Sundarar The Historianமரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:22, 18 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் Sundarar the Historian Translation and commentary by Dr K.Loganathan If Appar revolutionized metaphysical thinking of the ancient Tamils with his magnificent MaRu maaRRu TiruttaaNdakam, and Sambantar did the same with his KooLaRu Tiruppatikam , Sundarar the third among Teevaara MutalikaL did something similar with his Truttondat Tokai, which was sung, as the history goes, with divine inspiration. For though the intention to sing the glories of the adiyaars was already there in his mind, he was not sure how to begin it. It is at this point that Civa the BEING is said to have given the first line " Tillai vaaz antaNar tam adiyaarkkum adiyeen". But Periya PuraNam stands unique for the heroes sung are NOT kings and warriors as in Mahabaratam, or the Tiirttangkaras as in the Jaina tradition or the even the non historical and mythological figures as in RamayaNa , Kanta PuranaM and so forth. but rather ordinary people from all walks of life. I am glad to re-circulate this important patikam as a way of recovering the spirit of Tondu back to where it belongs and the fact that in metaphysical life all are equal, there are NO specially privileged individuals either by birth or profession. I shall provide only the meanings to begin with, the commentaries will follow later . Loga தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen மும்மலக் குணங்களைச் செற்று உயர்ந்து செந்தன்மை பூண்டொழுகும் திறத்து தில்லையம்பதில் வாழ்கின்ற அந்தணர்களுக்கு மட்டுமிலாது அவர்கள் அடியாருக்கும் அடியேன்; திருநீலகண்டம் என இயற்பெயர் பூண்டு சிவபக்தியில் சிறந்த குயவனாருக்கும் அடியேன்; வள்ளல் தன்மையில் சிறந்து சிவனடியார்கட்கு தன் துணைவி உட்பட கேட்டதெலாம் வழங்கிய இயற்பகை நாயனாருக்கு அடியேன்; அதேப்போன்ற இளையான்குடி மாறனாருக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரத்தில் மிகச் சிறந்த எல்லாப் போர்களிலும் வெற்றியேக் கண்டுவந்த மெய்ப்பொருள் நாயனாருக்கும் அடியேன்; விரிந்த பொழில்கள் நிறைந்த குன்றிலிருந்து வரும் வீரர் விறல் மிண்ட கண்டருக்கும் அடியேன்; யாண்டும் அல்லி முல்லைபோன்ற பூக்களாலான மாலை சூடியே விளங்கிய அமர்நீதியாருக்கும் அடியேன், ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to those in service to the Pure Individuals full of grace and who live in Tillai; also to Tiruniila KaNdam the potter who was steadfast in his devotion to Civa; also to Iyarpakai who never ever said " I do not have " ; also even to those in service to Ilaiyan kudi maaRan who was also like that; also the always victorious king Meyp PoruL Naayanaar, the great warrior; also to ViRaminDa Kandar hailing from the hills of large gardens and also to the gentle Amarniiti who is remembered as the one wearing a garland of jasmine and lotus flowers Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen: I am in service even those who are in service to the Great Ones who live in Tillai இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன் ilaimalinta veelnambi eRipattaRku adiyeen இலைகள் பல மலிந்து நிற்கின்ற வேலொடு விளங்கும் உயர்ந்தோனாகிய எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; பலவகையாக பலரால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் வாழ்ந்த கலயன் என்பார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; மல்லல் வீரம் பொருந்திய, வலிமை மிக்க தோள்களையுடைய எவ்வகையிலும் பொருதுதற்கு அஞ்சா வாள் தாயன் மானக்கஞ்சாறனுக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; அலைகள் நிறைந்த கடல் அருகே இருக்கும் திருமங்கை நல்லூர் ஆனாயன் அவர்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to ERipattar noted for the spear with many leaves; also to Enaati Naatan and to all those in service to him; also to KaNNappar, the Noble One who has been sung in so many verses ; also to Kalayan hailing fro Kadavuur and to all those in service to him; also to MaanakanjcaaRan, the brave one ever ready to battle with any , with a body of immense physical strength and always with the sword in his hands; and also Anaayan hailing from Tirumangkai, on the shores of the sea swelling with endless waves. ilaimalinta veelnambi eRipattaRku adiyeen: I am in service to ERi Pattar with spear of many leaves மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் mummaiyaal ulakaaNda