பாசுர மடல் 085 : கண்ணன் கள்வன்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:49, 4 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
கண்ணன் கள்வன்.
மேலை நாட்டில் வாழும் நம்மில் பலருக்கு குளிர் பழகிப் போய்விட்டது. குத்தும் பனியிலிருந்து கொடூரப் பனி வரை எல்லாம் நண்பர்களே! ஆனால்,இந்தியாவில் அப்படியல்ல. தாரை உருக்கி, உடலை உருக்கி முடிந்தால் கல்லையும் உருக்கும் வெயில். இப்போது பனிக்காலங்கள் வந்து போவது கூடத்தெரிவதில்லை அங்கு. நண்பர் நா.விச்வநாதன் எழுதுவார், "இந்தமுறை குளிர்அதிகம், சட்டை போடும் படி ஆகிவிட்டது!" என்று :-) நாம் இங்கு ஐம்பதுகிலோ உடை என்ற கவசத்துடன் அலைவது அவருக்குத் தெரியாது :-))ஆனால், மாதம் மும்மாரி பொழிந்த காலத்தில் வாடையும் இருந்தது அம்மாநிலத்தே! வாடை என்றால் எப்படிப் பட்ட வாடை, "அம்பைக்காய்ச்சி அழுத்த உடலினில் எறிவது" போன்ற வாடை. இந்த வாடைக்காலத்தில் எரியூட்டி அமர்ந்து மகிழும் போது காதலனும் உடனிருந்தால் கதகதப்பிற்கு கூடுதல் ருசி! ஆனால் காதலன் இல்லாதபோது?
நம் பண்டைப் பழமையின் சித்திரமே போல் அமைவன இப்பாடல்களே.அன்றைய இலக்கியம் இல்லையேல் நம் சரித்திரமே இல்லை என்பது கண்கூடு. தண்ணென்று இருக்க வேண்டிய வாடை "எரிகிறது"! இந்த எரிச்சல்குறுகிய பொழுதாகவாவது அமைகிறதோ, அது "நெடு நல் வாடையாக"அமைந்து விடுகிறது. வருகின்ற எறிவாடை தனியாக வரக்கூடாதோ? சீற்உற்ற அகிற்புகை, அதனுடன்வரும் இனிய வாடை, யாழ் நரம்பில் வரும் பஞ்சமம் பண்ணிசை, தண்ணென்ற பசுஞ்சாந்து நறுமணம், மல்லிகையின் கொல்லும் மணம் இவையெல்லாம் கூட்டணி அமைத்துக் கொண்டு வருகின்றனவாம். எப்படி இருக்கும் நம் பாராங்குசநாயகிக்கு? அவளோ அடிபட்டு போயிருக்கிறாள்!
தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே 'என்று சொல்லிவிட்டு,'வார்த்தை தவறி விட்டான். மேனி கொதிக்குத்தடீ,தலைசுற்றி வேதனை செய்யுதடீ! பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
சொன்னமொழிதவறு மன்னவனுக்கே-எங்கும்
ஆருக்கு சொல்லுவேன் அன்னை மீர்காள்!
கார் ஒக்கும் கண்ணன் கள்வன்! கார்கால மேகம் போன்று கருணைபொழிகின்ற கண்ணன். வானம் பார்த்த பூமிக்கு கண்ணடித்து பதில்சொல்லும் கார்கால மேகம் போன்ற கண்ணன்.
நிறத்தினிலே கருமைகொண்டான்;- பாராங்குச நாயகியோ மறக்குலப் பெண்
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
காலம் கடந்த பொருள் இறைமை என்பதற்கு அழகிய சாட்சிகள் நம் நம்மாழ்வாரும், பாரதியும். நம்மாழ்வாரின் மனோநிலையை வார்த்தைக்கு வார்த்தை படம் பிடிக்கிறான் எம் கவிக் குயில் பாரதி. நீவீர் வாழ்க.
கண்ணாமூச்சி ஏனடா என்று காதலனிடம் கேட்கத் தோன்றுகிறதா?
கிருஷ்ணப்பிரேமாம்ருதம்
நா.கண்ணன்.
Date - Mon., 10 July 2000 15.39.57 +0200 |


