பகுப்பு:கோயில்கள்மரபு விக்கி இருந்துThamizthenee (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:56, 5 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் திருமுல்லை வாயில் தலபுராணம்
சென்னையில் உள்ள அம்பத்தூரை அடுத்து இருக்கும் திருமுல்லை வாயிலில் மாசிலாமணீஸ்வரர் கொடியிடை நாயகி கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் உள்ள விசேஷங்கள்:- கோபுர வாயிலில் உள்ளே நுழைந்தவுடன் எதிரே வினாயகப் பெருமான் கட்சி தருவார். நந்தி மாசிலாமணீஸ்வரர் சன்னிதியில் ஈசனுக்கு எதிர்ப்புறம் நோக்கி இருக்கும். அந்த நந்தி அருகே ஒரு முல்லைக் கொடி படர்ந்து இருக்கும். முல்லைக்கொடி அருகே விளக்கேற்றி வழிபடுவர். மாசிலாமணீஸ்வரர் சன்னிதியில் முன்னால் இரு பெரிய வெள்ளெருக்கு மரம் கட்டிப்பிடிக்க முடியாத அளவு பருமனாக இருக்கும். இந்த வெள்ளெருக்கு மரத்தைக் கட்டிப்பிடித்து வேண்டுதல் செய்தால் அப்படியே பலிக்கும் என்று கூறுவர். இந்தக் கோயிலின் தல புராணத்தை ஒட்டியே அந்த ஊருக்கு திரு முல்லைவாயில் என்று பெயர் வரக் காரணம். தாயார் பெயர் கொடியிடை நாயகி, பௌர்ணமி நன்நாளில் வெள்ளிக்கிழமையாகவும் அமைந்தால் இந்த தலத்தில் இருக்கும் கொடியிடை நாயகியையும், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை நாயகியையும், , மேலூரில் உள்ள திருவுடை நாயகியையும் ஒரு சேர தரிசித்தால் பெரும் புண்ணியம் என்பது வழக்கம். இங்கும் இறைவன் தி்ரு மேனியில் லிங்கத்தில் வெட்டுண்ட வடு தெரிவதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இருக்கும். வருடத்தில் ஒரு நாள் ,அல்லது ஆருத்ரா தரி்சனம் போன்ற நாட்களில் மட்டும் சந்தனம் நீக்கி இருக்கும் கோலத்தைக் காண முடியும் என்னும் இவ்வூர்ப்பதிகம் பத்தாம் திருப்பாடலின் அடிகளால் அறியக் கிடக்கின்றது, இத்தலம் முருகப் பெருமானால் பூசிக்கப்பட்டது. சோழன், காமதேனு, வசிட்டர் இவர்கள் வழிபட்டுள்ளனர். சுவாமி சந்நிதியில் இரண்டு எருக்கந் தூண்கள் இருக்கின்றன.
கல்வெட்டு: See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904, No. 662- 684.) இவ்வகையில் தற்போது ஊடகங்கள் யாதும் இல்லை. |