தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-7மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:11, 28 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 18 தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-7 முனைவர் கி.லோகநாதன் 2012
34.0
நுண்கலை இலக்கியங்கள் பண்டு தொட்டே தமிழ் பண்பாட்டில் ஆடலும் பாடலும் மற்றும் ஏனைய நுண்கலைகளும் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், இவற்றை நுணுக்கமாக அலசி ஆய்ந்திருப்பதோடு அவற்றின் அடிப்படைகளையும் ஆழ விசாரித்து பல நூற்களை எழுதி இருப்பதும் அறிஞர்கள் அறிந்த ஓர் உண்மையாகும். இவற்றில் அடியார்க்கு நல்லார் தமது சிலப்பைதிகார் அரங்கேற்று காதையிலும் பிற இடங்களைலும் வரும் உரையில் தரும் விளக்கங்கள் மிக விரிவானவை என்பதொடு, பல இறந்துபோன இடைச் சங்க கடைச் சங்க நூற்களையும் பெயரிட்டுக் காட்டி இறவாது அன்றும் கிடைத்துவந்த சில சூத்திரங்களையும் மேற்கோல் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். அவர்காலத்தில் பழகி வந்த பல நூற்களும் இறந்துவிட்டன. ஆயினும் ‘பஞ்ச மரபு’ போன்ற சில அரிய நூற்களும் இன்றும் முற்றாகக் கிடைப்பது இறையருளேயாகும். இதேப் போன்றுதான் ‘பரத சேனாபதியம்’ எனும் நூலும் ஆகும். பிறகாலத்தில் எழுதபப்ட்ட ‘மாபரத சூடாமணி’ போன்றவையும் இன்னும் பல இசை நூற்களும் உண்டு. இங்கு நாம் இவற்றையெல்லாம் மிக சுருக்கமாகவே காண இருக்கின்றோம், இங்கு பரிபாடல் போன்ற கடைச் சங்கப் பாடல்களும் தேவாரத் திருமுறையிலும் திருப்புகழ் போன்ற பத்தி நூற்களிலும் ஆடலும் பாடலும் பேரளவில் பயில்வதையும் காண்கின்றோம். இன்றளவு இவை பண்டைய இசை மரபு வழுவாதேப் பாடப்பட்டும் வருகின்றன 34.1 சுமேருத் தமிழில் நுண்கலை இலக்கியங்கள் இவற்றில் நமக்கு வியப்பைத் தருகின்ற ஓர் நற்செய்தி சுமேருத் தமிழில் ஆடலையும் பாடலையும் பற்றி மிக ஆழமான ஆய்வுகள் இருப்பதுதான் மூன்றாம் ஊர் பரம்பரையின் கடைசி மன்னனாகிய சூல்கி (c. 2000 BC), மாவீரன் மட்டுமல்ல பல நெடும் பாடல்களைப் பாடிய பெரும்புலவனும் ஆவான். அவனது பாடல்கள் பத்துப்பாட்டில் தொகுகப்பட்ட பாடல்களைப் போன்றவை ஆகும். அதில் ஒன்றே ‘முதரீபியம்’ எனும் Hymn B ஆகும். அதில் பல வரிகள் பல நுணுக்கமான இசை ஆய்வினப் பற்றிய பல குறிப்புக்களைக் கொண்டவையாக உண்டு. அவற்றை சில வரிகளைக் கீழே தருகின்றேன். Sulgi's Hymn B ( Mutaribiyam) 155. Sul-gi lugal-Uri-ma-me-en (I, Sulgi, the king of Ur ) 156. u nam-nar-ra gu-mu haba-sum (Dedicated myself also to music) 157. nig-na-me-bi la-ba-da-an-gil-en (Nothing related to it was too complex for me )
158. tigi a-da-ab nam-nar su-du-a buru dagal-bi mu-zu (I penetrated the depth and width of the consummate musical training of the tigi and adab compositions )
162. gis.gu-us gis.za-mi-a-kam-ma sag-ga mi-ni-zu (I learnt the sweetness of the thirty(?) stringed instrument and of the zami
