பாசுர மடல் 030 : எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:53, 19 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின.
எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த தத்துவ உள் விவகாரங்களுக்குள் புகாமல் எளிமையாய் இக்கேள்விகளை புரிந்து கொள்ளப் பார்ப்போம். இராமானுசருக்கும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் நெடியோன், திருமலை எம்பிரான் வேங்கடவன் கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறான். தமிழகத்தின் வட எல்லையாக இத்திருவேங்கடம் இருந்து வந்ததற்கான சான்றுகள் நிரம்ப உள்ளன. இத்திரு வேங்கடம் இராமானுசர் காலத்தில்(கி.பி.1017-1137) முருகன் கோவிலாகவும், சிலர் அம்பாள் சன்னிதி என்றும் வழிபட்டு வந்ததாகவும் குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இராமானுசர் புராண, இதிகாச ஆதாரங்களைக் கொண்டு அக்கோவிலை வைணவ திருத்தலமாக மாற்றிக் கொடுத்தார் என்பது வரலாறு.
உலகம் உண்ட பெருவாயா இந்த உலகம் உய்ய கால காலமாக கால்கடுக்க காத்து நிற்கும் இத்தெய்வத்திடம் "உன் பாத மலருடன்கூடும்" நாளைக் கூறாயே என்று உருகுகிறார். திருவாய் மொழியின் ஆறாம் பத்தில் முதல் பாடலாக அமையும் இப்பாடலைத் தொடர்ந்து பத்துப் பாடல்களில் அவர் வேங்கடவன் முன் சரணாகதி செய்வதை பதிவுசெய்கிறார். பத்தாவது பாடலில், சரணாகதி செய்துவிடுகிறார்.
அகல கில்லேன் இறையும் என்
வரப்புயர நீர் உயரும், என்ற பண்டை வாக்கால் உணரலாம். ஒளவை நெல்லுக்கிறைத்த நீர் அதாவது இவ்வுலகு இத்தகைய உண்மை உணர்ந்த நல்லவர்களால் காக்கப் படுவதாக பாடல் சொல்கிறது. அப்படியெனில் நம்மாழ்வார் செய்த சரணாகதியும், இராமானுசர் செய்த சரணாகதியும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதே பொருளில் காஞ்சி மாமுனி, "என்னை ஜெகத்குரு என்று சொல்லி பெரும் பொறுப்பைக் கொடுத்துவிட்டீர்கள். உலகம் உய்ய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சில மணித்துளிகளாவது தினமும் தியானம் செய்தால் என் பாரம் குறையும்" என்று சொல்லியிருக்கிறார். அதாவது இவ்வுலகு என்பது நமக்கு புறத்தே, நம்மில் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு இயக்கம் போலவும், நமக்கு நம் ஜோலிகள், நம் கவலைகள், நம் ஆசாபாசங்கள் இவைதான் முக்கியமென்றும் இயங்கும் வரை உலகம் உய்யாது என்று பொருள் படுகிறது. என்று, உலகு என்பது "நாம்"தான் என்று உணர்கிறோமோ அன்று பெரும் பொறுப்பை நாம் உணர்வதுடன், இந்த உணர்வுக்கும் உள்ளிருந்து இயங்கும் ஒரு சக்தியைக் கண்டு கொண்டவராவோம். அந்நிலையில், மனப்பூர்வமாய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உலகு தழுவிய தாக்கம் தானாகவே அமைந்துவிடுகிறது. இந்த நோக்கில்தான் நம்மாழ்வார்/இராமானுசர் செய்த சரணாகதியை பார்க்க வேண்டும். சரணாகதி ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அடுத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்போம். Subject: [tamil.net] Pasura madal 30Date: Sun, 08 Feb 1998 11:14:24 +0100 |