ஆக,மீயம்: தந்திராயணம்

மரபு விக்கி இருந்து

Ulagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:47, 25 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திராவிட மெய்யறிவு வரலாறு- 4.1

படலம் நாங்கு: ஆகமீயத்தின் தந்திராயணம்

முனைவர் கி.லோகநாதன்


A: உடற்றொழில் எந்திரங்கள்

1.0

அறிவோடு பதிகின்ற எந்திரங்கள், ஓர் திசையின் வழி அறிவின் தொழிலை செலுத்தும் ஆனால் தானே தொழிலை தொடங்குதலும் தொடர்தலும் நிறுத்தலும் செய்யாது. அதற்கு ஆற்றலும் அந்த ஆற்றலைத் தருவதும், தொடர்ந்து அருள்வதும் பிறகு நிறுத்தலுமாகிய இன்னொருவகைய ‘இயக்க எந்திரங்கள்’ ஆன்மாவோடு அந்த அறிவு எந்திரங்களோடு உடன் பதிந்தாலே ஒன்று நிகழ்ச்சியாகின்றது, அறிவு படைக்கின்றது, அசுத்த மாயா வுலகில் ஓர் தனு உளதாகின்றது. இந்த இயக்க எந்திரங்களே அறிவினை உடலினை உடல் உறுப்புக்களை இன்னும் இதனைப் போன்ற பிறவற்றையும் இயக்கி ஓர் உயிர் உயிர்த்து வாழ்ந்து சீவிக்க உதவுகின்றன.

1.1

இவை பலவகைய ஆகும்: சுவாச எந்திரம், பொறிபுல எந்திரம், சீரண எந்திரம், கழிவு எந்திரம், உற்பத்தி எந்திரம், விருத்தி எந்திரம் என்றவாறும் இன்னும் பலவாறும். இந்த எந்திரங்கள் மேல் சாதாரண நிலையில் ஆன்மாக்களுக்கு அதிகாரமும் இல்லை, அதனால் ஆட்சியும் இல்லை. அவை தானேயாய் செயல்பட்டு உடலோடு உயிர்கள் நன்முறையில் வாழ்ந்து பற்பல அனுபவங்களைப் பெற்று கற்று அறியாமைப் போக்கி மேம்பட உதகின்றன.

1.2

இந்த எந்திரங்கள் முறையாக ஒழுங்fகாக செயற்பட்டாலே அறிவினை செலுத்தும் அறிஎந்திரங்கள் ஒழுங்காக நன்றாக செயல்படும் இல்லையேல் சோர்ந்து விழும் அல்லாது விபரீதமாக தாறுமாறாக செயல்படும், நியதி பிறழ்ந்து செயல்படும் அறிஎந்திரங்களால் பயன் ஒன்றும் இல்லை.

1.3

வேண்டிய ஆற்றலைத் தந்து ஆயுள் விருத்தியைத் தரும் எந்திரங்கள் தெய்வங்களால் ஆட்சி செய்யப்படுகின்றன. இந்த தெய்வங்கள் அறிவோடு கலந்து நிற்கும் அறிவாக, அத்தோடு அனைத்து தெய்வங்கட்கும் பரமாகிய பரசிவத்துடன் ஒன்றித்தும் இவ்வாறு இருவகைய அயிக்கியங்களோடு செயல்படும் திறத்தன. இதனால் மேலான பரசிவனின் ஆணைக்கு உட்பட்டவையாகவும் திகழ்கின்றன்.

2,0

இனி இத்தகைய உடற்கூற்று எந்திரங்களை தொழிற்படுத்தும் பிறிதோர் வகைய பொது எந்திரங்களும் உடலின் அங்கமாக இருக்க வேண்டும். அவையே ஒருவன் சிசுவாக பாலனாக விடலையாக இளைஞனாக ஆடவனாக விருதனாக பற்பல பருவங்களை எடுப்பதற்கும், எய்திய பருவத்திற்கு ஏற்ப பற்பல செயல்களை புரிவதற்கும் ஆணை பிறப்பிப்பதாக இவை விளங்குகின்றன. காட்டாக சுவாச எந்திரம் வாழ்வின் முடிவு வரை தொழிற்பட, விருத்தி எந்திரம் விடலைப் பருவத்தில் வெளிப்பட்டு விருத்தப் பருவத்தில் செயல்படா வகையில் முடக்கப்படுகின்றது.

