சிண்டாமரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:29, 22 பெப்ரவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் சிண்டா
இந்தியர்களின் கல்வி தொடர்பான குழு (Action Committee on Indian இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சிண்டாவின் செயல்பாடு இரு கூறுகளைக் கொண்டதாக அமைகிறது. கல்வி மற்றும் குடும்பத்தில் துவங்கும் சமூகம். இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தான். அது மட்டுமின்றி இந்தியச் சமூகத்தினரிடையே குடும்ப ஒற்றுமையினை வலியுறுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு அடையச் செய்வது. சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்திற்கு ஏற்றாற்போல் சிண்டா சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தை கல்வியில் உயர்த்தி தன்னம்பிகையுள்ள ஒரு இனமாக மாற்றி, மற்ற இனத்தாருக்கு இணையாக வாழவைக்கும் உயர்ந்த நோக்குடன் செயல்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களை தேசிய சராசரி மதிப்பெண்கள் எடுக்கச் செய்தலும் குடும்ப அமைப்பை வலுப்படுத்துதலும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தலும் அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள். அதே நேரத்தில், மற்ற இனத்தாருடனான இணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தவும் தவறுவதில்லை. சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் முக்கிய தூண் சிண்டா என்றால் அது நிச்சயம் மிகையில்லை. இந்திய சமூகத்தை வளர்க்கும் அதே நேரத்தில் தானும் பிரமிக்கும் வளர்ச்சியடைந்து வருகிறது. துவக்கத்தில் ஒரு இனத்திற்காக உருவான அமைப்பு என்று எல்லோராலும் பார்க்கப்பட்ட சிண்டா, பத்து வருடங்களில் சுமார் 10% பிற இன தொண்டூழியர்களைப் பெற்று ஒரு சமூக அமைப்பு என்னும் தகுதியினை அடைந்து விட்டது. மற்ற சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து செயல் பட்டதன் மூலம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்த நினைக்கும் சிண்டா இன்று வரவேற்கத் தக்க வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் எல்லா இனத்தவருக்கும் வாய்ப்புக்களை உருவாக்குகிறது. திரு.பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு. எஸ். தனபாலன் சிண்டாவின் தலைவராக இருந்தார். தற்போது திரு. கே சண்முகம் தலைவராகச் செயல் படுகிறார். தலைமைத்துவம் மிகச் சிறப்பாக இருப்பதால் நோக்கங்கள் மாறி விடாமல், மிகவும் கவனமாகத் தனது சேவையை இந்திய மாணவர்களுக்குக் கொண்டு செல்கிறது சிண்டா. தோண்டூழியர்களை தேர்ந்தெடுப்பது, பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது பள்ளிப்படிப்பை நிறுத்தி விடும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும்பள்ளியில் சேரச் செய்தல், சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பள்ளிக்குப் போகிறார்களா என்று ஊழியர்கள் மூலம் கவனித்தல், முக்கிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்குதல், வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த கட்டண/இலவச துணைப்பாட வகுப்பு, வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு முதல் எட்டு வயதான அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு வாசித்தல், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு நூலகப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தல், சிண்டா துவங்கி பதிநான்காண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் புகுமுக, தொழிநுட்ப, தொழில் கல்வி மாணவர்களில் 225 மாணவர்கள் கல்வி விருது பெற்றனர். 2004 ஆண்டு நிலவரப்படி இந்திய மாணவர்கள் சிறப்பாக முன்னேறி வந்துள்ளார்கள். 