34.2 இவ்வாறு செல்கின்றது சூல்கியின் இசை நுணுக்கங்கள். ‘நாரனம்’ (nam-nar-ra) யாழ் (al) போன்ற அழகிய தமிழ்ச் சொற்கள் இவ்வரிகளில் பயில்வதைக் காண்க. பிற வரிகளில் su-bar-ra> சுவரம் என்ற சொல்லும் பயில்கின்றது இன்று விளங்கும் அதேப் பொருளொடு. ‘நார்’ என்ற தமிழ் வேரிலிருந்து ‘நார்’ என்ற இசைக் கருவியும் ‘நாரனம்’ என்ற கருவியிசையும்(instrumental music) வளர்ந்துள்ளதைக் காண்க. இதனால் தெய்வப் பாணன் ‘நாரதர்’ என்ற புராணப் புலவனும் தமிழ் வழக்கில் வந்திருந்தவன் என்றும் தெளிவாகின்றது. பிற்காலத்தில் பல புராணக் கதைகளோடு, தமிழ் நாரதர் வடமொழிக்கும் சென்றுள்ளான் போலும் 35.0 சுமேரு கோயில்களில் ஆடல் பாடல் கடந்த 2500 ஆண்டுகளாக எவ்வாறு கோயில்களிலேயே நுண்கலைகளை தெய்வீகக் கலைகளாக தமிழர்கள் வளர்த்து வந்துள்ளனரோ அதேப் போலத்தான் சுமேருத் தமிழர்களும். அன்று தொட்டே நுண்கலைகள் கோயில்களிலேயே பெரிதும் வளர்க்கப்பட்டதையும் ஆயப் பட்டதையும் பல சுமேருத் தமிழ் பாடல்கள் நமக்குக் காட்டி நிற்கின்றன. சான்றாக காசிக் கோயில் பாட்டுகளிலிருந்து ( Kes Temple hymns) ஒன்று:
Kes Temple Hymns :The Seventh Hymn 103 e-ku KU-bi e-nun ( The Holy temple, whose ...... is the princely temple)
இல்கோ(>கோயில்) KU-பி இல் நுண்ணே ( e-ku > il koo . Ta. koo-il> kooyil, koovil: temple ; nun-e Ta. nunnee : lofty and hence excellent) 104. e-kes-ku KU-bi e-nun) (The holy Kes temple, whose .... is the princely temple)
105. e en-bi (d) a-nun-na-mes ( The temple , whose lords are the Anunna-gods)
இல் ஏண்பி (தெய்) ஆனுன்னா மேயெஸ் ( en Ta. eeN> veeN> veeL: lord, ruler etc. . veeL> veeLir: the kings of the ancient Tamil kingdoms. a-nun-na> Ta. vaan-nunna: the beings concealed in the skies and hence the heavenly beings, the gods who are there with the invisible mantra-bodies; me-s, me-es Ta. -icu, iccu etc. Now a singular marker of the non person gender as vanticcu , pooniccu etc. Also for the feminine gender) 106. nu-es-bi giri-la e-an-na-me-es ( Whose nu-es priest are the sacrificers ? of Eanna)
நூல் இசைபி கிரிஅலை இல் அன்னை மேயசு ( nu-es Ta. nuul-icai: reciting verses Ta. nuul: a text, nuval: to utter ; giri Ta. kiri: that which are extended and hence the legs here. la Ta. alai: to roam about. an-na Ta. annai: Mother Goddess) 107. e-e lugal-bur-ra am-mi-gub ( The lugalburra- priest stepped up to the temple)
இல்லே உளுகள் புரம் ஆம்மே குப்பு ( bur-ra Ta. puram: fortress, citadel, an enclosure etc. gub Ta. kuppu, kappu , kuntu etc. : to squat) 108. en-du sa ese-la am-mi-in-la ( The good en-priest ... held the lead-rope? suspended)
வேந்து சான் இசைஅழை அழைமின் ஆம் ( es, ese Ta. icai: music, song etc. la Ta. azai: to invite, call etc. ; en-du Ta. veeNtu: the Great one, the king etc.) 109. a-tu sibir su bi-in -du ( The atu-priest held the staff)
ஆடு சிவிறி சூர் பியின் எடு ( a-tu Ta. atu: that ( the non person object) sibir Ta. civiRi : the fans made of fine hair. Also see Ta. cavuri: hair attachments) 110. tu-e a-ur-ra-a am-mi-tum ( The ... brought the gathered waters)
