AruNandi's Deconstruction of Lokayata-2

மரபு விக்கி இருந்து

Ulagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:27, 1 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 AruNandi's Deconstruction of Lokayata.

Translation with commentray by Dr K.Loganathan 2004


Cittiyaar Lokayata- 8

23.
அருவமே இறைவனாகில் அறிவின்று ஆகாயமாகும்
உருவமே என்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவன் ஆகும்
மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல்
இருவிசும்பு ஒருகல் ஏந்தி நிற்குமோ இயம்பிடாயே

உரை
இறைவன் இருக்கின்றான் ஆனால் எந்த ஒரு உருவினனும் அல்லவெனின், அவன் அறிவுப் பொருளல்ல என்பதொடு இந்த ஆகாயத்தைத் தவிற வேறொன்றாக இருக்கமுடியாது. ஆகாயம் இருக்கின்றது ஆனால் அதற்குத்தான் எவ்வித உருவமும் இல்லை. இனி அப்படியல்ல இறைவன் உருவத்தன் என்னில் , இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால் நிலைபெற்றிருக்கின்ற ஒருவன் ஆகும். ஆக மானிடர்களைப் போன்று சேர்ந்திருக்கும் பூதங்கள் பிரிய அவனும் இல்லாதுபோவன். இனி அப்படியில்லை, அவன் என்றும் அழியாதவன் ; ஏனெனில் அவன் அருவமாயும் உருவமாயும் இருக்கின்றவன் என்னில், அதுவும் பொருந்துவதாக இல்லை. மண்மேல் இருக்கும் ஆகாயத்தில் கனமான ஓர் கல் இருக்கமுடியுமோ? முடியாது. அதுபோலத்தான் அருவமான ஒன்றில் உருவமான ஒன்று நிற்கும் என்பது.

23.
aruvamee iRaivanaakil aRivinRu aakaayamaakum
uruvamee enniR puutak kuuddattil oruvan aakum
mariviya iraNdung kuudi niRpavan ennin maNmeel
iruvicumbu orukal eenti niRkumoo iyambidaayee!

Now if it is said that there is BEING and He remains formless, then He cannot be a sentient being and hence must the empty Space . Now to avoid this, if it is said that BEING has many forms then He becomes someone or something generated out of the combinations of the basic elements, just like the so many creatures and which means also that when the combinations don't hold anymore because of disintegration, then BEING will also be no more. Now to avoid this , if BEING is said to be both Formless and Formful, then it is equivalent to saying that the Space above the earth can hold a rock suspended in it. The fact is , that which has structure cannot be in something that has no structure.

Notes:
Having denied the Hermeneutical view and having denied the reality of the psychical entities that become available for seeing as-there only in the hermeneutical glances, now the same logic of scientistics is carried over to deny the presence of BEING that existentially is addressed as God. On being pressed for evidences for the truth of BEING, it may be said that BEING is invisible though there . This INVISIBILITY is understood by the Lokayata as FORMLESSNESS for if anything has form or structure it must be perceptible. Though these notions are quite distinct but the Lokayata can understand invisibility only in terms of being the ABSTRACT and hence something unintelligent and hence only the Space that serves as the HOLDER of the basic elements that combine in so many different ways and generate myriad of things.
Now when this is denied and another aspect of the Invisible Presence , that HE is there in so may archetypal forms is mentioned, then the Lokayata equates this with the objects of his theory -- products out of the four basic elements and hence something that can die when the combinations disintegrate.
Now in order to avoid this and one continues to maintain the indestructible presence of BEING in so many archetypal forms the Lokayatas cannot understand it. Being physicalistic and who assumes every object to be physicalistic , he simply cannot understand the notion of spiritual presence where a deity as the mantrabody can take possession of an object and give structure form and function to it. He dismisses this as something simply impossible like claiming that a piece of heavy rock can remain suspended in empty space above the ground.

