ஆகமீயம்: எந்திராயணம்மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:23, 25 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ஆகமீயம்:எந்திராயணம் முனைவர் கி.லோகநாதன்
படலம் ஒன்று : காட்சியியல் A: பெயர்களின் தோற்றம் 1.0 பல்வேறு வகையில் இயங்கும் இவ்வுலகு, பற்பல யந்திரங்களின் வழியாக இவ்வியக்கங்களைப் பெறுகின்றன. இதன் மூலப் பொருள் சுத்த அசுத்த மாயைகளாகத் திரியும் பிரியும் தூமாயை ஆகும். தனக்கென்று ஓர் உருவமில்லா அசைவில்லா இயக்கமில்லா சடப்பொருளாகிய இந்த அசுத்த மாயையைத் திரித்தே செடி கொடி மரம் மலை என்றவாறு கருப்பொருட்களாக பல உருவாகின்றன. இவ்வாறு பொருட்களை உற்பவிக்கும் வகையில் அசுத்த மாயையைத் தாக்கி திரிப்பது அக்கர சக்கரங்களால் இயன்ற எந்திரங்களாகும். 1.1 எவ்வித உருவமும் இல்லா அசுத்த மாயைத் தாக்கி அதன் இயல்பினைக் கெடுத்து, உருவொடு வடிவொடு தனக்கென ஓர் இயல்பொடு அசைவொடு இயங்குமொன்றாய் ஓர் பொருளை வெளியாக்கி உலகில் உளதாக்குவதால், மந்திர சொரூபங்களாகிய இந்த அக்கர சக்கரங்கள் எந்திரங்கள் ஆகின்றன. 2.0 உலகத்தில் உள்ளதாகத் தோன்றி அது அதுவென சுட்டி அறியவரும், பெயரிட்டு அழைக்க வரும் வகையில் ஒற்றுமை நயத்தொடு தொடர்ச்சியொடு முழுசுகளாக (gestalts) இயங்கும் அனைத்துப் பொருளொடும் பிரிக்க வாரா வகையில் இந்த எந்திரங்கள் சங்கமமாகி அந்தர்க்கதமாக நிற்கின்றன. 2.1 அதுவென சுட்டி அறியவரும் பொருளறிவில், அதனோடு இயைந்து பிரிப்பின்றி ஆனால் கரந்த நிலையில் எந்திர அறிவும், அந்த எந்திர வடிவினை நிறுத்தும் அக்கரசக்கர அறிவும் கலந்திருக்கின்றன. பொருளறிவு என்பதில் பொருட்களின் குணவறிவோடு அதன் இயல்பறிவில் கரந்து நிற்கும் எந்திர வடிவு அறிவும், அதனுள் நிற்கும் அக்கரசக்கர அறிவும் அடங்கியுள்ளன. 3.0 இவ்வாறு கரந்து உடங்கியைந்து நின்றாலும், பற்பல பொருட்களை சோதித்து ஒழுகலாற்றினை நடத்தையை இயங்கு பண்பினை அறிந்து ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு ஆய்ந்து ஆழ் நுழைவுகள் பெற்று புதைந்து கிடக்கும் எந்திர வடிவங்களையும், அவற்றை நிறுத்தும் அக்கரசக்கரங்களையும் தனித்து பிரித்து அறிவாக்க முடியும். 3.1 இவ்வாறு அறிய வருபவற்றையே பிளேட்டோ ‘idea’ என்று கூறி இருக்கின்றார். பிறகாலத்தில் இதனை ‘FORM” என்றும் ஐரோப்பிய அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். கணிதவியல் ஆய்வில் படுவதெல்லாம் இத்தகைய எந்திரங்களே எனலாம்.
தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 1.2
4.0
எந்திர வடிவங்களும் ஆகவே அக்கர சக்கரங்களும் ஒரே நேரத்தில் எண்ணிறந்த இடங்களில் செயற்படுபவையாக இருக்கின்றன. இவை தனித்தும் ஒன்றோடொன்று புணர்ந்தும் செயல்படுகின்றன.
4.1
இதனால் பற்பல பொருட்களை ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளைக் காணும்போது பொதுவியல்புகள் என்றும் சிறப்பியல்புகள் என்றும் பொருட்களின் இயல்புகள் தெளிவாகின்றன.