muurttikku madiyeen முப்பொருள் உண்மையே உண்மையென்று உலகாண்ட மூர்த்தி நாயனாருக்கும் அடியேன்; அதேப் போன்ற முருகனாருக்கும் உருத்திர பசுபதியாருக்கும் அடியேன்; உள்ளத்தில் கசடு நீங்கி சிவத்துவம் விளங்க தில்லை சென்ற திருநாளைப் போவார்க்கும் அடியேன்; அதேப்போன்ற திருக்குறிப்புத் தொண்டருக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; உண்மை இதுவென்று தான் அறிந்து சிவலிங்கத் திருமேனி வழிப்பட்டு நிற்க , அதுகண்டு வெகுண்டெழுந்த தம் தந்தையின் கால்களை மழுவினால் எறிந்த சிவபெருமானுக்கு ஆளாயின சண்டிப் பெருமானுக்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to the great Murthi who lived nobly and ruled the world subscribing to the metaphysics of Three Eternal Objects; also in service to Murukanaar and Uruttira Pacupatiyaar who were like him; also in service to TirunaaLaaipoovar who went to Tillai only when pure in heart; also in service to TirukuRipput ToNdar and all those in service to him; also in service to the valiant CaNdi Peruman who with an axe cut off the legs of his own father when he insulted the Worship of Civalingkam , which for CaNdi was the symbol of Truth. mummaiyaal ulakaaNda muurttikku madiyeen: I am in service to Murthi who ruled the world subscribing to the metaphysics of Three Eternal Objects ; Notes : The "mummai" in the first line refers to the metaphysics of Fundamental Ontology where Pati , the BEING, Paacam, the bondages , and Pacu the psychic entities are taken as unoriginated and hence indestructible and hence eternally there. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட tiruninRa cemmiayee cemmiyaakak koNda தெய்வப்பொலிவே திருநின்ற செம்மையே செம்மை பிறவெல்லாம் அல்ல என்று கொண்டு வாழ்ந்துச் சென்ற திருநாவுக்கரையனார்க்கு அடியேன், அவர் தம் அடியார்க்கும் அடியேன்; மிகச் சிறந்த நம்பியாகிய குலச் சிறையார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; மிழலை என்னும் நாட்டின் தலைவருக்கும், காரைக்கால் பேயார் என்னும் அம்மையாருக்கும் அடியேன்; மிக உயர்ந்த நம்பியாகிய அப்பூதியாருக்கும் அவர் தம் அடியாருக்கும் அடியேன்; ஆரவார ஒலிகளோடு கூடிய கடல் சூழ்ந்த சாத்தமங்கை எனும் ஊரினைச் சார்ந்த நீலநக்கர் என்பாருக்கும் அடியேன்; அரிய நம்பி நமிநந்திகட்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to Thirunaavukkaraiyar who lived with notion that divine excellence is the real excellence and to all those in service to him; also to KulacciRaiyaar, one of the great nobles and to all those in service to him; also in service to the King of Mizalai and Kaaraikkaal Peeyaar; also in service to the most excellent Appuuti AdikaL and all those in service to him; also in service to Nilanakkar who hails from Caattamangkai, a city surrounded by the noisy seas; also in service to Naminanti who stands rare among the nobles. tiruninRa cemmiayee cemmiyaakak koNda tirunaavuk karaiyanRan adiyaarkkum adiyeen : I am in service to Tirunaavukkaraiyar who lived with the notion that divine excellence is the real excellence and to all those in service to him; வம்பறா வரிவண்டு மணநாற மலரும் சப்தமிடுதலை அறாது வரிவண்டுகள் அரற்ற நல்மணம் பரப்பியவாறும் மது தெளித்தவாறு மலர்ந்திருக்கும் கொன்றை மலர்களை சூடியவா தோன்றும் சிவபெருமானது அடிகள் அல்லாது மற்ற தெய்வங்கள் அடிபரவா என் தலைவன் ஞானசம்பந்தனுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் என்பார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; நம் அனைவருக்கும் அன்றும் இஇன்றும் என்றும் பிரானாகி இஇருக்கவல்ல திருமூலனிற்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; தன் உறுதியில தவறாத நாட்ட மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்; அம்பர் நகரைச் சார்ந்த சோமாசி மாறனுக்கும் அடியேன் ; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். vambaRaa varivaNdu : the striped bees always humming Sundarar 2-6 உரை: தான் புத்த சமயத்தவர் ஆயினும் உண்மை உணர்ந்து அழகிய முலைகளை வனப்பு மிக இழுத்துக்கட்டிய உமையை தன் ஓர் பாதியாகக் கொண்ட சிவபெருமான் கழலை வணக்குதற் பொருட்டு மலர்களுக்குப் பதிலாக கற்களை எறிந்தே வணங்கிய சாக்கியருக்கும் அடியேன்; பலரால் புகழப்பெற்ற பெரும் வள்ளலாக விளங்கிய சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி தன்னில் வாழ்ந்த சிறுத்தொண்டருக்கும் அடியேன்; மழைமேகம் போல அருள் மழைப்பொலிந்து கொடை செய்தவண்ணம் இருந்த கழறிற்றறிவார்க்கும் அடியேன்; கடல் சூழ்ந்த காழியம்பதி கணநாதன் அவர்கட்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரம் மிக்க வேல் கொண்ட களந்தை எனும் நாட்டின் அரசனாகிய