கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 26மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:43, 30 ஏப்ரல் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் பவழக்குன்று அழகானந்த மடம் (திருவண்ணாமலை) பவழக்குன்று மண்டபத்திற்கு உள்ளடங்கி, படாடோபம் ஏதுமின்றிப் பார்க்க மிகச் சாதாரணமாக இருக்கிறது. இந்த மடம் தோன்றக் காரணமாயிருந்தவர் அழகானந்தர். வேட்டை வலத்திற்கு அருகில் கண்டாச்சிபுரம் என்ற சிற்றூர் ஒன்று இருக்கிறது அவ்வூரில் தோன்றியவர் அழகானந்தர். அவர் நல்லொழுக்கமும், தெய்வ பக்தியும் கொண்ட ஆசார சீலர். இயல்பாகவே பற்றற்றவராகவே இருந்தார். ஒருநாள் அவர் தெருவில் தறி நெய்து கொண்டிட்ருந்தபோது, தீண்டப்படாத பெண்மணி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்த உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டார். அதைக் கண்ட உறவுக் காரர்கள் அவர் மீது ஆத்திரம் அடைந்தனர். ஒருவர் அழகானந்தர் கன்னத்தில் ஓங்கி அறைந்தே விட்டார். அந்த ஆகாரத்தைத் துப்பி விடும்படி எல்லோரும் அவரைக் கட்டாயபடுத்தினர். அவரும் துப்பினார். அவர் வாயிலிருந்து நறுமணம் கமழும்மலர்கள் கீழே விழுந்தன. அவரை அடித்தவர் இதைக் கண்டு மிக்க வேதனைப்பட்டார். சுற்றி இருந்தவர்கள் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் ஒரு மகான் என்பதை அறிந்து தங்களை மன்னித்தருளும்படி வேண்டினர். தக்க குரு ஒருவரிடம் உபதேசம் பெற்று அழகானந்தர் திருவண்ணாமலைக்கு வந்து துறவையாகப் பவழக் குன்றின் அடிவாரத்தில் 1850 முதல் பரிபூரணம் அடைந்த 1884 வரை வாழ்ந்து வந்தார். ஒரு நாயரின் வயிற்று வலியை, அழகானந்தர் தீர்த்து வைத்தார். நாயர் பெரும் செல்வந்தர். பணத்தைக் கொண்டு வந்து அழகானந்தரின் காலடியில் கொட்டினார். சுவாமிகள் அதைத் தொடவில்லை. மாறாக பவழக்குன்றின் மீதுள்ள பவழகிரீசுவர் ஆலயத்திற்குத் திருப்பணிகள் செய்யும்படி நாயரிடம் கேட்டுக் கொண்டார். அப்படியே செய்து வைத்தார் நாயர். பின்னர் ஆண்டுதோறும் கோயில் ஆராதனைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பி வைத்தார். இந்த மடம் கோவிலூர் ஆதீனத்துக்கு உட்பட்டது. |