பாசுர மடல் 049 : குறையொன்றும் இல்லாத கோவிந்தா !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:59, 23 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் பண்டைய தமிழக நில அமைவை பல்வேறு திணைகளாகப் பிரித்த தமிழன், ஒவ்வொரு திணைக்கும் ஒரு தெய்வத்தை வைத்தான். குறிஞ்சித் தலைவன் கந்தன் தமிழ்க் கடவுள் என்று பலரும் பேசக் கேட்கிறோம். முல்லைத் தெய்வமான கண்ணன் முருகன் போல் சேயோன் அல்லன். கருத்த பயல் அவன். காடு மேடுகளில் திரிந்து அலையும் கருப்பன். காடுகள் திரித்தி கழனிகள் ஆகும் முன்பு இந்த "மாயோனும், சேயோனும்" தமிழ் நில
இதனை பிரதிபலிக்கும் வண்ணம் கண்ணனை "பச்சை மா மலை" என்கிறார் தொண்டர் அடிப்பொடி. "ஆயர் தம் கொழுந்தே" என்றும் சொல்கிறார். ஆயர் தலைவனாக உள்ள கண்ணன் கோகுலத்தில் ஒரு சிறுவனுக்குத் துன்பம் என்றாலும் வாடிவிடும் தன்மை உடையவன். அதனால்தான் அவன் அவர்கள் கொழுந்து. தமிழகப் பார்வைக்கும், யூதர்களின் பார்வைக்குமுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைய யூத தெய்வமான யஹோவா மேலிருந்த படியே ஆணையிடும் தெய்வம். தன் ஆணைக்கு பணியாதோரை தயங்காமல் கொன்றுவிடும் தெய்வம். உச்சாணிக் கொப்பில் உள்ள தெய்வம். அடிநிலை மாந்தரின் தெய்வமன்று. தெய்வத்தை எளிமை படுத்துவது மிக முக்கியம் என்பதை உணர்ந்துதான் பாண்டிய சபையில் பர தத்துவத்தை நிறுவிய பெரியாழ்வார், கடைசிவரை கண்ணனை "கன்னக் குடம் திறந்தால்" வழியும் சிரிப்பு கொள்ளும் சிறுவனாகப் பார்த்தார். தன்னைத் தாயாகப் பாவித்து இறைவனை தன் சேயாக வைத்தார். இறைவனை குழந்தையாகப் பார்ப்பதில் பெரிய சௌகர்யம் உள்ளது. "குழல் இனிதோ? யாழ் இனிதோ?" என்று நம்மை கேள்வி கேட்டு வளையவரும் மழழை எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. இதை நன்றாகப் பயன்படுத்தி பின் "பிள்ளைத் தமிழ்" பாடினர் பெரும் புலவர் பலர். பெரியாழ்வாரின் கண்ணன் காடு சுற்றும் சிறுவன். அவன் உடல் வாடுமே என்ற பரிவில், "ஆனிரைமேய்க்க நீ போதி அருமருந்தாவதறியாய் என்கிறார். கண்ணனின் கரிய திருமேனி பற்றி நிறையப் பேசுகிறார். "காயமலர் நிறவா! கருமுகில்போலுருவா! இவன் சிறுவன்தானோ? இவன் திரு உடையவன், இவன்தான் திருவரங்கத்தில் கிடக்கும் பிரான். மெல்ல, மெல்ல நம்மை இட்டுச் செல்கிறார் பெரியாழ்வார்-இறைவனை நோக்கி. "கருவுடைமேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள் திருப்பாணாழ்வார் தனது இறுதி மூச்சு இறைவனுடன் கலக்கும் காலையும் அவனை ஹோ! ஓஹோ! என்று பராக்கிரமம் பாடாமல் வெண்ணெய் உண்ணும் சிறுவனாகவே பார்ப்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது! "கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
பெரியாழ்வார் கண்ணனை பிள்ளையாகப் பார்த்தால் அவர் பெண் ஆண்டாள், இறைவனைக் காதலானகவே பார்க்கிறாள்! கருநிறமுடைய எதைக் கண்டாலும் மயங்குகிறாள்! "கருவிளை யொண்மலர்காள்! ஆண்டாள் செய்வித்த நாச்சியார் திருமொழி வாசித்து, வாசித்து இன்புறத்தக்கது. கிருஷ்ணமாச்சாரி என்ற "குவளைக் கண்ணனின்" தூண்டுதலின் பேரில் "கண்ணன் பாட்டு"எழுதும் சுப்பிரமணிய பாரதி ஆழ்வார்கள் வழியில் கண்ணனைத் தரிசித்து அவர்களையும் தாண்டிச் செல்கிறான். கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக, தன்குல தெய்வமாகப் பார்க்கிறான். அவன் வாயால் சொல்வதானால், "நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் தெய்வத்தின் உருவகத் தன்மையைப் பாரதியைப் போல் புரிந்து கொண்டவர் வேறு