தூவே ஆல் ஊருவ டூமின் ஆம் 111. lal-e ki-ku-ga am-mi-in -tus ( The ..... took his seat in the holy place)
இலாலியே கீழ் கோக துன்ஞுமின் ஆம் 112. enkum-e-ne ara ki am-ma-gal-le-es ( The enkum bowed down in prayer)
ஏண்கும்மினே அறை கீழ் கால்லியிசு ஆம் Enkummu: those who dance or remain in deep silence , ara : Ta. aRai: room 113. pa-ses--e-ne kus mu-un-sig-ge-ne ( The pases beat on the (drum-) skin )
பா சிசுயினே கோசம் முன் சீக்கினே ( pa Ta. paa: persons, -pa: the third person plural marker; ses Ta. cicu: child, ciiden : the student < Sk sisya; kus Ta. koocam: loud noise made as a group sig-ge Ta. ciikku: to beat) 114. e-sub uru-sub-a mu-ni-ib-be-e-ne (They recited the e-sub and uru-sub (verses)
இல் சுபம் ஊரு சுபம் முனியிப்பியினே (sub Ta. cubam: safety security and welfare; ib-be Ta. immee: to mutter , to hum) 115. si-am-ma-ke gum-ga mi-ni-ib-za ( The bull's horn kept sounding)
சீ ஆம்மக்கே கும்மக இயம்சீ மினே (si Ta. cii : the peak, something sharp? cimam: the hill top, peak ; am-ma Ta. amaa: wild cow; gum-ga Ta. kummu: to crowd around as a herd) 116. (gis) al-gar-sur-ra suh-sah mi-ni-ib-za ( The drum sticks kept beating)
கிச்சு யாழ் கால் சுற்றுவ சூசா மினி இயம்சிவ ( al Ta. yaaz: harp gar-sur-ru Ta. kaal cuRRu : round legs? ) 117. tigi nun-du-ge mu-un-du-a ( The " good prince" played the tympanum for them)
திகி நுன் துங்கக்கே முன் எடுவ 118. e al-du giri-zal-bi al-du ( The temple is built; its abundance is good!)
இல் வளத்து கீரை சால்பி வளத்து 119. e-kes al-du giri-zal-bi al-du ( The Kes temple is built; its abundance is good)
இல் கேசி வளத்து கீரை சால்பி வளத்து 120 nin-bi DIN-bi mu-un-tus ( Its lady has taken a seat in its ...)
நின்பி DIN-பி முன் துஞ்சு 121. (d) nin-hur-sag-ga nin-bi DIN-bi-a mu-un-tus ( Ninhursag, its lady , has taken seat in its ...)
நின் உயர் சாங்க நின்பி DUN-பிய முன் துஞ்சு இப்பாடலில் பல இசைக் கருவிகளும் கலைஞர்களும் குறிக்கப்டுவதைக் காண்க. மேலும் மிக முக்கியமாக கோ-இல் என்ற சொல்( eku > il koo> இல்-கோ> கோயில்) பயிலுவதைக் காண்க. ஆடுநர் பாடுநர் என்பாரும் யாழ் கொம்பு போன்ற இசைக்கருவிகளும் கோயில் சுபம் ஊர் சுபம் தொடர்பான வாழ்த்துப் பாடல்கள் இசைகபடுவதையும் அதனால் கோயிலும் ஊரும் நல் வளத்தோடு திகவதுமாக கூறப்படுவதைக் காண்க. ஆடல் பாடல் என்பவை மக்களைத் தூண்டி நலமே உழைக்கவைத்து அதன்வழி நாடே வளமை மிக்க ஒன்றாக ஆக்கப்படும் என்ற மெய்யறிவு குறிப்பும் இழையோடி வருவதைக் காண்க. இதனால்தான் போலும் வரலாற்றுத் தொடக்கக் காலதிலிருந்தே தமிழர்கள் இந்த நுண்கலைகளை வளர்த்துள்ளனர் போலும். மேலும் இறைவனையே ஆடவல்லானாகக் கண்டவர்கள், ஆடலையும் பாடலையும் தெய்வீகமானக் கலைகளாக வளர்த்திருப்பதும் அது இன்றளவு தொடர்வதும் வியப்பிற்குறிய ஒன்றல்ல. தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 19
