அபிராமி அந்தாதி விளக்கவுரை 2மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:22, 31 ஜனவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் அடுத்த பாடலைப் படிப்பதற்கு முன்னர் சில துளிகள். அன்னையின் புகழ்பாடும் அபிராமி அந்தாதியைப் பற்றிய நமது இந்த மடல்களுக்கு
நம்மை அபிராமிப் பட்டர் என்று தவறாக விளித்த அன்பருக்கு...
மன்னிக்கவும். அபிராமிப் பட்டர் கொண்டிருந்த பக்தி கடலளவு என்றால் எமது பக்தி அதில் ஒரு துளி மட்டுமே... அவரது பக்தியின் ஒரு சிறு வெளிப்பாடுதான் அபிராமி அந்தாதி.. ஆனால் நமக்கோ அது மாபெரும் பொக்கிஷம். அவற்றை நான் சுவைத்த நோக்கில் மட்டுமே உங்களுக்குத் தருகின்றேன்.. எனவே இத்தகைய அழைப்பிற்கு வருந்துகிறேன்.
மேலும் ஒரு அன்பர் அந்தாதி பற்றி விளக்குங்களேன் என்று தனிமடலில் கேட்டிருந்தார். அந்தாதியின் விளக்கம் அச்சொல்லிலேயே நமக்குக் கிடைக்கின்றது. அந்தம்+ஆதி = அந்தாதி. அந்தாதிப் பாடல்களில் முதல் பாடலின் ஈற்றுச்சீர் மறு பாடலின் முதன்மை சீராக வரும். அப்படிப் பாடப் படும் பாடல்களில் இறுதிப் பாடலின் ஈற்றுச்சீர் முதல் பாடலின் முதற்சீராக அமைந்திருக்கும். தமிழிலக்கியத்தில் அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பன் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, அருணகிரி நாதரின் கந்தரந்தாதி போன்றவை முக்கியமானவை. இவற்றுள் கம்பனின் சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் மேலே நான் குறிப்பிட்ட நடையில் உள்ளன. ஆனால் அருணகிரியின் கந்தரந்தாதியோ வேறு நடையில் உள்ளது. ஒரு பாடலின் நான்கு அடிகளுக்கும் முதற்சீர் பொதுச்சீராக அமைந்துள்ளது.
அபிராமி அந்தாதி
பாடல் ஐந்து. பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே விளக்கம் : மூன்று நிலைகளிலும் பொருந்தியிருப்பவளே, புகழுரை செய்வதற்கேற்ற அழகுடன் கூடிய முலைகளும், அதன் பாரத்தால் வருந்துவது போன்ற மெல்லிய இடையும் கொண்ட மனோன்மணியே...நீண்ட சடையைக் கொண்ட சிவபெருமான் அன்று அருந்திய நஞ்சினை அமுதமாக்கிய அம்பிகையே... தாயே அபிராமியே... அழகிய தாமரை மலர் மீது மிக அழகாக அமர்ந்திருக்கும் தாயே... ஆதியும் அந்தமுமானவளே... உன் திருவடிகளை என் தலைமேல் ஏற்கிறேன்...
எத்தனை அழகிய வரிகள் காணுங்கள்...
