பாசுரமடல் 001 - ஆழ்வார்களின் அறிமுகம்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:56, 6 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ஆழ்வார்களின் அறிமுகம்
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
தினம், தினம்: அடியார்களாகிய நாம், நம்மைக் காக்கும் அரங்கம், சடகோபன் (நம்மாழ்வார்) தந்த ஈரப் பாசுரங்கள் (கண்ணீர் பெருகி பக்தியால் அழுவதால் வரும் ஈரம்), கடல் சூழ்ந்த மண்ணுலகம், இப் பக்தியை மெய்யாக்கிக் காட்டும் ஆச்சார்யன் (இங்கு மணவாள மாமுனி) இவர்கள் வாழ்க வென்று இரைஞ்சும் பண்பாடுதான் நம் தமிழ் பண்பாடு. இது குறித்து நாம் பெருமை கொள்வோமாக!! ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.
சென்னைக்கும், மாமல்லைக்கும் இடையே ஒரு குக்கிராமம். அடாது மழை பெய்து கொண்டிருக்கும் ஒர் நாள். மழைக்கு ஒதுங்கி ஒருவர் ஒரு வீட்டினுள் நுழைகிறார். வீட்டில் யாரும் இல்லை. ரேழி என்று அழைக்கப்படும் இடைப் பகுதியில் ஒண்டுகிறார். அசதியில் கொஞ்சம் படுத்து இளைப்பாறுகிறார். அப்போது இன்னொரு நபர் நுழைகிறார். ஒதுங்க இடம் இருக்குமா என வினவுகிறார். அதற்கு முதல்வர் சொல்லுகிறார், ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். நான் இருந்து கொள்கிறேன் (அதாவது உட்கார்ந்து கொள்கிறேன்) வாரும் என்கிறார். இருவர் உட்கார்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் நுழைகிறார். கதவைத்தட்டி இருக்க இடம் கிடைக்குமா என வினவுகிறார். அன்புள்ளம் கொண்ட இந்த இருவரும், ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், எனவே வாருங்கள்-மூவரும் நிற்கலாம் என அவரை உள்ளே அழைக்கின்றனர். மூவருக்கும் நிற்கத்தான் சரியாக இடம் இருக்கிறது. அப்போது இவர்கள் அறியாமல் இன்னொருவர் இடையில் புகுந்தது போல் நெருக்குவதை மூவரும் உணருகின்றனர். யார் இந்த நான்காவது ஆள் என்ற கேள்வி எழுகிறது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது? சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளை தொட்டு உணரமுடியவில்லை. அப்போது முதலில் வந்தவர் அந்தாதி தொடங்குகிறார் இப்படி.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக (முதல் திருவந்தாதி-பொய்கை ஆழ்வார்)
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக (இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)
இப்படி இவர் நு¡று பாடல்கள் பாடுகிறார். இந்த அனுபவத்தில் இவர்களுக்கு புரிந்துவிடுகிறது திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் (முன்றாவது திருவந்தாதி-பேயாழ்வார்)
நா.கண்ணன் Date: Tue, 02 Sep 1997 09:20:05 +0000 |