2.1

இவ்வாறான பொது எந்திரங்கள் எண்ணற்றவையாக. ஒன்றில் ஒன்று அடங்கி மேலே மேலே சென்று பிரபஞ்சத்தையே செலுத்தும் இறையாணையோடு ஒழுங்காக அடுக்கி நிற்கின்றன.

3.0

இந்த இயக்க எந்திரங்கள் சங்கமித்து ஓர் ஆன்மாவுடன் வரும் உடற்ரொழில் எந்திரங்களை அசுத்தமாயையொடு கலந்து தொழிற்படுத்த அந்த ஆன்மா உலகில் உழலும் ஓர் உயிராக பிறப்பெடுக்கின்றது, இந்த உடற்றொழில் எந்திரங்கள் இருந்தும் இயக்க எந்திர்ங்கள் அகல மரணம் சம்பவிக்கின்றது.

3.1

இவையும் இறைவனது எண்வகை திருவிளையாடல்கள் வழியாகவும் பஞ்சகிருத்தியங்கள் வழியாகவும் சித்திப்பனவே யாகும். இதனால் இவை அனைத்டும் இறைவனது தந்திரங்கள் அதாவது ஆன்மாக்களுக்கு ஞானம் புகட்டும் வகையில் அருள்பாலிக்கும் உத்திகள் ஆகின்றன.

தொடரும்

திராவிட மெய்யறிவு வரலாறு- 4.2


4.0

இனி இடையே பல்வேறு உடல் நோய்கள் உளநோய்கள் காய்ங்கள் புண்கள், உறுப்புச் சிதிலங்கள் போன்றவை சித்திக்கும் போது, அவற்றை குணப்படுத்தும் மருந்து எந்திரங்களும் சிகிச்சை எந்திரங்களும் இன்னும் இதுபோன்ற பிறவும் வெளிப்பட்டு செயல்படும் என்க

5.0

உடல் நலக் குறைவின்றியும் உளச் சுகத்தோடும் வாழ்ந்து நெடுநாள் சீவித்திருப்பதற்கு உடற்றொழில் எந்திரங்களோடு இந்த மருந்து எந்திரங்களும் சிகிச்சை எந்திரங்களும் இன்னும் இதுபோன்ற பிறவும் வேண்டுவதாயிற்று, இவற்றை தொழிற்படுத்தும் பொது எந்திரங்களும் அவற்றை தொழிற்படுத்தும், இறையாணை வழிக்குக் கொண்டு செல்லும் தெய்வங்களின் அருளும் அவற்றின் செயல்களாகிய தந்திரங்களும் மிகவும் தேவை என்றறிக.

5.1

ஆற்றலை , பல்வேறு சத்திகளை ஊட்டுவன தெய்வங்கள். ஆக ஆன்மாக்கள் அவற்றோடு நெருங்கி தோழமையோடு இருக்க, உடலில் ஆற்றல் ஊறிக்கொண்டே இருந்து மேற்கூறிய பல்வேறு எந்திரங்களை தொழிற்படுத்தி, ஆயுளை நீட்டியவாறு நெடுங்காலம் நலமே வாழ உதவும்.

6.0

இவற்றிற்கு மாறாக இருள் சத்திகளாகிய அரக்கர்கள் அசுரர்கள் அவுணர்கள் பேய்கள் பிசாசுகள் வக்கிர பூதங்கள் போன்றவற்றோடு தொடக்குற்று வாழ்ந்தால், ஆணவ மல சேர்க்கை அதிகரிக்கும். அதனால் இருக்கின்ற ஆற்றலும் இல்லாமற் போக, படிப்படியாக இந்த எந்திரங்கள் செயலிழந்து உடல் நோய்களையும் மனநோய்களையும் கொண்டு வந்து அகால மரணமடையச் செய்யும் என்றறிக.