Cittiyaar Lokayata -9
24.
பூதத்தே அன்னமாகி அன்னத்தால் உடம்பு புத்தி
பேதித்தே மனமும் ஆகிப் பிரிந்தமை திருந்த இன்று
வேதத்தே உரைக்க என்னோ மேதினியோர்கள் எல்லாம்
கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல கேட்குமாறே
உரை:
அறிவியலுக்குப் பொருந்தி வரும் முறையில் உலகாயதம் நான்கு பூதங்களின் சேர்க்கையால் உணவு வகைகள் தோன்றும் , அந்த உணவு வகைகளே பேதித்து திருந்தி உடம்பும் அந்த உடம்பில் செயல்படும் புத்தி மனம் போன்ற அகக்கரணங்களும் விகற்பித்து தோன்றும் என்று கூறியிருக்கின்றது. அப்படியில்லை எங்கள் மறைநூலில் இவ்வாறு இவ்வாறு எல்லாம் கூறியிருக்கின்றது என்று அறிவியலிற்கு பொருந்தா வகையில் கூறி மயங்குவது ஏன்? இப்படிப்பட்ட மறை நூற்களினால் தான் மேதினியோர்கள் உண்மைக்குப் புறம்பாய நெறியில் இயங்கி மிகவும் துன்பப்படுகின்றனர்?

24.
puutattee annamaaki annattaal udambu putti
beetittee manamum aakip pirintamai tirunta inRu
veetattee uraikka ennoo meetiniyoorkaL ellaam
keetattee viizntu veeRu neRiyala keedkumaaRee

The lokayatas consistent with scientistics explain that from the combination of the four basic elements the different food stuffs are produced and these in turn become differentiated into the phyisical bodies and the mental organs of intellect and sense-organs. But there are those who claim that their scriptures say something different and believe in things beyond the scientific. It is only because of such misleading scriptures that many people in the world go the wrong way and suffer because of that.

25
போகத்தை மண்ணில் கண்டு விட்டுப்போய் விண்ணில் கொள்ள
மோகத்தர் ஆகி அல்லல் முயன்று உழல் மூடர் எல்லாம்
தாகத்தில் தண்ணீர் கண்டு விட்டுப் போய்த் தண்ணீர் கேட்டுச்
சோகித்தே உண்ண எண்ணித் துயர் உறுவார்கள் அந்தோ
உரை:
உலகியல் வாழ்க்கையிலேயே நலமான போகங்களை சுவைத்து வாழும் சூழ்நிலை இருக்க , அதனைக் காணாது வானுலக வாழ்க்கை என்ற ஒன்றுண்டு என நம்பி அவ்வாழ்க்கையில் வரும் இன்பமே இன்பம் எனக்கொண்டு அதனை மோகித்து உலகியல் வாழ்க்கையை ஒதுக்கிச் செல்வார் எல்லாம் மூடர்கள் ஆகும். நீர்வேட்கைத் தள்ள பக்கத்திலே நீரும் இருக்க அதனைப் பருகாது விண்ணில் எங்கோ நீருண்டு என நம்பி அதனைத் தேடிச் சென்று கிடைக்காது சோகத்தில் வீழ்வார் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர் ஆகும்.

25.
pookattai maNNil kaNdu vidduppooy viNNil koLLa
mookattar aaki allal muyanRu uzal muudar ellaam
taakattil taNNiir kaNdu viddup pooyt taNNiir keedduc
cookittee uNNa eNNit tuyar uRuvaarkaL antoo!

Even when the earthly life has all the pleasures to be enjoyed , there are many foolish people who believe in a heavenly world and that that true happiness is to attained there and struggle to attain it. Such people are like those who overlook water next to them when thirsty and avoiding that seek the heavenly waters and become sad and depressed on not getting it and hence are people to be pitied.