யார் உண்டு? தெய்வத்துடன் தோள் கோர்த்துச் செல்லும் அவன் பாங்கு என்னே? பாரதியின் சிந்தனைப் பரப்பு ஆச்சர்யமானது. கண்ணனை ஆண்டானாகவும், தன்னை தலித்தாகவும் பார்த்து உள்ளம் உருகியவனும் பாரதிதான். "பண்ணைப் பறையர்தங் கூட்டத்திலேயிவன் என்கிறான் பாரதி. பாரதிக்குப் பின் இவ்வுருவகச் செம்மையை நன்றாகப் பயன் படுத்தியவன் கண்ணதாசன். ஆனாலும் பாரதி எட்டிய எல்லையைக் கண்ணதாசன் தொடவில்லை. ஜெயகாந்தன் சொல்வது போல் இது பாரதி யுகம். பாரதி மீண்டும், மீண்டும் பிறக்கிறான். சமீபத்தில்இது இணையத்தில் நடந்தது December 16, 1998 அன்று ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் புதிய கண்ணன் பாட்டு எழுதினார். கண்ணனின் தேவை காலத்திற்குக் காலம் வித்தியாசப் படுகிறது. பௌத்தரும், சமணரும் அறனை வலியுறுத்தி வாழ்வைப் புறம் தள்ளிய போது வாழ்வின் சிறப்புச் சொல்ல கண்ணன் காதலனாக, சேயாக வேண்டியிருந்தது. பாரதி காலத்தில் இறைவனை எல்லோரிடத்திலும், எல்லா மதத்திலும் பார்த்து, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியிருந்தது. ஆனால் ஜெயபாலன் காலத்தில் தலித்தியம் தலை எடுக்கிறது; ஈழம் தீப்பற்றி எரிகிறது. கவிஞனின் வார்த்தைகளில் கனல் தெரிக்கிறது. "நீலக் கோனாரப் பயலே. என்று கேட்க வைக்கிறது. "ஈழத்தில் தமிழர்கள் என்று ஒரு பழியை கண்ணனின் மீது வீசுகிறார்! ஈழம் சைவ உலகம். அங்கு கண்ணன் வழிபாடு அதிகம் கிடையாது. ஆனால் அங்கும் பழி ஏற்க கண்ணன் வருகிறான். "தாய்க்கு இனி மகன் இல்லை என்று மாபாரதத்தில் எல்லோர் பழியையும் ஏற்கும் கண்ணனால் ஜெயபாலனின் பழியை ஏற்கவா முடியாது? ஆழ்வார்களும் பழி சுமத்துகின்றனர். பெரியாழ்வார், "வாழ ஒட்டான் மது சூதனன்" என்றும், "தீமைகள் செய்யும் சிரீதரா" என்றும் பழிக்கின்றார் (அவன்செய்யும் குரும்புத்தனம் தாங்காமல்). ஆண்டாளோ, ஒரு பெண்ணை வதை செய்தான் என்ற பழி வந்து சேரும் என்று வெண் சங்கிடம் எச்சரிக்கிறாள்! இப்படி கண்ணனிடம் வம்பு செய்வதற்குக் காரணமென்ன? அவன் காட்சிக்கு எளியவனாக இருப்பதால்தான். ஆழ்வார் வழியில் ஜெயபாலனும் அந்த உரிமையைக் கோருகிறார், "வேங்குழலாக இசைக்கிற அந்த என்று சொல்கிறார். ஈழத்துக் கவிஞரான ஜெயபாலன் நஞ்சு வண்ணன் என்று கண்ணனை வர்ணித்தது தமிழுக்குப் புதிது. காலத்துக்குக் காலம் கண்ணனுக்குப் புது மெருகு கூடுகிறது. சங்கம் தொடங்கி ஜெயபாலன் வரை கண்ணன் என்னும் உருவகம் கவிஞர்கள் மனதைத் தொட்டு இருக்கிறது. கண்ணன் வெறும் நெகிழ்சியின் உருவகம் அல்ல. வெறும் காதலின் உருவகம் அல்ல. பரம் பொருள் தோளொடு தோள் சேர்த்து வரும் தன்மையின் பிரதிபலிப்பு அவன். கண்ணன் தன் அகத்தில் கால் வைத்த பின் நடந்த விஷயங்களைப் பாரதி பட்டியல் இடுகிறான்: "செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி வைணவத்தின் அடி நாதத்தை, ஆச்சர்யமாக வைரமுத்து ஒரு சினிமாப் பாடலில் (பெரிய தம்பி) பிரதிபலிக்கிறார். "உள்ளம் முழுதும் நேசம் வைத்தால் குறை தெரியாது" என்பதுதான் அவ்வரி. இதையேதான் ஆண்டாள், "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு என்று சொல்கிறாள். அவள் சொல்வது போல் தமிழ் உள்ளளவும் கண்ணனுடன் கூடிய உறவு தமிழ் மண்ணில் ஒழிவில்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கும். பாசுர மடல் 49 நிறை கொள்கிறது. பிகு: அகில உலக ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் (தமிழ்) - லண்டன் ரேடியோவில் 13.02.99 அன்று கொடுத்த பேட்டியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.
|