கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 012

மரபு விக்கி இருந்து

Themozhi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:59, 14 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 

[இக்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் கட்டுரை ஆசிரியரால் மின்தமிழில் கல்வெட்டு வகுப்பு என்ற தலைப்பில் வழங்கப்பட்ட கட்டுரை]

 


         சற்றே கால இடைவெளிவிட்டு  மீண்டும் கல்வெட்டு எழுத்துகள் கற்போம்
பாடம் தொடர்கிறது. இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை அடிப்படையாக வைத்தே நாம் எழுத்துகளைக் கற்றோம். அவனுடைய காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைப்
பார்த்துக்கொண்டிருந்தோம். முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைச்
சென்ற வகுப்பில் பார்த்தோம். (காலம் கி.பி. 907-955). இப்போது  உத்தம சோழனின் காலத்துக் கல்வெட்டு ஒன்றையும் (கி.பி. 976 ) மற்றும் அதே காலத்தை ஒட்டிய 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றையும் பார்ப்போம்.


1             மயிலாடுதுறை வட்டம்-திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோயில்
               கல்வெட்டு.   அரசன் :உத்தம சோழன்.  காலம் : கி.பி. 976.

01-P1110769.JPG


கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  யாண்டு ஆறாவது திருவே
ழ்விக்குடி ஆழ்வார்க்கு உடையபிராட்
டியார் பிராந்தகன் மாதேவடிகளாரா
ன செம்பியந் மஹாதேவியார் குடு(த்)
த வெள்ளிக்கலைசம் ஒந்று இது நி
றை நூற்று நாற்ப்பத்து ஒரு கழை(ஞ்) 
சு இது பந்மாஹேச்வரர் ர(க்‌ஷை)

குறிப்புகள் :
 வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ -  கிரந்தம்
வரி  3   தே -  கிரந்தம்
வரி 4   மஹாதே  -  கிரந்தம்
வரி 7  மாஹேச்வரர் ர -  கிரந்தம்

02-notes - Kalvettu lesson-12.jpg

2           தஞ்சை வட்டம் கருந்திட்டைக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில்
             கல்வெட்டு. காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.


03-P1110768a.JPG



கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  இப்படைஇ
ல் இருபத்து இ
ரண்டு கல்லுகி(ழ)
(வந்) ஆனை காவன் தா
யார்ருக்கும் த(ன)
க்கும் இருபத்
தொன்று காசுபெற்றி

குறிப்பு :
வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ - கிரந்தம்

04-notes - Kalvettu lesson-12-a.jpg



___________________________________________________________

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

பங்களிப்பாளர்கள்

Themozhi

இப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2016, 08:59 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,637 முறைகள் அணுகப்பட்டது.