Notes:

Now the criticism turns on the believe systems of the metaphysically tuned individuals who believe that over and above the physical , there is the metaphysical world , invisible to the senses but available for seeing in transductive perceptions. The Lokayatas deny the possibility of such perceptions by their physicalistic theory of the origins of the organs of cognition, the manam and butti. The manam is that part of the mind that deals with the senses and the butti that which processes them and both viewed as modifications of physical stuff made available through the food that is ingested and which in turn is generated out of the combinations of the four basic elements. Denied here are the other cognitive utensils -- akangkaaram and cittam, those responsible for ego-sense and the generations of various kinds of desires.
For the Lokayata happiness is worldly and nothing other than worldly. The point of the water is chosen deliberately. For the Lokata water is the naturalwater and NOT the Akaya Gangai, the water from the metaphysical river that nourishes the body and ensures good health and youthful vitality. Believes in such metaphysical realities are illusory and hence something that land people only in miseries and not happiness, so the Lokayatas think
(to continue) 9
10

26.
வாழவே வல்லை வாமி வலக்கைத் தா என்னுயிர்க்கு
தோழன் நீ உன்னை ஒப்பார் சொல்லிடின் இல்லை கண்டாய்
கோழை மானுடர் தீதெனும் கொலை களவாதி கொண்டே
சூழும் வார்குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினயே
உரை:
காமத்தை, வாம மார்க்கத்தை, ஒதுக்காது நலமே வாழ வல்ல வாமியே, என் உயிர்க்கு உற்ற தோழன் நீயே ஆதலின் உனது வலக்கையை எனக்குத் தா. எனக்கு உற்றத் தோழனாக இருப்பதற்கு உன்னை ஒப்பார் சொல்லிடின் வேறு யாருமில்லை கண்டாய். கோழை மானுடர் கொலை களவாதிகளைக் கண்டு தீதென்று அஞ்சி நிற்க, நீ அவற்றிற்கெல்லாம் அஞ்சாது வீரத்தோடு நின்று, அந்த வீரத்தின் காரணமாக வார்குழல் இளம் மடவார் மொய்த்துச் சூழ்ந்து கிடக்க அவர்கள் நடுவே கதிரவன் போல சுடரெனத் தோன்றுகின்றாய்

26.
vazavee vallai vaami valakkait taa ennuyirkku
toozan nii unnai oppaar collidin illai kaNdaay
koozai maanudar tiitenum kolai kaLavaati koNdee
cuuzum vaarkuzal moyppaச் cudarenat toonRinaayee

You who follow the way of the Vaami, the way in which sexual indulgence is not frowned upon, give me your right hand. You are the best friend for my life and there is no one comparable to you. The cowardly individuals stand frightened at the face of murders and robberies saying they are evil . But you stand bravely facing them and because of which young women with long curls surround you and you stand amidst them shining like the sun

Notes:

The word "vaami" is derived from "kaami" i.e. he who does not despise the sexual enjoyments. Thus for the Lokayatas, such Vamis who do not practice abstinence at all become good friends, in fact the best friends. For the non metaphysical individuals only worldly pleasures become the pleasures and in this sexual is the most satisfying. For this reason this also becomes that FOR WHICH they live, that which gives the meaning for existence. Not being able to recognize the metaphysical they remain BLIND to other forms of happiness.
Another aspect they seem to emphasize here is that one should not be frightened of the EVIL things in existence, evil things such as murder theft and so forth. One must remain brave and battle with such social evils instead of running away from them and though that become a hero , so that one becomes someone encircled by young women in intense admiration. Becoming a hero admired and loved by young women becomes the social ideal for the Lokayatas.
( to continue) 10
11.
27.
ஈசனார் அயனார் மாலோடு இந்திரன் தெரிவை மார்பாற்
பேசொணா வகைகள் எல்லாம் செய்தன்றோ பெரியோர் ஆனார்
ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டுமாயின்
வாசமா குழலாரோடும் வல்லவா கூடி வாழ்மின்
உரை:
தெய்வங்களாக கருதப்படும் ஈசன் பிரம்மா திருமால் இந்திரன் போன்றோர் மாதர்களை ஒதுக்காது நாவில் நெஞ்சில் உடலின் சரிபாதியாகவும் இன்னும் சொல்லொண்ணா வகைகளில் இணைந்து பல செய்தல்லோ பெரிதுந் தொழப்படும் வகையில் உயர்ந்தார்கள்? அப்படியிருக்க, இப்படிப்பட்ட தெய்வங்கள் இருக்க அவற்றைப் போன்று நாமும் ஆகவேண்டுமெனில் , பெண்களை ஒதுக்காது பொய்த் துறவு ஆடாது வாசமா குழலாராகிய இளம் பெண்களோடு வல்லவா கூடிவாழ்வதே சிறந்தது என்பதாம்.