களந்தைகோன் என்பாருக்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I am in service to Caakkiyar who although a Buddhist but convinced of the truth of Caivism worshipped Civa who always has Umai of shapely well belted breats as His equal half, throwing stones instead of flowers; I am also in service to CiRapuli who enjoyed good fame because of munificence; also in service to CiRuToNdar who hailed from Cengkaaddangkudi; also in service to KazaRiuRRaRivaar who poured wealth to the needy like the rain clouds; also in service to KaNanaatan hailing from the sea girdled Kaazi; also in service to the King of KaLantai always with the spear of great bravery, I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. Sundarar 2-7 பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் உரை உலகத்தில் எவ்விடத்தும் பொய்மைக்கு அடி பணியாது மெய்மைக்கே உறுதியாக நிற்கும் புலவர்கள் அனைவருக்கும் அடியேன்; வீரப்போர் செய்து பொழில்கள் நிறைந்த கருவூரில் மரணமடைந்த புகழ்சோழற்கு அடியேன்; உண்மையான சிவன் அடியாராக விளங்கிய நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரிந்த திரைகள் ஓயாது மோதும் கடல் நாகையைச் சேர்ந்த அதிபத்தர் என்பாருக்கும் அடியேன்; சிவபெருமானை இஇகழ்ந்தோரின் கைகளை வெட்டிய வந்தொண்டர் வரிசிலை கலிக்கம்பன் கலியன் வரிஞ்சையர் கோனாகிய கழற்சத்திக்கும் அவனது அடியார்கும் அடியேன்; ஐயடிகள் காடவர்கோன் அவர்கட்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். I am in service to all those philosophers who remain steadfast in their search for TRUTH and never ever become a slave to falsities; I am in service to Pukaz Coozar who died fighting in Karuvuur full of gardens; also in service to Narasinga Munaiyaraiayar, who was true servant of God; also in service to Atipattar of Naakai encircled by the sea of great waves; also in service to Kalikkamban Kaliyan KazaRsatti who would chop of the arms of the offenders against Civa and to those in service to him; also in service to AiyadikaL , the Kaadavarkoon ( a Pallava King) and to all those in service to him; I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. Notes: One of the most arresting phrase in the whole Theevaram Corpus is this phrase" poyyadimai illaap pulavar' that rightly became often quoted phrase by many scholars. With the use of this descriptive term Sundarar reaches the universal ground that transcends time and place. Saivism is centered not on dogmas, creeds and practices but rather on the attitude of SEARCHING for TRUTH and living in it and which demands that one remains always steadfast in the search for TRUTH and thus avoid falling into illusions and delusions. Sundarar says that he is in service to all such individuals and which also means that they are too taken as Saivites. Sundarar 2-8 2-8 கறைகண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த உரை. ஆலாகால விசத்தை தன் தொண்டையில் அடக்கி உலகோரை காத்தருளும் உண்மையான தெய்வம் தானே என்பதாக நீலகண்டனாகத் தன்னைக் காட்டி யருளிய சிவபெருமானது கழலடியே தன்மெய்யான காப்பு எனக்கொண்டுயர்ந்த கணம்புள்ள நம்பிக்கும் காரிக்கும் அடியேன்; குற்றம் யாதுமில்லாது நல்மனத்தின் காரணமாக எதிரிகளை திருநெல்வேலியில் வென்ற நின்றசீர் நெடுமாறனுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; போற்றுதற்குரிய செம்பவளத் திருமேனியனாக எழுந்தருளி அதனின் அகத்திருளை அகற்றும் மெய்யான சோதி தானே எனக் காட்டும் தொன் மயிலையுள்ள வாயிலானுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; தீயோர்களை அறுத்து இல்லாது போக்கும் வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். 2-8 kaRaikkaNdan kazaladiyee kaappukkoN dirunta I am in service to KaNampulla Nambi and Kaari who believed that the real security is the divine feet of Civa who disclosed Himself as the Blue-Throated by swallowing the poison of world destruction and held it in his throat disclosing that HE is the real Savior; I am also in service even to those in service to NinRaciir NedumaRan who won the battle in ThiruNeveeLi all because of his faultless good-heartedness; I am in service also to those who are in service to the one at the gates of the ancient Mayilai where appeared Civa as the resplendent red coral of good quality to disclose that only He can dispel the Ignorance of people; I am also in service to Velnambi Munaiyaaduvar who was fearless and who cut to pieces the enemies; I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur.
|