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 4.3

B : குண்டலினி எந்திரங்கள்

7.0

தந்திரங்கள் என்பன இறைவனது கிருத்தியங்கள் என்பதொடு ஆன்மாக்கள், நின்றிலங்கும் இறையருளை யாதோ ஓர்வகைய உத்தியால் பெற்று பற்பல செய்து மகிழ்வதாகும். அருளோடு புணர்ந்து ஆற்றலை ஈட்டுவதால் இந்த உத்திகளை குண்டலலினி யோகம் சிவயோகம் தந்திரக்கலை என்றெல்லாம் ஞானிகள் கூறுவர்.

7.1

உலகத்தில் நின்றிலங்கும் ஆற்றல் கிடங்கு குடிலை எனப்படும். பரசிவன் இதனிற் பதிந்து நாதம் விந்து எனும் சிவ தத்துவங்களாக பிரிந்து, சுத்தவித்தை ஈசுரம் சதாசிவம் என்றவாறு வரும் நவ சிவதத்துவங்களாக அல்லது சிவசாதாக்கியங்களாக விரிந்து இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றான்.

7.2

எல்லா மந்திரங்களும் எழும் நிலனே குடிலை என்பது. இதன் சொரூபம் ஓங்கார வடிவமாகும். அறிவினால் அறியக் கூடிய முடிவான குடிலையின் சொரூபம் இதுவே.

7.3

இதனையும் ஊய்ந்து கடந்து செல்லும்போதே, பரசிவனின் தற்சொரூப அறிவு சித்தியாகும்.

8.0

பிறப்பெடுக்கும் எல்லா உயிர்கட்கும் அவற்றின் பிராத்த கன்மத்தை ஒட்டி குண்டலினி ஈட்டம் அமைகின்றது. இதனாற்றான் ஆயுள் பல்வேறு வகையில் வேறுபட அவை உயிர் வாழ்ந்து பற்பல செய்து கற்கின்றன.

9.0

குண்டலினி எந்திரத்தின் மூல வடிவம் காமவேட்கையைத் தொழிற்படுத்தும் வடிவமாகும். இதுவே சந்தான விருத்திக்கு அடிகோல்வதுடன் இன்ப நுகர்வுகட்கு காரணமாக இருப்பது. ஆண்களாய் பெண்களாய் படைத்து, வெவ்வேறு வகையான உடலையும் உள்ளத்தையும் தோற்றுவித்து, ஒருவரை ஒருவர் ஆழ விரும்பி கலவி செய்யுமாறு காமவேட்கைகளை எழுப்பி அதன் வழி திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி. குழந்தைகளை ஈன்று வளர்க்கின்ற சூழல்களை உருவாக்குவது இந்த குண்டலினி எந்திரமே.

9.1

இந்த குண்டலினி எந்திரம் வெளிப்பட்டு திறம்பட செயல்படும் போது. உடல் இளமைப் பொலிவுடனும் வீறுடனும் திகழும். அயர்வு எளிதில் வராததாய், கடினமான உழைப்பிற்கு வேண்டிய ஆற்றலைத் தந்து உதவுவதாயும் அமையும். நோய்கள் வந்தாலும் அவற்றை எளிதில் வீழ்த்தும் சத்தி உடையதாகவும் உடல் இருக்கும்.

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 4.4

10.0

ஞான வாழ்க்கை வாழும் மாதவத்தாருக்கு இந்த காமவேட்கை உருமாறி அன்புவேட்கையாக எழுவதுடன் இன்னும் பல தொடர்ந்து செய்து உலக நன்மைக்கு உழைக்கும் வகையில் வேண்டிய நற்றுணைகளை இறைவன் அருள்பாலிப்பான். காமக் கலவி இன்றி எல்லா உயிர்களிடத்து அன்பு காட்டுவதின் வழி அமுதப் பால் கொட்டும் வகையில் அருள்பாலித்து நெடுங்காலம் நலமே இளமை நலத்தோடு வாழ அருள்பாலிப்பான். இங்கு ஆன்மா ஞான வளர்ச்சியின் காரணமாக கற்றளிக் கற்றளியாக ஊய்ந்து உயர்ந்து முடிவில் ஆயிர இதழ் தாமரைத் தளம் அடைய உதவி அங்கு அம்மை செந்தாமரை மேல் அமர்ந்தவாறு அமுதப் பாலை குடங் குடமாக உடலெங்கும் கொட்டிட அருள்பாலித்து இளமை மீட்சிக்கும் வித்திடுவாள். இங்கு சீடர்கள் என்றும் மகளிர் உதவி என்றும் வருவதெல்லாம் தெய்வங்களே நொடிக்கும் தந்திரங்களாகும்.

