பாசுர மடல் 004 : ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:48, 28 ஜனவரி 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை
புண்ணிய வைணவ தலங்களெல்லாம் சாதாரண தமிழனால் பயணிக்க முடியாத தொலை தூரத்தில் இருந்தன. பொய்கை ஆழ்வார் காலத்தில் பத்ரி, அயோத்தி, பிருந்தாவனம் என்று சில தலங்கள் வட நாட்டில் இருந்தன. "திருவெஃகா" என்றொரு தலத்தைப் பாடுகிறார். அவர் பிறந்த ஊர். இதற்கு முன் அதற்கு புண்ணிய அந்தஸ்து கிடையாது. உருவாக்குகிறார். கண்ணன் புவனசுந்தரன் என்று இருக்கும் போது கண்ணன் எங்கெல்லாம் உண்டோ அதெல்லாம் பிருந்தாவனம் என்கிறார். இப்படி இவர்கள் பாடிய தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதை வைணவர்கள், "மங்களாசாசனம்" பெற்ற திருத்தலங்கள் என்று போற்றுகிறார்கள். வைணவ திருத்தலங்கள் 108-ல் முக்கால்வாசி தமிழகத்தில் இருப்பது தற்செயலாக நடந்தது அல்ல. இதே போல் நாயன்மார்களும் தலம் சென்று பாடுகிறார்கள். அப்பர் திருப்பூவணத்தாண்டகத்தில், பூவணநாதனை இப்படிப் போற்றுகிறார்.-
வடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும்
.
தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும் (மூன்றாம் திருவந்தாதி-பேயாழ்வார்)
சடைமுடியும், கையில் மழுவும், கழுத்தில் பாம்புமாக திருவேங்கடத்தான் இவருக்குத் தெரிகிறான் அப்படியே இருந்தால் தேவலை மீண்டும் பார்க்கும் போது நீண்ட முடியும், கையில் சக்கரமும், பொன்னால் செய்த ஆபரணங்கள் தரித்த திருமாலாகத் தோற்றம் தருகிறான்.. பண்டைத் தெய்வங்களும், மரபுகளும், நம்பிக்கைகளும் கையோடு கைகோர்த்து இளநடை பழகும் காட்சி இப்பாசுரத்தில் அற்புதமாய் வந்து நிற்கின்றன. திருவேங்கடத்தான் இப்படியெனில் தில்லைக் கூத்தன் எப்படி இருக்கிறான் என்கிறீர்கள்?
இடம் மால் வலம்தான்; இடப்பால் துழாய் (பொன்வண்ணத்தந்தாதி-சேரமான் பெருமாள் நாயனார்)
இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து.....
நா.கண்ணன்.. Date: Thu, 04 Sep 1997 09:32:20 +0000 |

