பாசுர மடல் 031 : என் சரண் என் கண்ணன் .மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:53, 19 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் உப்பிலியப்பன் கோயில் என்றழைக்கப்படும் தலத்தில் தன்னொப்பார் இல்லப்பனாய் வீற்றிருக்கும் எம்பெருமானைக் கண்டு நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்: மூவுலகங் களுமாய்
"பாவியேன்" என்ற பதத்தால் இரக்கம் கொள்ளப் பட வேண்டியவன் என்று தெரிகிறது. பாவம் எங்கிருந்து வருகிறது? கற்பிதம் நிரம்பிய வாழ்விலிருந்து வருகிறது. எதைக் கற்பிதம் எனலாம்? இந்தியாவில் பிறந்த நாலு குழந்தைகளை கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து எது எந்த சாதி என்று சொல்லச் சொன்னால் யாராலும் முடியாது. அது எந்த மதம் என்று சொல்லச் சொன்னால் அதுவும் முடியாது. ஆனால் நமக்கு சாதியும், மதமும் பெரும் அடையாளமாகிப் போகின்றன. இக்கற்பிதத்திற்காக கொலையும், பழியும் சுமக்க நாம் தயாராய் இருக்கிறோம். பிறக்கும் போது இருந்த மனது போகப் போக மாறுது. எழுதப்படாத சிலேட்டாய் இருந்த மனது போகப் போக கிறுக்கல் நிரம்பிய குப்பையாய் போய்விடுகிறது. இந்தக் குப்பைதான் நாம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குப்பை கூடும் போது குழப்பம் வந்து நிற்க வாழ்வு இன்னல் நிரம்பியதாய் போய்விடுகிறது. மனது தெளிவைத் தேடுகிறது. பரஞ்சுடர் உடம்பாய்
இப்பாடல்களில் இன்னொரு கருத்து மறைந்துள்ளது. அதாவது நாம் வாழ்வை கருப்பு-வெளுப்பு என்று எதிர்மறைகளாய்தான் பார்க்க விரும்புகிறோம். உதாரணம், இந்து அல்லது முஸ்லிம். கிருத்துவன் அல்லது பெளத்தன் இப்படி. குழந்தைக்கு பாலூட்டும் போது, சோறு–ட்டும் போதே போதனைகள் தொடங்கி விடுகின்றன - எவன் எவனிலிருந்து வித்தியாசமாக இருக்கிறான் என்று. பள்ளிக் கல்வி இதை வலுவூட்டுகிறது. நம் கல்வி அனைத்தும் மாணவர்களை அளவிடும் கருவியாக அமைந்திருப்பதை நாம் கவனிப்பதேயில்லை. அரை மார்க் வித்தியாசத்தில் வாழ்வு திசை மாறிப் போகும் அளவுக்கு அளவுகள் நமக்கு முக்கியமாக இருக்கின்றன. பிறந்ததிலிருந்து நாம் கற்பது வித்தியாசங்களை. உலகு*சூன்யம்; உவப்பு*முனி; புகழ்*பழி; புதுமை*பழமை; பகை*நட்பு; விடம்*அமுதம்; இன்பம்*துன்பம்; கலக்கம்*தேற்றம்; தழல்*நிழல்; ஞானம்*மூடம்; சுடர்*இருள்; புண்ணியம்*பாவம்; புணர்ச்சி*பிரிவு; உண்மை*இன்மை; கருமை*வெளுமை; குறுமை*நெடுமை; சிறுமை*பெருமை....இப்படி நமது வாழ்வு, படிப்பு இவை எதிர், எதிராகத் தோன்றும் வித்தியாசங்களில் குடிகொண்டுள்ளது. இந்த வித்தியாசங்கள்தான் உண்மை என்று நம்பி ஒரு பொய்மையான, கற்பிதமான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரை முஸ்லிம் என்றோ, இந்து என்றோ ஒரு எண்ணக் குறியீட்டால் பிரித்து விடுவதால் அவர் எந்தப் பிரிவிலும் விழாத, ரத்தமும், சதையும் சேர்ந்த மனிதர் என்பதோ; இத்தகைய ஒரு உயிரை உருவாக்க பல கோடி ஆண்டுகளை இவ்வுலகம் எடுத்துக் கொண்டது என்றோ, அடிப்படை மரபுத் தொடர் மூலக்கூறுவான டி.என்.ஏ இவரை மற்ற எல்லா உயிர்களுடனும் 99.9 சதவிகிதம் சேர்த்துக் காண்கிறது என்ற உண்மையோ நமக்கு புலப்படுவது இல்லை. மனித மனதுக்கு தேவையானது "ஏதோ ஒரு சின்ன" வித்தியாசம் அவ்வளவுதான். அதை வைத்து பிரித்து, பாகுபடுத்தி, அளவிட்டு, வாழ்வை வெகுவாக சிறுமைப் படுத்தி விடுகிறது. மனதின் இப்போக்கை கண்டனம் செய்கிறார் நம்மாழ்வார் தனது திருவாய் மொழி ஆறாம் பத்தின், மூன்றாவது பத்துப் பாடல்களில். அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், இறைமை கொண்ட உள்ளம் உலகின் தொடர்ச்சியைக் கவனிக்குமேயன்றி அதன் பிரிவுகளை அல்ல என்று. கண்ணனின் இன்னருள் கொண்டோருக்கு இந்த வித்தியாசங்கள் முக்கியமில்லை என்பதை இப்படிச் சொல்கிறார்: புண்ணியம் பாவம்
என்னப்பன் எனக்காய் இகுளாய்
இவ்வளவு பொருள் நிறைந்த ஒரு பண்பாடு இன்றுள்ள நிலமையில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை (தனி மனித விடுதலை) தவறிக் கெட்டு, பாழ்பட்டு நிற்கிறது. நம்மாழ்வார் கோடி காட்டும் புரிதல் நம்மிடமிருந்து எங்கு போனது? இப்பாசுர மடல்களே எதாவதொரு பிரிவில் வைத்து பார்க்கப் பட்டு மறுக்கப்பட்டு, மறக்கப் பட்டுதான் போகிறது என்பது நடைமுறையில் தெரிகிறது.
அப்போதுதான் நம்மாழ்வார் போல் கதறத் தோன்றுகிறது: "என் சரண் என் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே" என்று !! பிகு: சரணாகதியின் ஒரு விளக்கம் இது. மற்றய விளக்கங்களை போகப் போகப் பார்ப்போம். Subject: [tamil.net] Pasura madal 31 |