சுவையான காளான் கறிமரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:36, 23 செப்டெம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் மொட்டுக் காளான் - 3 பாக்கெட் செய்முறை; 1. வெங்காயத்தையும், தக்காளியையும் நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். 2. வெங்காயத்தாளை பொடியாக வெட்டிக் கொள்ளவும். 3.காளான்களை நன்கு கழுவி ஒரு துணியின் மீது பரப்பி ஈரம் வற்றியதும் ஒவ்வொன்றையும் 2 துண்டுகளாக வெட்டவும். 4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில் சீரகம், பச்சை மிளகாய், காளான்கள் இவற்றைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி அதனுடன் வெங்காயத்தாளையும் சேர்க்கவும். பின்பு அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 5. அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும். 6. இதனுடன் இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தக்காளி இவற்றைச் சேர்க்கவும். 7. தக்காளி வெந்தவுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்பு அரைத்த முந்திரிப் பருப்பு, கடைந்த பாலேடையும் சேர்த்துக் கலக்கவும். 8. தீயைக் குறைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். 9. அத்துடன் வதக்கிய காளான்களையும் சேர்த்து கிளறி இறக்கவும். 10. வாணலியில் சிறிது நெய் விட்டு, உறுகியதும், கரம் மசாலாத் தூள், சீரகத்தூள் இவற்றைச் சேர்த்து குழம்பின் மேல் ஊற்றி மெதுவாகக் கிளறி இறக்கவும். 11. கொத்தமல்லித் தளையைத் தூவி அலங்கரிக்கவும். பவள சங்கரி திருநாவுக்கரசு. |