இறைவனைக் காண்போம்! கிளிகள் 2

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:52, 2 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
கூண்டுக் கிளி – 2
 
 
அவர்:  “அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”
அவள்: “என்ன கேட்டீங்க….?”
அவர்:  “பழுது கயிறு கேட்டேன்.”
அவள்:  “அப்படியா?  அதானே பாத்தேன்.”
வாசல் படி தாண்டியதும் அவர்:  “பழயதும் தயிருந்தான் கேட்டேன்.  என்னவாம் இப்போ அதுக்கு?”
 
நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.
 
ஓர் பட்டணத்துப் பேருந்தில்
கூட்டத்தில் அடை பட்டே
கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்
கண்ட உடன் கொண்டேன்
தையலவள் மேல் மையல்
நின்றவளுக் களித்தேன்
என் னிருக்கை
 
நன்றி என்றா ளவள்
கொஞ்சிடும் கிளியதன் குரலிலே
நன்றி சொன்ன போதேனோ
நாணிச் சிவந்த தவள் முகம்
கிளியதன் நாசி போல்
 
அன்று நிகழ்ந்த அறிமுகம்
தொடர்ந்தது தொடர் கதையாய்
தொடர் கதைக்கும்
முடிவொன்று தேவை யன்றோ
முடிந்ததென் தொடர் கதை
முடிச்சுகள் மூன்றினிலே
 
இன்றென் கிளி
எழுந்திருப்பதோ எட்டு மணி
கை சுடு காப்பி நான் தந்த பின்னே
கேட்கிறாள் என்னையவள்
இன்றென்ன சமையல் என்றே?
 
இக் குடும்பக் கூண்டில்
சிறையுண்ட கிளி
அவளா நானா
அறிந்திட வில்லை நான்
 
காதல் பறவைகள் என்றே
பெயரிட் டழைக்கிறார் எங்களையே
காதல் செய்திடச் சுதந்திரமாய்
சுற்றித் திரியவா விடுகின்றார்
கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்
வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே
 
மனிதருளுள் காதல் பறவைகள்
பறந்திடு கின்றனவே
சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட
பிறந்த தங்கள் வீடு விட்டே
 
கிளி யினம் எங்கள் இனம்
கிள்ளை மொழி எங்கள் மொழி
அழகு எங்கள் சொத்து
அதுவே எங்கள் கூற்றுவனோ
 
விடுதலை நாங்கள் கண்டிடும்
விடிவு நாள் என்னாளோ

காட்டினிலே சுதந்திரமாய்
சுற்றியே திரிந் திருந்தேன்
துணை எனக்குச் சேர்ந்திட
மரப் பொந்தினிலே
வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்
 
நெற் கதிரோ நல் பழமோ
நறுக்கெனக் கொட்டையோ
வேண்டியதை தின்று களித்தேன்
வேண்டும் வரை
 
கண்ணி வைத்தே
என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்
இறைவன் பறந்திடத் தந்த என்
சிறகினை வெட்டியே
கூண்டினில் அடைத்தான்
 
கைதனை அவன்
அசைத்திடும் போதே
அட்டை யொன்றை யெடுத்தே
அவன் கையில் தந்திடப் பழக்கினான்
செய்திட்ட காரியத்திற்காய்
சிறு தானியம் ஒன்றளித்தான்
வெகு மதியாய்
சோசியம் சொல்லிடுறேனாம் நான்
வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்
என்னை வைத்தே
 
என்று வரும் விடுதலை எனக்கு
எமன் தான் தந்திடுவானோ
அது எனக்கு
  
ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே
பெயர் அதற்கே அன்னையாம்
கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு
ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது
தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்
 
மெல்லெக் கற்றேன்
தவழ்ந்திட நின்றிட நடந்திட
நடந்திடக் கற்றபின்
கிட்டியதா சுதந்திரம்
முதுகினில் மூட்டை சுமந்தே
சென்றேன் பள்ளிக் கூடம்
 
படிப்பு முடிந்ததும்
பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே
வேலை தேடி யன்றோ
ஆலாய்ப் பறந்தேன்
 
வேலையும் கிடைத்தது
ஆனால் கிடைத்திட வில்லையே
இன்ப சுதந்திரம்
கால் கட் டென் றொன்றைப்
போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்
கல்யாணம் என்ற பெயரி லெனக்கு
 
பிள்ளைகள் பெற் றெடுத்தேன்
பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே
பெரிதாய் வளர்ந்த பின்னே
 
இன்று மில்லை சுதந்திரம் எனக்கு
வெளியே செல்ல நினைத்தால்
தடுத்திடுறார் என் கணவர்
கால்கள் இல்லையாம்
நிலையா யெனக்கு
தடுமாறிடு கின்றேனாம் சம
தரையிலும் நடந்திடவே நான்

நடராஜன் கல்பட்டு
 
--Geetha Sambasivam (பேச்சு) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2015, 12:52 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,378 முறைகள் அணுகப்பட்டது.