iicanaar ayanaar maaloodu intiran terivai maarpaaR
peecoNaa vakaikaL ellaam ceythanRoo periyoor aanaar
aasaiyaal avarpool naamum aakavee veendumaayin
vaacamaa kuzalaroodum vallavaa kuudi vaazmin

BEING, if at all true, shows through the archetypal presentation as Ican Ayan Tirumaal Intiran and so forth that the WOMEN is kept by them either in the tongue or chest or even as equal half and also integrated into the body in innumerable ways. Now if it is desired that we should also becoming beings like these archetypes, then we should also live happily with young maidens with curly hair and pleasing fragrance
28.
தையலார் ஊடலாடத் தாம் அவரோடுங் கூடிச்
செய்ய தாமரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி
மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா
மையல் மானுடர் பொய் மார்க்க வேடத்தே மாய்கின்றாரே
உரை:
பொய் சினத்தின் மகளிர் ஊடல் ஆட தாம் அவரோடுங் ஊடல் தணிக்கும் வகையில் அவர் செய்ய தாமரையை வென்ற பாதங்களுக்கு கொலுசு போன்ற அணிகலங்களை சூட்டி மனங் குளிர்வித்து அவர்களது பாதங்களை தம் உடம்பெங்கும் சூடி மகிழும் வேடத்தர் ஆகுவதே தகுந்த வழி. இவ்வாறு உடலுறவுகள் மகிழ்வது தவறெனக் காணும் மையல் மானுடர், பொய் மார்க்கத்து துறவு வேடம் பூண்டு விரைவில் மரனத்தைத் தழுவி மாய்கின்றாரே, என் செய்வேன்?

taiyalaar uudalaadat taam avaroodung kuudic
ceyya tamaraiyai venRa ciiRadi cembanj cuuddi
meyyelaam paatanj cuudum veedattaar meyyiR kuudaa
maiyal maanudar poy maarkka veedattee maaykinRaaree

The best life is to cool the false anger of women by pleasing them with tying anklets at their lotus-like feet and let them pass over one's whole body and thus enjoy the bodily pleasures with such games wearing the appropriate masks for it. But it is unfortunate that men have distorted viewச்s about such forms of happiness and going the false ways avoid such pleasures and by becoming ascetics suffer premature deaths.

Notes:

The Lokayatas here seem to have a wrong view of religious life which they equate with a life of sexual abstinence and which is NOT the case with Saivism or Vaishanavism. May the target of attack are the Vedanties who took over the ascetic principles of Buddhism and installed that as an integral part also of Hinduism. While the Lokayatas seem to be in agreement with the Agamic ideals of NOT neglecting the Sakthi, the WOMEN, they appear to take them simply as WISHES of people rather than as blessings of BEING. A person cannot become Ican and so forth unless it is willed by BEING and that to as a way of blessing a soul.

