பாசுர மடல் 010 : என் அமுதினைக் கண்ட கண்கள்.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:15, 15 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை. அழகுணர்ச்சி. வாழ்வை ரசிப்பதற்கு கண்ணனைக் கருத்தாகக் கொள்கின்றனர், பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி (73) அதாவது கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும், மருவிலும், தேனிலும், தேன் சிட்டிலும், மண்ணிலும், மனிதருள்ளும் அகப்பொருளாய் (ஆந்தர்யாமியாக) அவன் இருக்கிறான். இந்த நோக்கின் பின்னால் கூர்ந்து கவனித்தால் பெரும் புரட்சிக்கான மனோதிடம் ஔ¢ந்து இருப்பதைக் காணலாம். அதாவது, திருப்பாணாழ்வாரை இழிசனம் என்று சாதீயம் ஒதுக்கியது. அவர் மனம் தளரவில்லை. மாசு நிறைந்த மானிடர் மேல் காதல் செய்வதற்குப் பதில் அவர் தன் காதலை மானிடர்க்கும் முதலான கண்ணனிடம் திருப்பினார். ஒன்றில்லாவிடில் மற்றொன்று! குறை ஒன்றும் இல்லை. மனம் தளர்ந்து விடுவதில்லை. இது முக்கியம். ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள். இந்த இரண்டு புரட்சிகரமான போக்குகளுக்கும் அரங்கனின் ஆசி கிடைக்கிறது! அதுதான் இதில் விசேஷம்! அத்தனை ஆழ்வார்களிலும் இந்த இரண்டு புரட்சிவாதிகளும்தான் அரங்கனுடன் சங்கமித்தவர்கள். இதில் உள்ள நயம் உங்களுக்குப் புரிகிறதா? திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தான் செய்வித்தார். புலவர் வழக்கபடி பத்துப் பாடல் பாடிவிட்டு, பல ஸ்துதி என்று கடைசியாக ஒரு பாடல் பாடுவது வழக்கம். அதில் பாடியவர் பெயர், பாட்டினால் வரும் நன்மை சொல்லப்படும். திருப்பாணாழ்வார் இம்மரபை கை விடுகிறார். முத்துப் போல் பத்துப்பாடல்களில் கண்ணன் மேல் காதல் கொண்டு அடி முதல் முடி வரை பாடி விட்டு, மெய் மறந்து, பாடியவரே இல்லாமல் செய்து விடுகிறார். இது காதலின் உயர் நிலை! காதல் "செய்பவர்" என்பது கூட இல்லாமல் வெறும் காதலே காட்சியாக நிற்பது!! அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த கண்ணனை விளிக்க எத்தனை சொற்களை பாவிக்கிறார் பாருங்கள்: அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர் கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், ..இப்படி. கண்ணதாசன் சொல்லுவானே," ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே" என்று. அது போன்ற ஒரு நிலை. நீதி வானவன் என்ற பதத்திலிருந்து அவருக்கு இழைக்கப் பட்ட பிழைக்கு நீதி வழங்கப்பட்டது எனத் தெரிகிறது. ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஆலை இலைக் கண்ணன் உருவகம் பாருங்கள்! உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும்உண்டான்) பாலகனாய் சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கணணன் ஊழிக் கூத்தின் கடைசியில்! பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின் தொடக்கத்திற்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. கள்ளமற்ற குழந்தையாக காண்பிப்பது, உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்ட. இதையே கவி கம்பன், உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் என்பார். இப்படி சக்தி வாய்ந்த இவனது அழகிற்கு ஓர் முடிவு உண்டோ? "முடிவில்லதோர் எழில் நீலமேனி" என்கிறார். முர்ச்சையாகும் நிலை. வார்த்தை வரவில்லை. கவிஞர் தடுமாறுகிறார். ஐயோ!என் நெஞ்சு நிறை கொண்டதே என முடித்து விடுகிறார். அவருக்கு அப்போதிருந்த அருள் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!
|