4.2
பொதுவியல்புகள் பிரித்தறியப்பட்டு சொல்லாக்கப்பட, பொதுப்பெயர்கள் வருகின்றன. ‘மரம்’ ‘மாடு’ ‘மலை’ ‘ஆடு’ ‘நாய்’ என்பன போன்ற இயற்சொற்கள் இத்தகையன. இங்கு சொல்லாக்கபடும் பொதுவியல்புகள் உண்மையில் பல்வேறு பொருட்களில் பலவேறு வேறுபாடுகட்கு ஊடே செயல்படும் எந்திர சொரூபங்களின் அறிவே யாம். ஆக இத்தகைய சொற்களை அறிகின்ற ஒருவன் அறிவினில், இந்த எந்திர வடிவ அறிவும் எனவே அவற்றை நிறுத்தும் அக்கர சக்கரவறிவும் தெரிந்தும் தெரியாததுமாக இருக்கின்றன.
5.0
உலகத்தில் ஒருவன் ஓரு பொருளைக் காண, அந்தப் பொருளில் செறிந்திருக்கின்ற எந்திரவடிவங்களின் அறிவிற்குத் தக, அவனின் அப்பொருளைப் பற்றிய புரிந்தறு அல்லது புலமை என்பதாம். அதிகமா நுணௌக்கமாகத் தெரிந்திருக்க, அதற்கேற்ப அஹிகமான சொற்களின் வழி அந்தப் பொருளைப் பற்றிய புலமையின் சொல்லாடல், வர்ணனை அமையும். குறைவகவே அறிந்திருப்பின், குறைவான சொல்லாட்சிகளே அமையும்.
B
எந்திரங்களும் கணக்கியல் அறிவும்
6.0
எல்லா பொருட்களுக்கும் பற்பல பண்புகளைத் தர்கின்ற எந்திர வடிவங்களை நுண்ணிதாக ஆய்ந்து பிரித்தறிய முடியும். எல்லாப் பொருளறிவுகளும் இத்தகைய புதையெந்திர வடிவு அறிவுகளே. மந்ததாறிவில் ஒருசிலவே வெளிப்பட்டிருக்க, கூர்த்த அறிவில், ஆழ் நுழைவு காட்சி அறிவுகளில் மிகப்பல – நுண்மைக்கும் ஆழத்டிற்கும் ஏற்றவாறு.
6.1
இந்த எந்திர வடிவங்கள் அக்கர சக்கரங்களால் நிறுத்தப் படுகின்றன என்பதால், இந்த அக்கர சக்கரங்களும் மந்திர வடிவங்கள் என்பதால், முடிவில் கணிதவறிவிலேயே அவற்றைன் இயல்புகள் தெளிவாகும். வன்னங்கள் பதங்கள் என்பவற்றோடு அவற்றை ஓர் கோர்வைக்யாக்கி சக்கரங்கள் ஆக்கும் கூறுகள் கணிதக் கூறுகள் என்றறிக.
6.2
எல்லாச் சக்கரங்களும் இடவியல்(geometry) எண்ணியல் (arithmetic) வழி அறிந்து தெளியப்படுதற்கு உரியவை தொனி அறிவினோடு கணக்கியல் அறிவும் அக்கரசக்கரங்கள் பற்ரிய புலமையைப் பெற அறிகருவிகளாக் அமைகின்றன.
6.3
பொருள் ஒன்று தோன்றி நின்று அழிதல் தனமைத்தாக இருக்க, எந்திர வடிவங்களௌம் அவற்றின் மூலமாகிய அக்கரசக்கரங்களௌம் யாண்டும் அழியாது நிற்கும். அவற்றிற்கு இடக்கட்டும் காலக் கட்டும் இல்லாமையால் யாண்டும் மாறா உண்மைகளாகின்றன.
6.3.1
இத்தகைய அறிவுகளே கணக்கியல் அறிவுகளும் என்றறிக. கணக்கிட்டு அறியப்படும் அனைத்தும் பொருளின் வழி பெற்றாலும், பொருள் கடந்த அறிவுகளாக அவை இருப்பதற்கு காரணம் அவை இத்தகைய அக்கரசக்கர அறிவு என்றறிக.