Cittiyaar Lokayata-12

29
வாசமார் குழலினார்கள் மணி அல்குல் தடத்தே மூழ்கி
நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு
தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்து வீற்றிருந்திடாதே
மாசுலா மனத்தோர் எல்லாம் மறுமை கொண்டழிவர் மன்னோ
உரை:
நறுமணக் கூந்தலின் குழலினார்கள் அழகில் மயங்கி காம வேட்கையின் அவர்கள் மணிவிலங்கும் அணிகலங்கள் சுடரும் இடுப்பின் தடத்தே ஆழமூழ்கி , அன்பு மீதூர வாயொடு வாய் வைத்து குமுத மலர்போன்ற செவ்வாய் வழி அமுதினை உண்டு , இப்படி யாண்டும் ஒளிமிக்க மணிகள் விளங்கும் மெந்தோள்கள் சேர்ந்து இதுவே மெய்யான வாழ்க்கை என்று வாழ்ந்திடாதே, இத்தெளிவற்ற அஞ்ஞான அழுக்குகள் நிறைந்த உள்ளதர் இப்படிப்பட்ட உலக வாழ்க்கையை மறுத்து மறுமை வாழ்க்கை உண்டென மயங்கி அழிவர், என் செய்வது?

29
vaasamaar kuzalinaarkaL maNi alkul tadattee muuzki
neesamaar kumutac cevvaay amutinai niRaiya uNdu
teeculaa maNimen tooL ceerntu viiRRiruntidaatee
maaculaa manattoor ellaam maRumai koNdazivar mannoo!

The authentic life is the life where as a man overcome with sexual desires approaches young women with fragrant curls and dipping into the pools in the diamond girdles middle, enjoys drinking the ambrosia oozing from their mouth. The life of real happiness is such a life where one lives without ever forgetting to embrace the shoulders of women with brilliant ornaments. But how unfortunate it is to know that , out of ignorance, there are people who believe in heavenly existence and destroy themselves avoiding this kind of life because of this dirt of ignorance.

30.
மதி நிலா நுதலாரோடு மணி நிலா முன்றிலேறி
முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த
கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள் மார்பகல மூழ்கும்
புது நிலாவிய நன்போகம் விடுவர் புன் சமயத்தோரே
உரை:
பிழையான சமய வாழ்க்கையில் பட்ட புன் சமயத்தோர் என்போர், கூனல் மதிபோன்ற நுதலாரோடு காதலன்பில் மணி நிலா முற்றத்தில் ஏறி , வானில் முழு நிலா நலமேக் காய அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டபடி, குண்டு நிலாபோன்ற முத்துக்கள் நிறைந்த வடம் புரளும் கொங்கைகளில் கண்களை ஆழப் பதித்து மார்புகளில் அகல மூழ்கும் , புத்துணர்ச்சியைத் தரவல்ல நல்ல போகத்தை வேண்டாவென தம் மடமையின் வெறுத்து விடுவர், என் செய்வது?
30.
mati nilaa nutalaaroodu maNi nilaa munRileeRi
mutirnilaa veRippac cevvaay iLanilaa mukizppa moytta
katir nilaa vadangkoL kongkaik kaNkaL maarpakala muuzkum
putu nilaaviya nanpookam viduvar pun cayattooree

Those who lead the lowly religious life, not knowing what is real happiness will avoid enjoying pleasant moonlit nights with women with crescent-moon eyebrows embracing and kissing them in the verandahs where in the sky the full moon shines beautifully. There is life-renewal also when one sets the eyes and explores deep and wide the full breasts of such women ,brilliant with diamond ornaments.

