பாசுர மடல் 050 : உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார் !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:02, 23 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் 'உண்ணு நீர் வேட்டேன் என்று வந்தார் '!
நான் பாசுர மடல்கள் எழுத ஆரம்பித்த போது இலக்கியம்தான் முன் நின்றது. நான் என்னை என்றும் சமயவாதி என்று எண்ணியதில்லை. நான் உள்ளத்தால் இலக்கியவாதி. வைணவ இலக்கியங்கள் எண்ணிக்கையில் சைவ இலக்கியங்களை விட மிகக் குறைந்தவை. அதனால் அவை சிறுபான்மை இனம் என்று சொலலாம். இலக்கியவாதியின் சார்பு
"என்ன தவம் செய்தனை யசோதா! எங்கும் நிறை பரம், "அம்மா" வென்று அழைக்க, என்ன தவம் செய்தனை!" என்றொரு கர்னாடக கீர்தனை உண்டு. எங்கும் பரந்து இருக்கும்
நமக்கு எதுக்கு சார், தத்துவமெல்லாம்? அறிவுச் செறுக்கு கொள்வதுஎளிது. "Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we have
என்று எலியட் சொல்வது போல்அடியும், முடியும் தேடி அலைந்து, சளைத்து, "திக்குத் தெரியாதகாட்டில் உன்னைத் தேடித் தேடி இளைத்தேனே!" என்று பாட வேண்டிவரலாம்.
ஆய்வாளர்களைப் பற்றி எண்ணிய போது அந்த்வான்த் செந்தின் "குட்டி இளவரசன்" ஞாபகத்திற்கு வருகிறான்.
"அப்பாடி! மொத்தம் ஐம்பது கோடி பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று.
"நல்ல வேடிக்கை. கவிதை போல் இருக்கிறது. ஆனால் கருத்துள்ளதாக இல்லை" என்று நினைத்தான் குட்டி இளவரசன்.
முக்கியமான விஷயங்களைப் பற்றி குட்டி இளவரசனின் கருத்துக்கள் பெரியவர்களின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தன.
-என்னிடம், எனக்குச் சொந்தமான ஒரு மலர் இருக்கிறது. தினந்தோறும் அதற்கு நான் நீர் ஊற்றுவேன். என்னிடம் மூன்று எரிமலைகள் இருக்கின்றன. அவற்றை வாரந்தோறும் கரிநீக்கிச் சுத்தப் படுத்துவேன். அணைந்த எரிமலையைக் கூடச் சுத்தப்படுத்துவேன். யாருக்குத் தெரியும் என்ன ஆகுமென்று. என் மலருக்கும் என் எரிமலைகளுக்கும் அவை எனக்குச் சொந்தம் என்பது பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் நீயோ வின்மீன்களுக்குப் பயன்படவில்லை." பெரியவர்கள் நிச்சயமாக முற்றிலும் அசாதரணமானவர்கள்" என்று தனக்குள் கூறிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான்.
செருக்கு கொள்வது எளிது, எளிமையாய் இருப்பதுதான் கடினம். (எளிமையாய் இருப்பது போல் நடிப்பது எளிது என்பது வேறுவிஷயம்!) ஆழ்வார்கள் அடித்துச் சொல்வது இந்த எளிமையைத்தான்.அந்த எளிமையில்தான் இறைவனைக் கண்டு சொக்கிப் போனார்கள். அதன் பிரதிபலிப்பாகத்தான் "இழிதல்" என்ற கோட்பாடு இந்திய தத்துவ உலகிற்கு
முக்கியமாக, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவில் தமிழில் இலக்கியமும், ஆன்மீகமும் ஒன்றாகக் கலந்துள்ளன. பக்தி இலக்கியம் தொட்ட உச்சியைத்தமிழ் இன்னும் தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தநூற்றாண்டில் இந்த வழியில் கேட்கும் ஒரே குரல் பாரதியினுடையது. அவனுக்குப்பின் யாரும் இவ்வழியில் செல்ல
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
என்று இருக்க வேண்டும். பக்தி என்பதும் ஒரு நோக்கு. உலகில் உறையும் இறையின் வெளிப்பாடு கண்டு மெய் சிலிர்க்க வேண்டும். நாவுக்கரசரைப் பாருங்கள். இரண்டு யானைகள் கூடும் சங்கமத்தைப் பார்க்கும் காலையும் அவருக்கு சிவ சக்தி ஞாபகம் வருகிறது.
மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
இதுதான் பக்தி. காமம், செக்ஸ், அது, இதுவென்று விதண்டாவாதம் செய்து கொண்டு இருக்கக்கூடாது!
இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஒருவகையான, செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட வறட்சி தெரிகிறது. பகுத்தறிவு என்ற ஒரு போர்வையில் நம் பக்தி இலக்கியங்கள் புறம் தள்ளப் பட்டுள்ளன. தமிழர்களை விழிக்கச் செய்ததில் பெரியாருக்கு பெரும் பங்கு உண்டு. அதை மறுப்பதற்கு இல்லை. அதே சமயம் அவர் கிண்டல் அடித்தது போல் "தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி" என்று சொல்லும் அளவிற்கு அதை வரண்டு போக வைத்ததில் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதன் செழுமையை முழுவதும் உணராமல், இங்கொன்று அங்கொன்று என்று நுனிப்புல் மேய்ந்து வரண்டு போயினர். ஆங்கில மோகம் வந்த பிறகு"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று புலம்பும்
இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்குமுள்ள உறவை ஒரு திருவாய் மொழிப் பாடல் சொல்கிறது:
செங்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்ம்மின் திருமா லிருஞ்சோலை
கவி செய்கின்ற பாவனையில் இறைவன் உட்புக நடக்கும் காரியத்தை திருமூலரும் பெருமையுடன்சொல்கிறார்:
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே!"
நம்மாழ்வார் ஊனுடம்பு பாழ் என்று சமணர்கள் போல் ஒதுக்கச் சொல்லவில்லை. "இத்தலைஉண்டானால் அன்றோ அத்தலைக்கு மங்களாசாசனம் செய்யவாவது?" (ஈடு) என்று உயிரைகாக்கச் சொல்கிறார். இதையே வேறு வார்த்தைகளில் திருமூலரும் சொல்கிறார்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
ஆழ்வார்கள் சங்க காலக் கவி மரபின் தொடர்ச்சி என்பது அவர்கள் கவி செய்யும் பாங்கிலிருந்து தெரிகிறது. மாயக் கவியாய் வந்து என்பதற்கு வியாக்கானம் "கவி என்ற காரணத்தை இட்டுக்கொண்டு வந்தான்; காதலி இருக்குமிடத்தில் "தண்ணீர்" என்று புகுமாறு போலே" என்பது. அவர்கள் சுட்டும் கலித்தொகைச் செய்யுள் இதோ!
அன்னையும் யானும் இருந்தேமா, "இல்லிரே!
இனி கவி செய்யும் போது நம் பாரம்பரியம் நினைவுக்கு வரும்தானே!
நா.கண்ணன். |


