பாசுர மடல் 079 : மயக்கும் மாலைப்பொழுதே நீ போ! போ!மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:36, 2 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் மயக்கும் மாலைப்பொழுதே நீ போ! போ!
மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ! (திருவாய்மொழி 9.9.1)
சடகோபன், மாறன், பாராங்குசன் என்ற இயற்பெயர் கொண்ட நம்மாழ்வார் இங்கு தன்னைப் பாராங்குச நாயகியாக பாவித்து, கண்ணன் வாழும் கோகுலத்தில் கண்ணனின் சிறுபிரிவையும் தாங்காத கோபியர் மனோநிலையை இங்கு தமிழ் அகமரபின் வழியாக படம் பிடித்துக் காட்டுகிறார்.
இராமாவதாரத்தில் இராமனைப் பிரிந்து அயோத்தி 14 ஆண்டுகள் பட்ட பாட்டை கோகுலத்தில் கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சியர் ஒரு மாலைப் பொழுதில் பெறுகின்றனராம்!
"விளைவான் மிகவந்து நாள்திங்கள் ஆண்டுஊழி நிற்கஎம்மை
ஐன்ஸ்டைன் திவ்யப்பிரபந்தம் படித்தாராவென்று தெரியவில்லை, ஆனால் தனது சார்புடைமைத் தத்துவத்தை விளக்க, நம்மாழ்வார் போல் காதலியின் காத்திருத்தலை உதாரணமாகச் சொல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் பொழுது ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகிறது. அதே நேரத்தில் காதலியுடன் இருக்கும் போது ஒரு யுகம் கூட ஒரு நொடி போல் கரைந்து விடுகிறது. இதோ, நளவெண்பா:
"ஊழி பலஓர் இரவு ஆயிற்றோ என்னும்"
விரிமலர்த் தென்றலாம் வீசு பாசமும்
கம்பன் போடும் கம்பளம் (ஓவியப் படுதா) எப்போதுமே பிரம்மாண்டமாக இருக்கும். மிதிலையில் சீதையின் நிலையைப் பாருங்கள். வழக்கம் போல் சூரியன், தன்பாட்டுக்கு மாலையில் மறைகிறது. ஆயின் சீதைக்கு அது எப்படி இருக்கிறது? "கருநிறச் செம்மயிர்க் காலன்" போல் தோன்றுகிறது!! அப்பாடா! பிரிவுத் துயர் என்பது கொடுமையானது. தன் இன்னுயிராக இருக்கும் காதலன், காதலி பிரிவு என்பது மிகக் கொடுமையானது.
"சீதையுடன் இருக்கும்போது எந்தப் பொருள்கள் இனியனவாய் இருந்தனவோ,
"மலர்களின் வாசனையுடன் கூடியதும் இளமையாக வீசுவதும், குளிர்ச்சியுடன் கூடியதுமான இந்தக் காற்று, அந்தச் சீதையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையிலே எனக்கு நெருப்புக்குச் சமானமாய் இருக்கிறது (கிஷ் 1:52)
என்கிறான் இராமன். இதுவும் சார்புடைமைதான். நமக்குப் பிரியமானவர்கள் இருக்கும் போது உலகமே பிரியமானதாக உள்ளது. அதுவே சோக மனோநிலையில் வெறுக்கத் தக்கதாய் உள்ளன.
வேறு:
இப்பொது பாராங்குச நாயகி விரிக்கும் கம்பளத்தைப் பார்ப்போம். இந்தியா போன்ற சூடான நாட்டில் தென்றல் என்பது ஒரு சுகானுபவம். அந்தத் தென்றல் வரும் வழியில் மல்லிகை மணத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தால்? ஆகா! என்ன சுகம். இல்லையா? இல்லை! என்கிறாள். பாராங்குச நாயகி. இந்த பாழாப்போன தென்றல் என்று திட்டுகிறாள்! இந்தத் தென்றலும், மல்லிகை மணமும் எப்படி உள்ளதாம்? வாளினால் வெட்டினால் தரும் துன்பம் போல், அது மட்டுமல்ல அது நஞ்சு தீட்டிய வாள் வேறு!! ஐயோ ஏற்கனவே பிரிவுத்
குறிஞ்சி இசை வருகிறது (கவனிக்க: இங்கு குறிஞ்சி இசை என்கிறார் மாறன். முல்லை இசை என்று சொல்லவில்லை. கண்ணனைக் குறிஞ்சித் தலைவன் என்று ஈடு சொல்வதற்கு இதுதான் காரணம்). இசை எவ்வளவு இன்பம் தரக் கூடியது. ஐயோ, வண் குறிஞ்சி இசை தவரும் என்கிறாளே பாராங்குச நாயகி!
செல் கதிர் மாலையின் மையலில் அவதியுற்ற அனுபவம் உண்டோ? நான் இந்தியாவில் இருந்த மட்டும் மாலைப் பொழுதை வெளியே களிக்கவே விருப்ப முற்றேன். அது மறைந்து இரவு வருவதைக் கண்ணால் காண வேண்டும். அப்போதுதான் ஒரு நிம்மதி. அது மயக்கும் மாலை. இரண்டும் கெட்டான் பொழுது. விவரிக்க முடியாத ஒரு சோகம் கவ்வும் பொழுது. அதனால்தானோ "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா!" என்று பாடினான் இன்னாளைய கவிஞன்.
இந்தியாவின் மாலைகள் சிறப்பு வாய்ந்தன. மாலை நேரத்தின் செந்நிறத்தையும் கருமையான நிறத்தையுமுடையவான மேகங்கள் கண்ணனின் நிறத்தை ஒத்து இருத்தலால் அவையும் துன்பம் தருவனவாயின.
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
'நண்ணரு நலத்தினான் இளையள் நின்றுழி
இன்னும் வியாக்கானத்தைப் பாருங்கள்! கண்ணன் வந்த போது தழுவிய முலைகளும், தோள்களும் அவன் இல்லாத இப்பாலைப் பொழுதில்
இத்தனை அவதியும் எப்படி உண்டாயின?
இறைவனைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்க, அதற்கு அனுகூலமாக ஒரு சங்கின் ஒலியோ, நாண் ஒலியோ, திருவடி, திருச்சிறகு ஒலி போன்ற நற் சகுனங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் அனுகூலமாகக் கருதப்படும் பொருள்கள் கூட துன்புறுத்தத் துவங்கின.
இந்த சுகமான சோகம் அனுபவித்தவர்களுக்கே புரியும். கிருஷ்ணபிரேமாமிர்தம்
நா.கண்ணன். Date - Sat ., 24, Jun., 2000 16.01.29 + 0200. |