36.0 கடைச் சங்க காலத்தில் நுண்கலைகள் இடைச் சங்க நுண்கலை நூற்கள் பெயரளவில் தான் இருக்கின்றன அவற்றைப் பற்றி நாம் யாதும் கூற முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில் இப்படிப்பட்ட நூற்கள் கடைச் சங்கத்திலிருந்தும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆக ஆங்காங்கே கிடைக்கும் குறிப்புக்களை வைத்தே நாம் அலச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நல்வாய்ப்பாக நல்ல பல குறிப்புகளையும் செய்திகளையும் உடையதாக பரிபாடலும் பத்துப் பாட்டில் ஒன்றாகிய ‘மலபடுகடாம்’ என்ற பாடலும் ஓரளவு நமக்கு உதவுகின்றன. இவை எல்லாம் கி.மு 200 வாக்கில் தோன்றிய நூற்களாக இருக்கலாம். 36.1 பரிபாடலில் இசைக் குறிப்புக்கள் பரிபாடல் தொகுப்பில் அநேகமாக எல்லாப் பாடல்களும் இசைப்பாடல்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகின்றது. பல பாடல்களை பாடியவர் யார், இசை வகுத்தது யார் என்ன பண் என்ற குறிப்புக்களும் உண்டு, இக்குறிப்புக்களே இந்த ஆய்வுக்கு உதவியாக இருக்கின்றன. திருமாலுக்குறிய இரண்டாம் பாடலை பாடியவர் கீரந்தையார் என்றும், பண் வகுத்தவர் நன்னாகனார் என்றும் பண்ணும் பாலையாழ் என்று ஓர் இசைகருவியின் பெயரே தரப்பட்டுள்ளது, மூன்றாவது பாடலும் நான்காவது பாடலும் திருமாலுக்குரியாதகவே இருக்க அவற்றைப் பாடியவர் கடுவன் இளவெயினார் என்றும் பண் வகுத்தவர் பெட்டாகனார் என்றும் பண் அதே பாலையாழ் என்றும் குறிக்கப்படுள்ளது. மேலும் வானுலகில் தேவர்கள் திருமாலைப் பாடி புகழ்வது போல மக்கள் பூவுலகில் பாடி மகிழ்ழ்வதாக ஓர் குறிப்பும் உண்டு. காண்க : திருமால் வாழ்த்து (3)
தீசெய் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசில் ஆயிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் மாசும்பு ஒழுகுபுனல் வறன அன்னச் 25 சேவயாச் சிறகாப் புலர்த்தியோய் எனவும் ஞாலத்து உறையும் தேவரும் வானத்து நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர் பாடும் வகையேஎம் பாடல்தாமப் பாடுவார் பாடும் வகை!
என்றவாறு பல செய்திகளோடு இக்குறிப்பு செல்கின்றது. இங்கு வராக அவதாரம், அன்னப்பறவை அவதாரம் போன்றவை குறிக்கப்படுடுவதைக் காண்க. அத்தோடு பூவுலகில் திருக்கோயில்களில் அடியார்கள் பாடுவது ஞாலத்து வானத்து தேவர்கள் திருமாலைத் துதித்து பாடுவது போன்றே பாடுகின்றனர் என்று இப்படிப்பட்ட தெய்வப்பாடல்களுகு ஓர் இலக்கணம் கூறபப்டுவதையும் காண்க. 36.2 மலைபடுகடாத்தில் இசைக் குறிப்புக்கள் ‘மலைபடுகடாம்’ என்பது பத்துப்பாட்டுகலில் ஒன்றானது, இரணிய முட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் நல்லாசிரியரால் இயற்றப்பட்டது. சிறுபானாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை போல இதுவும் இசைக் குறிப்புகள் பலவற்றைக் கொண்டதாகத் தெரிகின்றது. இதன் முதல் சில வரிகளை மாத்திரம் இங்கே தருகின்றோம்:
திருமழை தலையிய இருள்நிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண் அமைத்துப் திண்வார் வசித்த முழவொடு ஆகுளி நுண் உருக்குற்ற விளங்கடர் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு 5 கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு விளைப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி 10 நொடிதரு பாணிய பதலியும் பிறவும்
. . . .