NOTES:

The religious life is assumed here also as a life that forsakes the life of sexual love, the life where one enjoys embracing , kissing women in the evenings made pleasant by the presence of the full moon. It is also noted that such a life is invigorating in addition to being a happy one. The sexual libido and allowing that to rule existence is extolled here as the most excellent life. Since believe in the heavenly world requires abandoning this sex-based life, it is being criticized as mistaken lowly , something born of ignorance and which ignorance is seen also as a defilement.
Cittiyaar Lokayata -13

31.
ஊடுவது உணர்வது உற்ற கலவி மங்கையரை உள்கி
வாடுவது அடியில் வீழ்ந்து வருந்துவது அருந்தவம் பின்
கூடுவது உணர்வுக் கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய்
நீடுவது இன்ப முத்தி இத்தில் நின்றார்கள் முத்தர்
உரை:
அரிய தவம் எனப்படுவது காமவேட்கையின் காரணமாக பெண்கள் ஊட அதனை உணர்வது, அதற்குத் தக செய்ய ஊடல் நீங்க கூடி மகிழ்வதற்கு இசையும் மங்கையரை நினைத்து நினைத்து வாடுவது, அவர்கள் இணங்கும் வரையில் காலடியில் வீழ்ந்து வருந்துவது போன்றவையே யாகும். மேலும் முத்தர் என்பார், இதனை மறவாது மகளிர் நினைவாகவே வாழ்ந்து , பித்தம் தலைக்கேறி சித்தச் சிதைவு ஏற்பட்டாலும் குணமெல்லாம் இந்த மகளிர் பால் கொண்ட காமவேட்கையேயாய் நீடுவதே இன்பம், அதில் வரும் மனநிறைவே முத்தியாகும்.

31.
uuduvatu uNarvatu uRRa kalavi mangkaiayarai uLki
vaaduvatu adiyil viizntu varuntuvatu aruntavam; pin
kuuduvatu uNarvuk kedduk kuNamelaam veedkaiyeeyaay
niiduvatu inba mutti ittil ninRaarkaL muttar.

The real tapas men ought to do are attempts to cool the false anger of women and enjoy sexual union with them, pining for their company and union , falling at their feet and repent for the mistakes done till they consent for union and so forth. The real happiness is the sexual bliss and doing all to enjoy it even if it means madness and living always in contemplation of such happiness . The real salvation is also this satisfaction and contentment.

32.
வீட்டினை உளது என்று ஓடி மெலிவது இங்கு என்னை? வீடு
காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர்
நாட்டினில் அரசன் ஆணைக்கு இசையவே நடந்து நாளும்
ஈட்டிய பொருள் கொண்டு இங்கே இன்பத்துள் இசைந்திடீரே!
உரை:
இறைவனோடு இணங்குவதால் வரும் வீட்டின்பம் என்ற ஒன்று இருப்பதாக எண்ணி உடலை வருத்தியும் அங்குமிங்கும் ஓடியும் மெலிவது ஏன்? இப்படிப்பட்ட வீட்டின்பம் உண்டென கண்டோர் இதுவெனக் காட்டினோர் நலமே கேட்டோர் உண்டென்பதற்குச் சான்றுகள் யாதேனும் இருந்தால் காட்டுக. உலக வாழ்க்கையில் , வாழ்கின்ற நாட்டின் அரசனது ஆணைக்கு இசையவே நடந்து அரச தண்டத்திற்கு ஆளாகாது , உழைத்து ஈட்டப்படும் பொருள் கொண்டு மகளிர் வழி வரும் இன்பமே பொருளின் வரும் இன்பமே இன்பம் என்று வாழ்ந்திடுவீர்!

32
viiddinai uLatu enRu oodi melivatu enna? viidu
kaaddinoor kaNdoor keeddoor kariyavai uNdeel kaaddiir
naaddinil arasan aanaikku icaiyavee nadantu naaLum
iiddiya poruL koNdu ingkee inbattuL icaintidiiree!

Thinking that there is spiritual bliss on attaining releasement, why run around and doing many penances become lean in the process ? If there are individuals who can provide evidences for having met or heard of such individuals please show me. The best is to live in the country according to promulgation of the King of the nation and with wealth earned through hard toil enjoy the worldly pleasures along with sexual enjoyments.




பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=AruNandi%27s_Deconstruction_of_Lokayata-2&oldid=12314" இருந்து மீள்விக்கப்பட்டது