தீபாவளி கொண்டாட்டம் !மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:56, 5 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு
தேவையான பொருட்கள் : கடலை மாவு - 100 கி. செய்முறை :- 10 கி.நெய், 1/4 கப் பால், இரண்டையும் கடலை மாவில் கலந்து கொள்ளவும்.மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடவும். மீதமுள்ள நெய்யை சூடு செய்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரண்டியில் போட்டு தேய்த்து விட்டு,குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி கீழே இறக்கி குளிரச் செய்யவும். ஆறிய பின்பு, கடலை மாவு கலவையை எடுத்து அந்த பாகில் கலக்கவும். நன்கு கலந்த பின்பு ஒரு தட்டில் கொட்டி, செட்டாகச் செய்யவும். சிறிது நேரம் கழித்து விரும்பும் வடிவத்தில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம். ஒரு துண்டு 450 கலோரிகள் வரை இருக்கும்.
பால் - 1 லிட்டர். செய்முறை :- பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே காய்ச்சவும். தீயை குறைத்து வைக்கவும். பால் பாதியளவிற்கு சுண்டியவுடன் அதில் கல்கண்டு சேர்த்து கிளறவும். சக்கரை கரைந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை அனைத்தையும் சன்னமாக சீவி அதில் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கவும். சீதாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பாசந்தியுடன் சேர்த்து கலக்கவும்.சில்லென்று பரிமாறவும். இதன் கலோரி அளவு 460.
தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கி உப்பு - 1/2 டீஸ்பூன் கிரேவிக்குத் தேவையானவை : எண்ணெய் - 80 மி.லி. செய்முறை :- சோள மாவு, மைதா, உப்பு அஜினோமோட்டோ, மிளகாய் தூள், மிளகு தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான பால் கலந்து கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பன்னீர் துண்டுகளை அந்த மாவில் போட்டு 5 நிமிடம் ஊறவிடவும். அதை எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். கிரேவி தயாரிக்க :- சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் தக்காளி சாஸ் வினிகர், சோயா சாஸ், உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். சிகப்பி மிளகாய் விழுது [ மிளகாயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்]இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும். அடுத்து சோளமாவு கலவையை எடுத்து அதி ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பரிமாறும் பொழுது கிரேவியை திரும்ப சூடாக்கி, பன்னீர் பக்கோடாவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பாதி அளவிற்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைத்து விடவும். பரிமாறும் கின்னத்தில் போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரிக்கவும். |