6.3.2
எல்லா அக்கரசக்கரங்கட்கும் சாதாரண முறையில் அழிவு இல்லை என்றாலும், மகாசங்காரத்தில் அவற்றிற்கு அழிவு உண்டு. அனைத்து அக்கரங்களும் இழுக்கப்பட்டு ஓங்காரமாகிய ஓரெழுத்தோர் மொழி ஆகின்றது, பிளந்து பிளந்து வெவேறு அக்கரசக்கரங்களாக, அக்கரங்களளக இருக்கும் நிலை போய், பேதங்கள இழந்து ஒன்றாக ஒடுங்கும் நிலையே மகாசங்காரம் என்றறிக
தொடரும். திராவிட மெய்யறிவு வரலாறு- 1.3 C. அக்கர சக்கரங்களும் அறிவியல் துறைகளும் 7.0 எல்லா அறிவியல் துறைகளின் உழைப்புக்களும் எந்திர வடிவங்களை கண்டறிவதும், அவற்றை நிறுத்தும் அக்கர சக்கரங்களை கண்டறிவதும் அவற்றிற்கிடையே உள்ள பல உறவு முறைகளை கண்டறிவதுமாகிய நோக்கங்களை உடையது. 7.1 எந்த அக்கர சக்கரம் எந்த எந்திரத்தை நிறுத்துகின்றது, எந்த எந்திரம் எந்த பொருளை உளதாக்குகின்றது என்று கண்டறிந்தால், தனக்கு வேண்டியதைத் தானே படைத்துக் கொள்ளும் திறனுடையவனாக மனிதனால் வளரமுடியும். இயற்கைக்கு அடிமையாகிய நிலையிலிருந்து விடுபட்டு, அதன் இத்தகைய நுட்பங்களை அறிந்து செயற்கை முறையில் தனக்கு வேண்டியதை தானே படைத்துக்கொண்டு மகிழ முடியும். 7.2 இதனாலேயே அறிவியல் துறைகளில் சிறந்தோங்கும் நாடுகள் அனைத்தும் தொழில்நுட்பத்திலும் சிறந்தோங்கி பொருள்வளம் மிக்கதாகத் திகழ்கின்றன 7.3 தொழில் நுட்பமென்பது, பொருட்களைத் தேர்ந்து ஆய்ந்து உட்புதைந்து கிடக்கும் எந்திர சொரூபங்களை தனியாகப் பிரித்தறிந்து, பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்து, ஆய்வுக் களங்களில் அந்த எந்திரங்களை பிற பொருட்களில் தொழிற்படுத்தி தான் விரும்பும் மாற்றங்களை அது தருகிறதா என்று சோதித்து ஏற்றும் எறிந்தும் செல்வதாகும். 7.4 இயற்கையின் கருக்களை வல்லிதின் கண்டு, தனக்கு வேண்டியதை இயற்கையிலிருந்து தானே உற்பத்தி செய்துகொள்ளும் தன்முனைப்பு இங்கே அடிப்படையாகின்றது. இந்த தன்முனைப்பின் அடிப்படையில் செல்வதே ஐரோப்பிய அறிவியல் ஆய்வு முறைகள். 7.5 இதற்குச் சற்று மாறான நோக்குடையதாக ஆகம அறிவியல் துறைகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் வளர்ந்துள்ளன. பலவாறு முயற்சிக்கும் தன்னைத் தானறிய விளைந்த அறிவியல் துறைகளே ஆகமக் கலைகள். இங்கும் அடிப்படையாகிய எந்திரங்களின் ஆய்வுதான் நடக்கின்றது. ஆனால் தன்னை, தன் அறிவினை இயக்கி தன்னை ஓர் குணத்தவனாக இயல்பினனாக ஆக்குவிக்கும் எந்திரங்களின் மேல் ஆராய்ச்சி செல்கின்றது. தன்னையேத் தான் அறிவியல் முறையில் ஆய்ந்து செல்வதே ஆகமீய அறிவியல் துறைகள். 