தக்காளி சாத வகைகள்மரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 3 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் முதல் முறை
தக்காளி நன்கு பழுத்தது 3 அல்லது நான்கு, வெங்காயம் பெரியது ஒன்றுபொடிப்பொடியாக நறுக்கவும். உப்புச் சேர்த்து வேக வைத்த பச்சைப் பட்டாணி தாளிக்க கடுகு, ஜீரகம், சோம்பு, எண்ணெய் வதக்க, தாளிக்க, மேலே தூவப் பச்சைக் கொத்துமல்லி. மஞ்சள் பொடி, சாம்பார் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், கரம் மசாலாப் பொடி ஒரு டீஸ்பூன், உதிர் உதிராக வடித்த சாதம் இரண்டு கிண்ணங்கள்.
சாதம் வேக வைக்கும்போதே பட்டாணியையும் உப்புச் சேர்த்து ஒரு தனித்தட்டில் வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, ஜீரகம், சோம்பு தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பட்டாணி, தக்காளியைச் சேர்க்கவும். மஞ்சள் தூள், சாம்பார்பொடி சேர்க்கவும். நன்கு தக்காளி வேகும் வரை வதக்கவும். பின்பு ஏற்கெனவே வடித்து ஆற வைத்திருக்கும் சாதத்தில் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் கரம் மசாலாப் பொடியையும் போட்டுக்கலக்கவும். பின்னர் பச்சைக் கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
இன்னொரு முறை:
ரொம்பவே ஆசாரக் காரங்க வெங்காயம் சாப்பிடாதவங்களுக்கான முறை:
மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம் வறுத்துப்பொடி செய்து கொள்ளவும். தக்காளி சாதத்துக்குத் தாளிக்கிறாப்போல் ஏலக்காய், கிராம்பு எனத் தாளிக்காமல் கடுகு, ஜீரகம், கடலைப்பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை ஒரு மி.வத்தல், ஒரு பச்சை மிளகாய் தாளித்துத் தக்காளியைப் போட்டு, உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும். சாதத்தை உதிராக வடித்து ஆற வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு ஏற்கெனவே வறுத்து வைத்திருக்கும் பொடியை இரண்டு டீஸ்பூன் கலக்கவும். பின்னர் வதக்கிய தக்காளிக்கலவையைச் சேர்த்துப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும். இதற்கு வெள்ளரிக்காய்ப் பச்சடி, காரட் தயிர்ப்பச்சடி சரியான துணை.
--Geetha Sambasivam 09:14, 3 நவம்பர் 2012 (UTC) |