பாசுர மடல் 084 : அவ்வருள் அல்லன் அருளும் அல்ல !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:22, 4 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
அவ்வருள் அல்லன் அருளும் அல்ல !
ஒன்றில் ஈடுபாடு வந்துவிட்டால், ஒன்றில் சுவை ஏற்பட்டுவிட்டால் பின்வேறொன்று கொடுத்து ஈடு செய்ய இயலாது. பாராங்குச நாயகிக்கு பிறந்ததிலிருந்து கன்னல் சுவை போன்ற கண்ணன் சுவை கண்டவள். பிள்ளைப் பிராயத்திலே அச்சுவையில் 16 வருடங்கள் உணவு, உறக்கம் இன்றி இருந்தவள். கண்ணனின் அருள் சுரக்கும் எளிமையைக் கவிதை செய்யப் போய் அவ்வரிகள் தந்த சுவையில் 6 மாதங்கள் நினைவற்று இலயித்தவள். இப்படி இறைமையை அனுபவித்தவளுக்கு மாற்றொன்று தர இயலுமோ? தரும் தகுதி யாருக்கு உண்டு? அதற்கு அதிகாரி யார்?
(திருவாய்மொழி 9.9.6)
அவனுடைய அருள் பெறுவது அரிதான காரியமாகிவிட்டது. முனிவர்களும்,யோகிகளும் நித்தம் தவம் செய்தும் அரிதாக உள்ளான். அப்படி அரிதாகக் கிடைப்பதாலே அவன் அருள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அவன் கோயில் வாசலிலே அடியாரும், வானவரும், அரம்பரையும் கிடக்கிறார். சுந்தரர், நெருங்கவிச் சாதரர், நூக்க இயக்கரும் மயங்கினர். அவன் அருள் கிடைக்கத்தான் ஏங்காத உள்ளமெது?
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
அவன் அருள் கிட்டும் வண்ணம் என்ன அருமை பெருமை உள்ளது என்னிடம்என்று வருந்துகிறார் வள்ளல் பெருமான்.
கற்குமுறை கற்றறியேன்; கற்பனகற் றறிந்த மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன்றறியேன்
மரணமற்ற பெருவாழ்வு கண்ட வள்ளலார்க்கே அரிதாய் நின்று புலம்ப வைக்கும் அரி தா(ன்) அவன்!
அவனுடை அருள்பெறும் போது அரிதால் இச்சுவை கண்டபின் இந்திரலோகமாளும் அச்சுவை தரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே! கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து; இன்பரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்; எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவம் கிடைத்தால் போதாதோ!
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
சிவனொடு பிரமன்வண் திருமடந்தை அவன் திருத்தேகத்தில் சிவனொடு பிரம்மன் உள்ளான். வேறு நொக்கறியா திருமடந்தை உள்ளாள். சமயாதீதமாய் அத்துணை சமயங்களும், அத்துணை தெய்வங்களுமாய் அவன் உள்ளான். இப்படி என்னுள்ளம் கவர்ந்தானைக் காணாது தவிக்கும் எனக்கு புகுமிடம் இனி ஏது? நான் இனி என்செய்கேன்? யாரிடம் என்ன சொல்லுவேன்? அன்னைமீர்காள்
அன்னைமீர்காள் ஒருபதில் சொல்லுங்கள்!........
கிருஷ்ணபிரேமாமிர்தம்
Date - Sun., 09 July, 2000 14.06.49 +0200 |



