என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிலிருந்து திரைக்குப் போன படைப்புக்களையும் படைப்பாளியையும் பற்றி அலசும். வட்டார சமீபத்தில் துவங்கப் பட்டிருக்கும் சிங்கப்பூரின் தமிழ் 'வாசகர் வட்டம்' இத்தைகைய அனைந்து முயற்சிகள் மிகவும் பயனுள்ளவை. இருப்பினும், ஏற்கனவே பங்கேற்போரை மட்டுமே மீண்டும் மீண்டும் கூட்டங்களில் காணமுடிவது தான் ஏற்பாட்டாளர்களின் முயற்சி முழுப்பயனைக் கொடுக்கவில்லையோ என்று யோசிக்கச் செய்துவிடுகிறது. புதிய வாசகர்களோ ஆய்வாளர்களோ உருவானால் முயற்சிகளினால் ஏற்படக்கூடிய பலன் மிகவும் உவகையளிக்கும். தேசிய கலைகள் மன்றத்துடன் தேசிய நூலகமும் இணைந்து நடத்தும் எழுத்தாளர் வாரம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகளை முன்னின்று தமிழ் நூல் வெளியீட்டு விழாக்கள், நூலாய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கின்றன. பெரும்பாலும் இந்நிகழ்வுகளுக்கு அனுமதி இலவசம். இருந்தாலும், வருகையாளர்களின் எண்ணிக்கை மட்டும் பூரிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்பதுதான் கொஞ்சம் வருந்தக்கூடியது. எல்லாமே மீண்டும் மீண்டும் பார்த்த முகங்கள். அதையும் தாண்டி நிகழ்வுகள் நடந்தபடிதான் இருக்கின்றன. வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் 'வாசிப்போம் சிங்கப்பூர்' என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இதற்காக மற்ற மொழிகளைப்போலவே தமிழிலும் 3 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல இவ்வாண்டின் (2006) 'வாசிப்போம் சிங்கப்பூர்' நிகழ்விற்கு அசோகமித்ரனின் 'ஒற்றன்', திலகவதியின் 'கல் மரம்' மற்றும் புதுமை தாசனின் 'உதிரிகள்' ஆகிய மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தேர்வு 'தங்களையும் யதார்த்த உண்மை நிலையையும் புரிந்து கொள்ளத் தூண்டும் வாழ்வனுபவங்கள்' என்ற அடிப்படையில் நடந்துள்ளது. வாசிப்பு அனுபவத்தின் வழியாகவும் அனுபவப் 'தமிழிலக்கியத்தைப் பற்றி பேசி, கலந்துரையாடி அதன் வழி தமிழின்பத்தைத் துய்த்தல்' எனும் ஒரே நோக்கத்தோடு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதமொரு முறை மிகச் சிறப்பாக இயங்கி வருவது இலக்கிய வட்டம். நிரந்தரமாய் பங்கெடுப்போர் பத்துபேரும், முடிந்தபோது வருவோர் பத்துபேரும் மட்டுமே கொண்ட இக்கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியங்களைக் குறித்து உரையாற்றுவர். சமயம் சார்ந்த இலக்கிய வகையென்றாலும், அதனைத் தமிழிலக்கியமாக மட்டுமே ரசித்து வருகின்றனர். கலந்துரையாடலும் உண்டு. இங்கு வரும் இலக்கிய ஆர்வலர் ஏமார்ந்துபோனதாய் தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி. சிங்கப்பூரிலில் தமிழின் அடையாளமாக விளங்கும் சில விஷயங்களாகும். ஒரே தமிழ் வானொலியில் படைப்பாளர்கள் நல்ல தமிழைக் கையாள்கிறார்கள். தொலைக் காட்சியில் தமிழின் பங்கு கிட்டத் தட்ட சிங்கப்பூரின் தமிழுக்கு இணையாகவே உள்ளது. செய்தி வாசிப்பில் மட்டும் தமிழ் சிறப்பாயுள்ளது எனலாம். தமிழர்கள் மட்டுமின்றி, பாலிவுட்டில் பெரும் ஆர்வம் கொண்ட வட எப்படி ஒரு ஆப்பிளை ஆரஞ்சோடு ஒப்பிட முடியாதோ அதுபோல தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஒப்பிடவே முடியாது. சிறிய நாட்டின் சிறுபான்மையினர் தமிழர். தமிழர்களிடையே நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமோ ஈடுபாடோ கொண்டவர்கள் தான் குறைவுதான். இலக்கிய உலகில் ஒருவரை ஒருவர் நிராகரித்தல் என்னும் தமிழகத்தின் தமிழிலக்கியக் கலாசாரம் இங்கும் உண்டு. சிங்கப்பூர் எழுத்தாளர் களிலேயே கூட தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவு. முழுநேர எழுத்தாளர்கள் பத்திரிகைகள் ஆரம்பித்தவர்கள் கையைச் சுட்டுக்கொண்டு போய்விட்டார்கள். திரு. கோ.சாரங்கபாணி அவர்களால் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முரசு இன்றும் நிலைத்து நின்று வருகிறது. வார இறுதியில் விற்கப்படும் தமிழ் நாளிதழின் எண்ணிக்கைகூட வாரநாளில் கிடையாதாம். இதனை வாங்குவோர் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளிகள். ஞாயிறுகளில் பதினாறு பக்கங்களும் மற்ற நாட்களில் சுமார் பத்து பக்கங்களும் கொண்ட நாளிதழில் கொஞ்சம் உள்ளூர் செய்திகள் தவிர மற்ற எல்லாமே முதல் நாள் சூரிய தொலைக்காட்சியில் வந்த தலைப்புச் செய்திகள் மற்ற இனத்தாரோடு குடிமக்களுக்கு இருக்கும் நட்புறவு தமிழ் சிங்கப்பூரில் தமிழிலக்கியம் பெரும்பாலும் அமைப்புகள் சார்ந்து பேச்சுத் தமிழை வளர்க்க கல்வி அமைச்சு பள்ளிகளில் தமிழ்மொழியில் பொதுவாக தங்கள் கருத்தே சிறந்தது, தங்களின் அறிதலே உயர்ந்தது என்று நினைக்கும் / நம்பும் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
(முற்றும்)
ஜெயந்தி சங்கர் தேதி -20 - 02 - 2011. |