இவ்வரிகளில் இமிழிசை முழவு, ஆகுளி, பாண்டில், கோடு. யானை பிளிறுவதுபோன்ற குரலுடை தூம்பு, இனிய குழல் அரிகுரல் தட்டை எல்லரி பதலி போன்ற இசைக்கருவிகள் வருணிக்கப்படுவதைக் காண்க. பிற வரிகளில் பேரியாழ் என்ற ஓர் யாழும் சுட்டப்படுகின்றது. 36.3 சிலம்பினில் நுண்கலைகள் மேலே குறிக்கப்பட்டவாறு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் (கி.பி 300?) ஓர் முத்தமிழ் காவியம். அதில் அடியாருக்கு நல்லார் உரையுடன் கூடிய அரங்கேற்றுக் காதை பண்டைய தமிழர்களின் நுண்கலை ஞானத்தை திறம்பட காட்டுவதாக அமைந்த ஓஎ பெருநூலே யாகும். அதிலிருந்து சில வரிகள். அரங்கேற்றுக் காதை ஆடல் ஆசான் எனும் பகுதி
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பல்வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து--- ஆங்கு 15 ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியிற் கொளுத்தும் காலை பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்ட் வகை அறிந்து கூத்துவருகாலை கூடை செய்தகை வாரத்து களைதலும் பிண்டி செய்தகை ஆடலிற் களதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி ஆடற்கு அமைந்து ஆசான்---- தன்னொடு
. . . . . . .
என்று செல்கின்றது. இதேப்போன்று இசையோன் நன்னூற் புலவன் தண்னுமை முதல்வன் குழலோன் யாழ்ப் புலமையோன், அருந்தொழில் அரங்கம் தலைகோல் வாரப் பாடல் இசை முழக்கம் தேசிக் கூத்து மார்க்கக் கூத்து என்றவாறு விளக்கம் விரிகின்றது. மூலத்தை அடியார்க்கு நல்லார் உரையுடன் அல்லது அதனைத் தழுவி எழுதப்பட்ட உரைகளையும் படித்து மகிழ்க. விரிப்பிற் பெருகும். 36.4 இனி அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டிய ‘பஞ்சமரபு’ எனும் நூல் இன்றளவு வழக்கில் உள்ளதாக இருக்க ஏனைய பல நூற்கள் முற்றிலும் இறந்துவிட்டன. ஆனால் பிறகாலத்தில் தோன்றியவையாக பரதசேனாபதியம் என்றும் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘ததசரூபகம்’ (கி.பி 1000?) என்றும்’ ‘அபிநய தர்ப்பணம்’ என்றும் மிக விரிவாக தமிழிலேயே இயற்றப்பட்ட ‘மாபரத சூடாமணி’ என்றும் இன்னும் பலவுமாக பல நூற்கள் இருக்கின்றன. . சமீப காலத்தில் ஆராய்ச்சி நூலாக ஈழத்திலிருந்து திருமதி கார்த்திகா கணேசர் என்னும் அம்மையாரால் எழுதப்பட்ட ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றும் ‘இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ என்றும் மேலும் இசையைப் பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல நூற்களும் உள்ளன. ஓர் சிறிய குறிப்போடு இந்தப் பகுதியை முடிக்கின்றோம். ‘பரதம்’ என்ற சொல் தூய தமிழ் சொல்லாகும். சுமேருத் தமிழில் ‘பர’ என்றால் அசைதல் இடம் பெயர்தல் என்றெல்லாம் பொருள் படும். இதுவே நடனம் என்ற பொருளில் விளங்கியும் இருக்கவேண்டும் ‘தாண்டவம் ‘நடனம்’ என்ற சொற்கள் எவ்வாறு தூய தமிழோ அதேப் போலத்தான் ‘பரதம்’ என்ற சொல்லும். வடமொழிவாணர்கள் கூறுவது போல ‘பாவம்’ ‘ராகம்’ ‘தாளம்’ என்ற மூன்று சொற்களின் முதல் எழுத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது ஓர் அபத்தமான கேவலமான கற்பனையாகும். நுண்கலை இலக்கியங்கள் முற்றும் |