தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 2மரபு விக்கி இருந்துREACH Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:31, 29 மே 2010 அன்றிருந்தவாரான திருத்தம் தெரிந்த ஊர் தெரியாத செய்தி -2 விசாக பட்டிணம்போ(B)னி அமரேஸ்வரர் கோயில்வழங்கியவர்: மரபூர் ஜெய.சந்திரசேகரன்கடந்த நவம்பர் மாதம் நானும் நண்பர் அண்ணாமலை சுகுமாரனும் பணி நிமித்தம் காரணமாக, புவனேஸ்வரம் செல்ல நேர்ந்தது. வரும் வழியில், திருமதி ஜெயஸ்ரீ ஹட்டங்காடி எனும் ரீச் ஆர்வலர் எங்களைக் கட்டாயம் விசாகபட்டிணத்திலிறங்கையே ஆகவேண்டும். அங்கே ஒரு சிவன் கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது என்றும், அதனை புனரமைக்க திட்டம் தீட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினார். விசாகபட்டிணம் என்றதுமே, ஞாபகம் வருவது நண்பர் எழுத்தாளர் திவாகர் தான். அவரையும் தொடர்பு கொண்டோம். சந்தோஷமாக வாருங்கள் என்றழைத்தார். மிகுந்த சிரமங்களுக்கிடையில், பயண டிக்கெட்டுகளை மாற்றியமைத்து, விசாகப்பட்டிணம் சென்றடைந்தோம். மறுநாள், ஜெயஸ்ரீ தமது யோகா ஆசான் என்று ஒரு முதியவரை அறிமுகப்படுத்தினார். பி. வெங்கட் ரமண ராவ் என்ற அந்த பெரியவரும் அவரது அருமைப் புதல்வர் பி. வெங்கடேஸ்வருலுவும், பல பழையநூல்களை மின்னாக்கம் செய்து, பேழையாகவும் பி.டி.எஃப் கோபாகவும் மாற்றிக் கொண்டிருந்தனர். தெலுங்கு மரபுக் கட்டளை!!! (அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி. மருத்துவர் தி.வா தமிழுக்கு வழங்கிய கொடை ரகசியத்தை அன்று இரவே இருவருக்கும், வலைத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, செய்து காட்டியது தனிக் கதை!!)
திவாகர் அருமையாக் கோஷ்ட தேவதைகள், ‘கஷ்ட' தேவதைகளாக சிரமப் படுகிறார்கள் என்றும், அந்தந்த திசைகளைப் பார்த்து அமரும் தேவதைகளின் பார்வை நம் மேல் பட்டால் எத்தனை நன்மைகள் என்பதையும் சுந்தரத் தெலுங்கினில் விவரித்ததும், மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல், மக்கள் ஆமோதித்தனர். அவரது மகளும், வாயிலில் நான் சொன்ன சிலைகளை சுத்தம் செய்வதில் தன்னார்வத்தோடு பங்கு கொண்டார்.
வெங்கட்ரமண ராவும் அவர்தம் மைந்தர் வெங்கடேஸ்வருலுவும் எப்பாடு பட்டேனும் கோயிலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றனர். திவாகரின் கூற்றுப்படி, அமராவதிக் கரையில் உள்ள அமரேஸ்வரர் கோயிலுக்கும் இந்த கோஸ்தானி கரையிலுள்ள ஈஸ்வரர் கோயிலுக்கும் சம்பந்தம் உண்டு என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது. திவாகரிடமிருந்து இன்னுமொரு புதிய வரலாற்றுப் புதினத்தை எதிர் பார்க்கலாம்! கோயிலை பழைய நிலைக்கு மீட்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் வெங்கடேஸ்வருலு. 10000 லிட்டர் ஆஸிட் வரவழையுங்கள் என்றேன்! நிஜமாகத்தான். அத்தனை சுண்ணம்பையும் ஆசிட் ஊற்றி சுரண்டி எடுத்தால்தான் உள்ளே உள்ள சிலைகள், பிம்பங்கள், வேலைப்படுகள் தெரிய வரும். அது முடிந்த பின், மேற் கூறையின் கசிவுக்கான காரணத்தை அறிந்து அதை சரி செய்வோம் என்றேன். இப்பொது மே மாதம் கடைசியில் இந்த பதிவை இடமுடிகிறது. பார்ப்போம், ஆஸிட்டோடு அழைப்பு வருகிறதா என்று! இதை துக்கிச் சாப்பிடக்கூடிய வகையில் அருகிலேயே இன்னொரு அருமையான விஷ்ணு க்ஷேத்திரம் உள்ளது. அங்கே ஒரு போனஸ் காட்சி காத்திருந்தது. அதை அடுத்த பதிவில் பார்ப்போமா? |