7.6 இதனால் ஆகம அறிவியல் துறைகள் பெரும்பாலும் அறிவின் வெளிப்பாடுகளாக இருக்கும் மொழியியல் சிற்பவியல் கோயிற்கட்டிடவியல் வழிபாட்டியல் ஓவியவியல் இசைவியல் நாடக நாட்டியவியல் என்றவாறு அமைந்து விட்டன. யோகவியல் மந்திர தந்திரவியல் ஆழ்வுளவியல் சித்தமருத்துவ வியல் என்றவாறும் விரிந்துள்ளன. இத்தகைய அறிவியல் துறைகளை வளர்த்து பல்வேறு வகைய அறிவின் திறன்களை ஆய்ந்து, ஆங்கு ஆட்சி செய்யும் மந்திர எந்திரங்களைக் கண்டு பண்பாட்டினை வளர்த்துள்ளனர் 7.7 இத்தகைய ஆகமக் கலைகளின் அடிப்படையில் அமைந்ததே ஆகமப் பண்பாடு ஆகும். திராவிட மக்களின் பண்பாடு இத்தகையது. இந்த பண்பாட்டின் தாக்கத்தால் எழுந்த உலகின் ஏனைய பண்பாடுகளும் ஆகமப் பண்பாடுகளே யாம். இதுவே இனி உலகெல்லாம் செழித்தோங்கி வளரக் கூடிய சிறப்பினதும் ஆகும். அறிவியல் முறையியலோடு அமைந்தப் பண்பாடு இதுவொன்றே என்பதாலும், அறிவியலின் ஆட்சிக்கு இந்த உலகமே அடங்கி வருவதென்பதாலும் , அதுவே நியதி என்பதாலும் இது. தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 1.4
D தெய்வங்களும் எந்திரங்களும் 8.0 பொருள் தோற்றத்தை ஆழமாக உன்ன, வடிவங்களைத் தரும் அக்கர சக்கரங்களாகிய மந்திரங்களோடும், மூலப்பொருளாக நின்று உதவும் அசுத்த மாயையொடும் மேலும் ஒன்று தேவையாக இருக்கின்றது. அதுதான் யாதெனின், இந்த மந்திரங்களைத் தொழிற்படுத்தும் சித்துப் பொருட்களாகிய பல்வேறு சத்திகளே அவை. பிறவெல்லாம் அசித்துப்பொருட்களாக இருக்க அவை தாமே செயல்படா. அவற்றை செயல்படுத்துபவையாக இந்த சித்துப் பொருட்களே மூலத்தில் ஆழத்தில் இருக்கின்றன. இவற்றையே ஒருவாறு உணர்ந்து தெய்வங்கள் என்று பெயரிட்டு அழைத்து நாம் வணக்குதற்குரிய பொருட்களாக ஆக்குகின்றோம். 8.1 இனி இந்த தெய்வ வடிவங்கள் கணக்கற்றன எனினும், அவற்றின் மூலத்தில் பரசிவனாகிய ஒரே தெய்வம் தான் உண்டு. எல்லா தெய்வங்களுமே அனைத்தையும் செலுத்தும் ஆணையாகிய சிவசங்கற்பத்தின் வடிவங்களாக பரசிவனின் வெளிப்பாடுகளேயாம். எல்லா தெய்வ வடிவங்களின் புதைவடிவாக (Deep Structure) இருப்பது ஒன்றேயாகிய பரசிவனேயாகும். இந்தப் பரம்பொருளை வேறு பெயர்கள் கொண்டும் அன்பர்கள் அழைப்பர். 8.2 ஓர் புறவுருவாக பரசிவன் ஓர் தெய்வவடிவிலே நிற்க. அந்த தெய்வம் ஏவும் மந்திரங்கள் அசுத்த மாயையைத் தாக்க ஓர் பொருள் உளதாகின்றது. ஒன்றாய் வேறாய் உடனாய் பரம்பொருளே அவற்றோடு இருந்து அவற்றின் தோற்றத்தையும் நிலைப்பையும் துடைப்பையும் மற்றும் அதனின் ஏனைய ஒழுங்கையும் கண்காணித்தவாறு இருக்கின்றான். இதுவே மெய்கண்டாரும் ஏனையோரும் கண்டுரைத்த இறைவன் அனைத்தொடும் அந்நியமின்றி அவையே தானேயாய் நிற்கும் அத்துவித நிலையாகும். 9.0 தொழில் வேறுபடுதற்கேற்ப பரம்பொருளின் வெளிபாட்டு வடிவங்களாக தெய்வ வடிவங்கள் வேறுபடுகின்றன. எல்லா தெய்வங்களும் ஓர் ஊர்தியுடனும் பல்வேறு ஆயுதங்களோடும் தோன்றுவது. அவை பற்பல எந்திரங்களை முடுக்கி பற்பல தொழில்களை செய்யும் சத்திகள் என்று நாம் அறிவும் வண்ணம் நமக்கு புரிந்துகொளக்கூடிய வடிவில் காட்சித் தர திருவுள்ளம் பற்றி இருப்பதாலேயே. 