10.1

இந்த அமுதப் பாலால் புனருத்தாரண எந்திரங்கள் செயல்படத் தொடங்கி முதுமையின் சுவடுகளை உடலிலிருந்து தீய்த்து வெளியாக்குவதோடு, கசியும் அமுதப் பாலால், இழந்த உறுப்புக்களை சீர் செய்வதும், வலுவிழந்த உறுப்புகளை மீண்டும் வீறுகொண்டு எழச் செய்வதுமாக உடலினை எக்குறையும் இல்லாத பொன்னுடம்பாக, எளிதில் நோய்நொடிகட்கு ஆளாகாத வச்சிரத் தேகமாக வெல்லாம் எழச் செய்யும். இத்தகைய எந்திரங்கள சிகிச்சை அல்லது மருந்து எந்திரங்களின் ஓர் கூறாகும். இதனாலேயே ஞான வாழ்க்கை வாழும் மாதவத்தர் நெடுங்காலம் இளமைப் பொலிவோடு நலமே வாழ்கின்றனர்.

11.0

இனி கனவுகள் காட்சிகள ஆழ் ஞான உதிப்புக்கள் போன்றவற்றைத் தருவது இந்த குண்டலினி எந்திரங்களே என்றறிக. சான்று: கனவுகள் காட்சிகள் காணும் போது மூலாதாரத்தோடு தொடர்புடைய பெண்களின் கருக்குழியும் ஆண்களின் ஆண்குறியும் கலவி செய்து மகிழும் நிலைக்கு தயாராக இருப்பது போன்ற அனுபவங்கள் பலருக்கு உண்டு, இன்னும் பல தொடர்புகளும் உண்டு. ஆய்ந்து கண்டு தெளிக

12.0

யாண்டு கமப்பால் ஊட்டம் அசுத்த மாயாவுடம்பு மகளிர் வழி என்பது போய் சுத்தமாயா வுடம்பு சுரரமகளிர் வழி என்றாகின்றதோ, அதுபொழுது உடலின் வழி சந்தான விருத்தி என்பது போய் கருத்தின் வழி சிந்தனாவிருத்தி என்றாக, மெய்ஞான பனுவல்களாக பல இலக்கியப் படைப்புக்கள் சிசுக்களாக ஈனப்பட்டு புறந்தரப்படுகின்றன. பெண்களுக்கு இது தேவர்கள் வழியாக மெய்யாகும்.

13.0

இவ்வாறான மாயா பந்தம் தொலைத்து, பிறகு உடற்றனுவோடு வாழும் நிலையை உற்பவிக்கும் கன்மத் தளையையும் தொலைத்து, ஆணவ மலமே எஞ்சி நிற்கும் ஆன்மாக்கள் விஞ்ஞானகலராக, அவற்றிற்கும் குண்டலினி யந்திரங்கள் உண்டோ வெனில் உண்டு என்பதாம். ஆயின் அவை உலகெங்கும் திரிந்து மகிழும் பரவான்மாக்களாக விளங்க, அதற்குத் தக இந்த எந்திரங்கள் குடிலை எந்திரங்களாக விரிந்து அமைகின்றன என்று கொள்க. இங்கு காமவேட்கை இல்லாது போய், விடுதி வேட்கையே வேட்கையாக அமைகின்றது. காமவேட்கை பரிணமித்து விடுதி வேட்கையாக உருமாறி தொழிற்பட, அதற்குத் தக குண்டலலினி எந்திரங்களும் விரிந்து மலர்ந்து குடிலை எந்திரங்களாக தொழிற்படுகின்றன என்க.

நான்காம் படலம் முற்றும். ஆகமீயம் முற்றும்

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=ஆக,மீயம்:_தந்திராயணம்&oldid=12375" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2013, 07:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,746 முறைகள் அணுகப்பட்டது.