கோவிலூர் ஆதீனம் - அறிமுகம்

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:18, 11 டிசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அக்டோபர் 4, 2013

வணக்கம்.

தமிழகத்தின் கோவிலூர் ஆதீனம் நிகழ்த்திவரும் சமூக சமயத்தொண்டினை பகிர்ந்து கொள்ளும் சில விழியப் பதிவுகளை அண்மையில் வெளியிட்டிருந்தோம்.


அதன் தொடர்ச்சியாக இவ்வாதீனத்தை அறிமுகப்படுத்தும் தகவல்களின் தொகுப்பாக பல தகவல்களை ஒவ்வொன்றாக இந்த இழையில் பதிந்து வெளியிட உள்ளோம். இப்பதிவுகள் அடங்கிய நூலினை ஆதீனத்தின் திருமடத்திற்கு நான் நேரில் சென்றிருந்த போது ஆதீனகர்த்தரவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கினார்கள். இந்த நூலில் ஆதீனத்தை அறிமுகப்படுத்தும் பெரிய சிறிய கட்டுரைகளும் பதிவுகளும் அடங்கியிருக்கின்றன. வரலாற்றுப் பதிவு என்றும் இதனைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து இங்கு வெளியிட உள்ளோம். இவை மரபு விக்கியில் தனிப்பகுதியில் தொகுக்கப்படும்.


இக்கட்டுரைகளைத் தட்டச்சும் பணியை கீதா சாம்பசிவம் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். முதல் பதிவின் முதல் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது. நவராத்திரி விஷேஷம் தொடங்கும் நன்னாளில் இப்பதிவுகள் தொடங்கப்படுவதை தனி விஷேஷமாகக் கருதுகின்றேன்.

அன்புடன்

சுபாஷிணி ட்ரெம்மல்

[தமிழ் மரபு அறக்கட்டளை]

--Ksubashini (பேச்சு) 08:14, 11 டிசம்பர் 2013 (GMT)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 11 டிசம்பர் 2013, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,219 முறைகள் அணுகப்பட்டது.