2001ல் தொடக்கநிலைத் தேர்வில் கணிதப் பாடத்தில் 69 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2004ல் 74 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரி மதிப்பெண்ணை ஒப்பிடும் போதும் 2001ல் இருந்த 14 மதிப்பெண் வித்தியாசம் 2004ல் 9 மதிப்பெண்ணாகக் குறைந்து விட்டது. சிண்டாவின் செயல்பாடுகள் பெற்றோரின் ஒத்துழைப்போடு மாணவர்கள் தேர்வில் மேம்பாடடைய உதவ முடிகிறது. பள்ளி, குடும்பம் மற்றும் சமூகம் சேர்ந்து தொடர்ந்து செயல் படும்போது கிடைக்கக்கூடிய வெற்றி எத்தகையது என்பதை சிண்டா நிரூபித்துக் காட்டியுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குத் தனிக்கவனம் எடுத்து ஆலோசனை வழங்கவென்று வசதிகுறைந்த குடும்பங்களுடன் உறவாடும் சிண்டா ஊழியர்களில் சிலர் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள். அக்குடும்பங்களில் நல்லவித மாற்றங்கள் உருவாக உதவும் இவர்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறன்றன. தங்களுக்கு அமைந்துள்ள நல்வாழ்வை உணரத் துவங்கிவிட்டதாகவும் சில்லறை விஷயங்களுக்கு அதிருப்தியடையும் தங்களின் போக்கு முற்றிலும் மாறி விட்டதாகக் கூறுவதைக் கேட்லாம். அது மட்டுமில்லாமல் வேறு சிலர் மனதளவில் தாங்கள் மிகவும் பண்பட்டு விட்டதாகவும் சொல்வார்கள். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் ஏராளமான குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு சிண்டா பலகாரங்கள் அடங்கிய பொட்டலங்களை (hampers ) வினியோகிக்கிறது. இவ்வகையில் வசதி குறைந்த அக்குடும்பப் பிள்ளைகளுக்கு விழாக் காலங்களில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சந்தோசத்திற்கு சிண்டா பொறுப் பெடுத்துக் கொள்கிறது. வேலையில்லாததால் வருமானமின்மை, குடி, சண்டை, பிரிவு, இரண்டாம் மணம் என்று பல்வேறு காரணங்களினால் சிறார்கள் பாதிக்கப் படும் போது சிண்டா உடனடியாகச் செயல்படுகிறது. அத்தைகைய குடும்பங்களைக் கண்டறிந்து, வேலை வாய்ப்பு இருக்குமிடம் தேடி ஒரு பெற்றோருக்காவது வேலைக்கும் வருமானத்திற்கும் ஒழுங்கு செய்கிறது. தேவைப்பட்டால் குடும்பத்திற்கு உடனடித் தேவையான அரிசி, ரொட்டி போன்றவற்றை வீட்டிற்கே அனுப்புகிறது. சில குடும்பங்களுக்கு தொடர்ந்து இத்தகைய சேவையை இத்தகைய அரிய சேவைகளுக்கு சிண்டாவிற்கு பொருள் தேவையாக இருக்கிறது. பலர் நன்கொடையளிக்கிறனர். அரசாங்கமும் சிண்டாவிற்கு பொருளளித்து அதன் செயல்பாடுகளை மிகவும் ஊக்குவிக்கிறது. அண்மையில் பிரதமர் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு நிதி வழி கிடைக்கப் பெறும் $350,000 நிதியையும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு சிண்டா செலவிட உள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணினி இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்கு முந்தைய பாலர் வகுப்புகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களையும் சிண்டா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குடும்ப மேம்பாட்டில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான மாதர் நல திட்டம் ஒன்றையும் சென்ற ஆண்டு சிண்டா ஏற்பாடு செய்து நடத்தியது. சுமார் 130 பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர். கடந்த ஆண்டு அறிமுகத் திட்டமாகத் தொடங்கப் பட்ட இத்திட்டம் இந்த ஆண்டும் தொடரும் என்று சிண்டாவின் தலைவர் திரு கேசண்முகம் அறிவித்தார். பிள்ளைகளின் கல்வி என்பது மிக முக்கியம். அதற்கு குடும்பச் சூழல் என்பது மிக மிக அவசியம். குடும்ப மாதர்களுக்கு கல்வி உயர்வுக்கு அப்பாலும் இந்தியர்கள்சிந்திக்கசிண்டாஆக்கப்பூர்வமாக உயர்நிலைக் கல்விக்குப் பிறகு புகுமுக வகுப்பை (தொடக்கக் கல்லூரி) தேசிய அளவில் உயர்நிலைக்குப் பிறகு கல்வியைத் தொடராமல் விடும் மாணவர்கள் 10%. ஆனால், இந்திய மாணவர்களில் இப்பிரிவினர் 13%. இந்தப்பிரிவு மாணவர்கள் திடீரென்று படிப்பை நிறுத்தி விடாமல் தொழிற்கல்வி பெறும் போது அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். மேலும் அவனுக்குத் தன்னம்பிகை உருவாகும் என்பதால், தொழிற்கல்வி வலியுறுத்தப் பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பை மேற்கொண்டு தொடராமல் அப்படியே விட்டுவிடும் 16-17 வயது இளையர்கள் 800-1000 வெள்ளி வரை கிடைக்கக் கூடிய சம்பளத்தைக் கண்டு மயங்கி ஒரு சமூகத்தினை உயர்த்த நினைக்கும் நோக்கம் நிறைவேற மிகுந்த (முற்றும்)
ஜெயந்தி சங்கர் தேதி - 20 - 02 - 2011. |