9.1 அன்னப் பறவை நான்முகனுக்கு வாகனம். இங்கு அன்னப் பறவை என்பது புராண மொழியில் நான்முகனது தொழிலை மெய்யாக்கும் எந்திரத்தின் வடிவமாகும். அது உணமையில் ஓர் அக்கர சக்கரமாகும். அது அறிவிலே எழுந்து, உயிரோடு கலந்து தொழிற்படத் தொடங்கி விட்டால், கருத்துப் படைப்புக்களாகிய சிந்தனைகள் எண்ணங்கள் கற்பனைகள் போன்றவை உளதாகின்றன. இந்த எந்திரத்தையும் அதன் பதிப்பு நிலைப்பு நீக்கம் போன்றவற்றையும் அதன் தொழிற்பாட்டின் கூறுகளையும் மேவி விளையாடும் சிவசொரூபம் இங்கு இப்பணிகட்கு ஏற்ப நான்முகன் ஆகின்றது. அறிவின் தொழிற்பாட்டிலேதான் படைப்பு விளையாட்டு என்பதை வெண்மை வண்ணம் காட்டுகின்றது. உலகத்திலுருந்து கழன்று நின்று அறிவினையே பொருளாக நினைத்து அதனை நோக்கி தேடித் திரிவதை அமர்ந்திருக்கும் வெந்தாமரை காட்டுகின்றது. இதேப் போல பிற உருவங்களின் பொருள்கள் அல்லது குறிப்புக்கள். 9.2 தமிழக சித்தர்களும் சிவஞானிகளும் பிறரும் Icon Thinking அதாவது திருவுருவப் பொருளியல் எனும் இவ்வியியல் மிக சிறப்பான வொன்றாகும். இதன் மையக் கூறாய் அமைந்திருப்பதே Hermeneutic Semiotics எனப்படும் கனாப்பொருள் ஆய்வாகும். திராவிட மெய்யறிவு வரலாற்றின் மையக் கூறாக இப்படிப்பட்ட ஆய்வுகள் அமைந்திருக்கின்றன. இத்தகையத் துறைகள் அதிகமாக ஐரோப்பிய நாடுகளிலும் உலகின் பிற நாடுகளிலும் சிறப்பாக வளர்க்கப் படாது போக, இதனை பெரிதுன் வளர்க்கும் வகையில் திராவிட மக்களின் மெய்யறிவுச் சிந்தனை வரலாறு ஓர் தனித் தன்மையுடன் விளங்குகின்றது. இப்படிப்பட்ட துறைகளின் வழியாக சிவஞானத்தை வளர்த்து வளர்த்து செல்வதால் திராவிடப் பண்பாடு அகத்தூய்மை அடைந்து சுத்தமாகுவதை அடிப்படையாகக் கொண்ட ஓர் பண்பாடு என்றும் விளங்குகின்றது. 9.3 மேலும் திராவிட மெய்யறிவுச் சிந்தனை இறைவன் உண்டெனும் ஆத்திக மார்க்கமாகவே பெரிதும் வளர்ந்துள்ளதையும் காண்கின்றோம். பண்டைய காலத்தில் பூதவாதம் என்றும் பிறகு உலகாயதம் என்றும் வந்த நாத்திகவாதம் எடுத்து மிக விரிவாக உரைக்கப்பட்டுள்ளது எனினும் அது கண்டிக்கப்பட்டு மறுக்கப்பட்டும் உளது. தெய்வங்களைத் தொழுது தொழுது அந்த வடிவங்கள் வழியாகவும் அவை நடத்தும் திருவிளையாடல்கள் வழியாகவும் உணர்த்தப்படும் உண்மைகளை அறிந்து சிவஞானம் வளர்த்து வீடுபேறு நோக்கிச் செல்வதையே குறியாகக் கொண்டு திராவிட மெய்யறிவுச் சிந்தனை வளர்ந்துள்ளது என்பதை விரைவில் தெள்ளத் தெளைவாகக் காண்போம். தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 1.5
