பாசுர மடல் 093 : உலகின் தோற்றமும் மழையுயிர் காத்தலும் .மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:15, 7 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
உலகின் தோற்றமும் மழையுயிர் காத்தலும் .
இம்மடலில் நீங்கள் காணும் பாசுரங்களைப் பார்த்தால் நம்மாழ்வார் ஏதோவொரு தெய்வத்தைப் பற்றி பேசுகிறார் என்பதை விட இவ்வண்டத்தின் தோற்றத்தையும், அதன் காத்தலையும், அதன் இயக்க நியதிகளையும் பற்றித்தான் பேசுகிறார் என்பது புரியும் . இத்துணை செயல்களுக்கும் காரணமான ஒன்றைக்கண்டு கொண்ட ஆனந்தத்தில் அந்த ஒன்றை முதன்மைப் படுத்திப் பேசுவதுபுரியும். இதே ஆனந்தத்தை திருமூலத்திலும், வள்ளலாரின் பாடல்களிலும், பாரதியின் பாடல்களிலும் காணலாம்.
அன்றுமண் நீர் எரி கால்விண் மலைமுதல்,
அன்று, அன்று என்று நான்கு முறை சொல்கிறார். என்று? என்ற கேள்வி வருகிறது. அதற்கு வேறொரு பாடலில் விடை தருகிறார்.
"பெயர் வடிவங்களை இழந்து, "சத் ஒன்றே" இருந்தது என்கிற நிலையிலே, "பலபொருள் ஆகக் கடவேன் (பஹஸ்யாம் என்பது சாந்தோபநிஷத் 6.2:3)" என்று நினைத்த (சங்கல்பித்த) அன்று முதல்" என்று சொல்கிறது ஈடு.
எனவேதான் இறைவனை "முதல் வித்து" என்று மெய்ஞானிகள் சொல்கின்றனர். அவன்தான் காரணன். அவன் ஒருவனே.
தானோ ருருவே தனிவித்தாய்த்
அதாவது அண்டம் வெடித்த பின்னும் கிரகங்கள் தோன்றிக் கொண்டும், அழிந்து கொண்டும் இருப்பதை "ஹப்பில் வான் நோக்கி" படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதைத்தான் அவர்கள் உருவகப் படுத்திச் சொல்கின்றனர்.
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
எல்லாம் ஒன்றிலிருந்து வந்ததால் எல்லாச் செயல்களும் அவன் செயல்களாகவே ஆகின்றது. வேதியியல் சேர்க்கைகள் போல் இவனொரு சேர்க்கை செய்து மற்றவர்களைத் தோற்றுவித்தான் என்கிறார் நம்மாழ்வார்.
நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,
இவனே காரணம், கிரிசை மற்றும் கருமம் இவையெல்லாம். ஏழுலுகிற்கும், அதாவது பல்வேறு விண் மண்டலங்களுக்கும், இவனே நாதன். இவனைப்பற்றிப் பேசுவதால் வேதம் சிறப்புறுகிறது.
நம்மாழ்வார் ஒரு இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பது கீழ்வரும் பாடல்களில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இது ஒழிவொன்றுமில்லாத ஒரு செயல் என்பதும், ஊழி தோறும் படைத்து, காத்து, கெடுத்து உழல்கின்ற செயல் என்றும் சுட்டுகிறார்.
ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவ,போம்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும்
அவனே அகல் ஞாலம்படைத் திடந்தான்,
இப்படி அவனே யவனும் அவனும் அவனும், அவனே மற்றெல்லாம் என்று அறிதல் ஒரு ஞானம். ஒரு தெளிவு. ஒரு காட்சி. ஒரு புரிதல். அதற்கு இட்டுச் செல்வதுதான் அறிவு. அதனால்தான் முதல் பாடலிலே நம்மாழ்வார் "மயர்வு அற்ற மதி நலத்தை" நல்கிய"அவனை"த் தொழுது ஏத்துகிறார்.
நா.கண்ணன்.
|