முப்புரைக்கும் பொருந்தியவள்... என்ற சீர்களைக் காணுமிடத்து... எம்முப்புரை எனும் வினா எழுகிறது... எல்லாவற்றையும் நாம் அதிக இடங்களில் மூன்றாகக் காண்கிறோம்.. பிரம்மா, திருமால்., சிவன் ஆகிய மும்மூர்த்திகள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர்கள், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்கள், கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்கள். இவ்வாறு பல மூன்று நிலைகளைக் காண்கிறோம்... இதில் அம்மை அபிராமி எம்மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள்...??? அபிராமிப் பட்டருக்கு மட்டுமல்ல... நமக்கும் தெரிந்த உண்மை அதுதான்... அன்னை அபிராமி எல்லா மூன்று நிலைகளுக்கும்
"செப்புரை செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி.." புகழ்ந்து பாடக்கூடிய அழகுடன் கூடிய முலைகளின் பாரத்தால் வருந்தும் மெல்லிய இடையைக் கொண்ட மனோன்மணித் தாயே... என்பது இதன் பொருள்... ஒருமுறை நமது நண்பர்
"வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை" கடந்த பாடல்களிலும் சரி இந்தப் பாடலிலும் சரி அபிராமிப் பட்டர் சிவபெருமானை நினைத்தருள அவரது நீண்ட சடைகளை நினைவு படுத்துகிறார். நீண்ட சடைமீது அவருக்கிருந்த காதலோ..?? அமரர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவால் அவர்கள் கடைந்த பாற்கடலில் இருந்து நஞ்சு வெளிப்பட்டதல்லவா?? அவ்வமயம் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது.. அந்தக் கொடிய நஞ்சின் வலிமையை யாராலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.. அனைவரும் கயிலை சென்று அப்பனை வழிபட்டனர். பக்தர்கள் குறை கண்டு பொறுப்பாரா ஈசன்? உடனே எழுந்து அந்நஞ்சைத் தம் கைகளில் எடுத்துக் குடித்து
"அம்புயமேல் திருந்திய சுந்தரி" நீரில் மீது காணப்படும் அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் சுந்தரியே... பேரழகியே.... தான் ... பாடல் ஏழு ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே விளக்கம் : தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், திங்களைத் தன் சடையில் அணிந்திருக்கும் உனக்கன்பான சிவனும், திருமாலும் என்றும் வணங்கித் துதிக்கும் சிவந்த பாதங்களைக் கொண்ட செந்தூரம் அணிந்த பேரழகியே, மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழலும் தயிரைப் போல் எனது உயிரும் பிறப்பு, இறப்பு என்னும் வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுத் துன்புறுகிறது. தளர்வுறுகிறது. அப்படித்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி... இப்பதத்திற்குப் பல்வேறு பொருள் கொள்ளலாம். நான் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அபிராமிப் பட்டர் எண்ணியிருக்கலாமோ என்று எண்ணி இவ்விடம் விளக்கமளித்துள்ளேன்.. வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அன்னையின் தியானத்தில் மூழ்கி இன்பமெய்து வந்த அபிராமிப் பட்டர் சரபோசியின் அதிகாரத்தால் துன்பங்கொள்ள நேர்ந்தது. அச்சமயம் அன்னையை வரவழைத்து உண்மையை நிரூபிப்பதற்காக எழுந்த பாடல்களல்லவா அபிராமி அந்தாதி..? இதே நாளில் காலையில் உன்னை எண்ணி, தியானித்து, தரிசனம் செய்து மகிழ்வடைந்திருந்தேன்.. இப்போது பார் துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்.. என்றும் பொருள் கொள்ளலாம். என் ஆவி, என் மனது தளர்ச்சியடையாத ஒரு கதியை எனக்குத் தந்தருள்தாயே... வெளிப்படு... உன்னை எண்ணி நான் மனம் மகிழ்ந்திருந்த வேளையில் நான் அளித்த ஒரு பதிலால் எனக்கேற்பட்ட இழுக்கினைப் போக்க ஓடிவா என்றும் அழைத்திருக்கலாம். பிரம்மன், திருமால், சிவன்
சரியப்பா.. பிரம்மன் அன்னையை வழிபடட்டும். அவள் அண்ணன் திருமால் அவளை வணங்கட்டும். அதென்ன அவளது கணவன் சிவன் அவளை வணங்குவது??? இது எப்படியாகும்?? என்ற ஒரு வினா இவ்விடத்து எழுகிறது... சக்தி வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கை
பாடல் எட்டு சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே*
விளக்கம்..
கடந்த பாடலில் சிவன் வந்து வணங்கும் சேவடிகளைக் கொண்ட அபிராமியே என்று விளிக்கும் அபிராமிப் பட்டர், இப்பாடலில் நீ என் தந்தையின் துணையாக நிற்கிறாய் என்று போற்றுகின்றார். பேரழகு கொண்டு என் தந்தைக்குத் துணையாய் என்றென்றும் நிற்பவளே... (மனைவி வேறு துணைவி வேறு அல்ல என்பதை இவ்விடத்து நினைவிற்கொள்க...இருவரும் ஒருவரே....) நீ என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி.... இங்கே பார் இந்த உலகம் துன்பமயமானது... இத்துன்பங்களுக்குக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்துபார்த்தேன் தாயே... நான் உலகம் மீது கொண்ட பற்றும் பாசமும் தொடர்வதால்தான் துன்பம் என்னைத் தொடர்கிறது.. தாயே நீ வந்து என் துன்பங்களையெல்லாம் வேறோடு அறுத்துவிடு... செந்தூரத் திலகம் அணிந்தவளே... செந்தூர வண்னங்கொண்டவளே.... எழுதியது திரு மு.கந்தசாமி நாகராஜன்--Geetha Sambasivam 09:15, 31 ஜனவரி 2011 (UTC) |