E எண் சித்திகளும் புத்திகளும் 10 இனி ஆணவ மலத்தில் ஆழ அழுந்தி கிடக்கும் ஆன்மாக்கள் அநாதியே இதனால் அணுத்துவம் பட்டு பாசங்களில் கட்டுண்ட பசுக்களாக பிறந்திறந்து உழன்று வரும் சிற்றறிவு உயிர்களாக இருப்பதைப் போக்கி பரத்துவம் பின் சிவத்துவம் எய்தி வீடுபேறு மகிழும் ஆன்மாக்களாக அருள்பாலிக்க இந்த அக்கர சக்கர எந்திரங்களையே கருவியாகக் கொண்டு இறைவன் பல திருவிளையாடல்களை ஆடி உதவுகின்றான். இவையே பஞ்ச கலைகள் என்றும் பஞ்கிருத்தியங்கள் என்றும் இன்னும் பலவாறும் பகரப்படும். 10.1 எல்லா ஆன்மாக்களோடும் பிரிப்பின்றி இரண்டறக் கலந்து நிற்கும் ஞானமயனாகிய இறைவன், அநந்நியமாக அனைத்தையும் அவையேத் தானாக நின்று கண்டு, காலத் தாக்கமின்றி நின்று, எல்லா ஆன்மாக்களும் ஊய்ந்து வீடுபேறு அடைய, ஞாபோதகமாக பல்வகைத் திருவிளையாடல்களை நடத்துகின்றான். இந்த எந்திர சொரூபங்களைத் தேற்றி ஆன்மாக்களோடு இரண்டறக் கலப்பித்து அறிவினை தொழிற்படுத்டுவதும் அதனால் எந்திரத்தால் ஆகக்கூடியது முடியும் வரை அந்த எந்திரம் நீங்காது ஆன்மாவோடு நிலைப்பிப்பதும், பிறகு சங்கரித்து இதனை நீக்கி வேறொன்றினை பதிவிப்பதுமாக, அதே பொழுது அறியாமையை சிறை நிக்கி அருளுவதும் பக்குவம் அமையும் வரை தன்னை மறைத்து திரோதகம் ஆடலுமாக ஐந்தொழில்களால் அனைத்து வகை திருவிளையாடல்களையும் நடத்துகின்றான் என்றறிக. 10.2 இவ்வாறு ஆடப்படும் திருவிளையாடல்கள் வழியேதான் உலகத்து மக்கள் வாழ்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளும் மெய்யாகின்றன. இவற்றால் உயிர்கட்கு எண் சித்திகளும் எண் புத்திகளாகிய எண் கருமங்களும் மெய்யாகின்றன. எண் கருமங்களாவன : மோகனம் வசியம் ஆகருடம் தம்பனம் வித்வேசனம் பேதனம் மாரணம் உச்சாடனம் என்பவை யாகும். இவை எல்லாம் ஆன்மாக்களின் செயல் திறங்கள ஆகும். காட்டாக வசியம் ஓர் உயிர் இன்னொரு உயிரை மயக்கி தன்வயப்படுத்தல் ஆகும். 10.3 எண் சித்திகள் என்பன: அனிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் போன்றவை ஆகும். இவை ஆன்மாவின் அறிவுத் திறன்களாகும். இவற்றின் பொருளை அபரவாழ்க்கையில் ஒருவாறும் பரவாழ்க்கையில் பிரிதொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். காட்டாக மகிமா என்பது அபரவாழ்கையில் ஒருவன் தன் திறைமையால் சாதனையால் உலக மக்களிடையே ஓர் பேருயிர் என்று புகழப்படும் நிலைக்கு உயர்வதாகும். இனி பர வாழ்க்கையில் இப்பேர்ப்பட்ட உலகப் புகழ் அற்பமாகிட ஆங்கு மகிமா என்பது திரிகாலஞானியாக உயர்ந்து காலத்தை வெல்வதாகும். இது போன்றே ஏனைய சித்திகளையும் அறிந்து கொள்க. 11.0 இவற்றின் விரிவை எல்லாம் திருமூலரின் மூன்றாம் தந்திரத்தையும் திருமந்திரமால 300 என்ற நூலையும் கற்றுத் தெளிக. பரவாழ்க்கையின் அட்டமா சித்திகள் என்பன உண்மையில் தூர திருட்டி என்பன போன்ற திறன்களை வளர்க்கும் பரவுளவியல் (Para Psychology) என்று யான் எனது பல ஆய்வுகளில் விளக்கியுள்ளேன் கண்டு தெளிக.
படலம் ஒன்று முற்றும்
|