மோர்க்குழம்புமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:32, 31 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் எழுதியவர்: திருமதி.கீதா சாம்பசிவம் ஓரளவு புளித்த மோர் இரண்டு கிண்ணம். மோர்க்குழம்பில் போடக் காய் பூஷணிக்காய் நன்றாக இருக்கும், சேப்பங்கிழங்கும் போடலாம். இல்லையென்றால் வெண்டைக்காயை வதக்கிச் சேர்க்கலாம். பச்சை மிளகாய் இரண்டு, தனியா ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி து.பருப்பு, ஒரு தேக்கரண்டி க.பருப்பு, ஒன்றிரண்டு மிளகு, சீரகம் தேவையானால், அரிசி தேவையானால். அனைத்தையும் ஒன்றாக ஊற வைக்கவும். தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, கருகப்பிலை.
ஊற வைத்ததை அரைத்து விழுதை மோரில் கலக்கவும். எந்தக் காய் போடவேண்டுமோ அவற்றை உப்புச் சேர்த்து வேக வைத்தோ, அல்லது வதக்கியோ வைத்துக் கொள்ளவும். அதையும் விழுது சேர்க்கும்போது சேர்க்கவும். மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி,உப்புச் சேர்க்கவும். அடுப்பில் குறைவான தீயில் வைத்துச் சூடு செய்யவும். மோர்க்குழம்பு ஒரு கொதி வரும்போது இறக்கிவிடவும். ரொம்பக் கொதித்தால் நீர்த்துப் போய்விடும். கீழே இறக்கியதும் தேங்காய் எண்ணெயில் கடுகு, கருகப்பிலை தாளிக்கவும். தேங்காய் எண்ணெய் கொலஸ்ட்ரால் என்பவர்களுக்கு ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்தான் தேவை தாளிக்க, கடுகையும் கருகப்பிலையையும் அதில் போட்டு மோர்க்குழம்பில் கொட்டினால் வாசனை தூக்கும்! |