ஸப்த விடங்கத் தலங்கள் 4மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:55, 3 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
திருச்சிற்றம்பலம்ஸப்த விடங்கத் தலங்கள் 4திருமறைக்காடு இறைவர் பெயர்: வேதாரண்யேஸ்வரர், மறைக்காட்டு மணாளர். இறைவி பெயர்: யாழைப் பழித்த மொழியாள் தல மரம் : வன்னி தீர்த்தம்: வேத தீர்த்தம், கடல் துறை- மணிகர்ணிகை, தேவ பூஷணம் வழிபட்டோர்: வேதங்கள் - முசுகுந்தச் சக்கரவர்த்தி - அகத்தியர்- இராமர்- கங்கை- பிரமன் - நாரதர்- வசிஷ்டர் - விசுவாமித்திரர்- கெளதமர்- காவிரி தேவாரப் பாடல்கள்:சம்பந்தர்: 1.சிலைதனை நடுவிடை......1/22 2.சதுரம் மறைதான்.....2/37 3.வேயுறு தோளிபங்கன்2/85 4.பொங்கு வெண்மணல்.....2/91 5.கல்பொலி சுரத்தின்.....3/76 அப்பர்: 1.இந்திரனோடு.......4/33 2. தேரையும் மேல் 4/34 3. ஓதாமல் கடல்...5/9 4. பண்ணின் நேர்....5/10 5.தூண்டு சுடர்......6/23
சிறப்புகள்:நான்கு வேதங்களும் வழிபட்டதால் வேதாரண்யம் என்னும் பெயர் பெற்றது. அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.
வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கதவினை அப்பரடிகள் திறப்பிக்கவும், திருஞாநசம்பந்தர் திருக்காப்பிடவும் பாடிய பெருமை பெற்ற தலம்.
இராமர், இராவணனைக் கொன்ற பழி நீங்க பூஜித்த தலம். எனவே இஃது கோடிக்கரை என்றும் வழங்கப் படுகிறது.
இக்கோவிலில் எரியும் விளக்கில் இருந்த நெய்யை உண்ணுவதற்கு வந்த எலி அணையும் நிலையிலிருந்த திரியைத் தூண்டி மீண்டும் எரிய விட்டதால், மறுபிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. இச்செய்தியை அப்பரடிகள் திருக்குறுக்கைத் தல தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். முசுகுந்தச் சக்கரவரத்தி தியாகேசப் பெருமானை எழுந்தருளுவித்த ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று.
தியாகர் மரகதத் திருமேனி- புவன விடங்கர்.
திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவரும், தாயுமான சுவாமிகளும் அவதரித்த தலம். பரஞ்சோதி முனிவரே இக்கோயில் தலபுராணத்தை அருளிச் செய்தார்.
இங்குள்ள தீர்த்தம் மணிகர்ணிகை. காசியில் உள்ளது போன்ற சிறப்புப் பெற்ற தீர்த்தம்.
ஆடி, தை அமாவாசை போன்ற புண்ணிய காலங்களில் இங்குள்ள கோடி தீர்த்தத்தில் நீராடுவது புண்ணியமாகும்.
இங்குள்ள தலமரமான வன்னி மரத்தினடியில் விசுவாமித்திரர் தவம் இயற்றியதாய்க் கூறுவார்கள்.
சோழர், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன. 92 கல்வெட்டுக்கள் உள்ள கோயில்.
அமைவிடம்:திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் இரயில் பாதையில் வேதாரண்யம் நிலையத்திலிருந்து மேற்கே 1 கி.மீ தூரத்தில் உள்ளது. திருத்துறைப் பூண்டி, நாகை ஆகிய இடங்களிலிர்ந்து பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: மு.ப. 6-30---12.00 பி.ப. 5.00--8.30 வரை.
|