நவராத்திரி நாயகியர் 5மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:39, 24 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.
நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல்.
பயறுச் சுண்டல்: இதை இருவிதமாய்ச் செய்யலாம். முதலில் பச்சைப் பயறை வாங்கி முதல் நாளே ஊற வைக்கவேண்டும். பின்னர் மறுநாள் பயறை வேக வைத்து உப்புச் சுண்டல் என்றால் தேவையான அளவு உப்புச் சேர்க்கவும். நீரை வடிகட்டி வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக்கடுகு, மி,வத்தல், கருகப்பிலை தாளித்து வெந்த பயறைப் போட்டு சற்று வதக்கிப் பின் இறக்கும்போது தேங்காய் துருவல் சேர்க்கவும். இனிப்புச் சுண்டல்: உப்பு ஒரு சிட்டிகை மட்டும் போட்டு பயறை வேக வைத்து வடிகட்டிக்கொள்ளவும். கால் கிலோ பயறுக்கு நூறு கிராம் பொடித்த வெல்லம் சரியாக இருக்கும், ஒரு மூடி தேங்காய் துருவல். வாணலில் நெய் ஊற்றிக் கடுகு தாளித்துப் பயறையும், வெல்லத் தூளையும் சேர்த்துக்கிளறவும். சேர்ந்து வந்ததும், தேங்காய் துருவல் போட்டுக் கீழே இறக்கவும்.
வழக்கம்போல் சுண்டல் இரவல் தான். கூகிளார் கொடுத்தது. எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.
துர்கா அஷ்டகம்: 1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள் தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே துர்காஷ்டகம் தொடரும்.
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம் |
