இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்
- சேசாத்திரி
இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.
தமிழ் மக்களின் தோற்றமும் அவரது பண்பாடும் குறித்த புதிர்மறைவுச் (mystery) செய்தியின் மடிப்பானது இலெமூரியாக் கண்ட நிலைப்படலைச் சுற்றிச்சூழ்ந்த புதிர்மறைவு வெடித்துவெளிப்பட்டு அதோடு அதன் உணமைத் தரவும் உறுதிப்படுமானால் அவிழ்ந்துவிடும். வேதம், தமிழின் செம்மொழிச் சங்க இலக்கியங்கள், கல்வெட்டியல், நிலவரைவியல் (geography) நிலத்தியல் (geology), மற்றும் நிலவடிவியல் (geomorphology) ஆய்வுகள் சிறிதளவு வெளிச்சத்தையும், அதோடு இப்பொருண்மைக்கூறு பற்றிய ஓர் அளவுபட்ட பருமத்திற்கு பருப்பொருளையும் (sizeable volume of material) எறிந்துள்ளன. ஆயினும் அவை பொறுப்பதிகாரத்தில் உள்ளோரின், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாததால் அகன்ற அளவில் அறியப்படவில்லை. கடந்த ஓர் இலக்கம் (1,00,000) ஆண்டுகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் குறித்த நிலத்தியல் ஆய்வுகள் அறிவியலாளர்களை கி.மு.80,000 முதல் கி.மு. 2,600 வரையிலாக ஐந்து பெரும் படுவீழ்ச்சிக்குரிய (cataclysmic) மாற்றங்களை வரிசைப்பட்டியிட (table) இயல்வித்தன. இறுதிப் பேரிடர் கி.மு. 3ஆம் ஆயிரஆண்டுகளின் (millenium) இடைக்காலத்தில் நிகழ்ந்தது, இதுவே தமிழ் இலக்கியஙகளில் பதியப்பட்டு உள்ளது. அடிக்கடலுக்குள் குமரிக்கண்டத்தின் அமிழ்வு நிகழ்வானது பின்வருமாறு பல்வேறு கட்டங்களைக் கடந்துள்ளது.
1. முதல் நிலை 16,000 கி.மு. ஊழிவெள்ளம் (deluge) தொடங்கி இலெமூரியாவின் பெரும்பகுதி அமிழ்ந்தது.
2. இரண்டாம் நிலை 14,000 கி.மு. இலெமூரியாவின் இன்னம் சில பகுதிகள் அமிழ்ந்தன.
3. மூன்றாம் நிலை 9,500 கி.மு. மீண்டும் எஞ்சியவற்றில் பெரும் பகுதி அமிழ்ந்தது.
4. நான்காம் நிலை 3,000 - 2,400 மாந்தர் நாகரிகத் தொடக்கம் பற்றி.கட்டியம் (heralds) கூறுகின்றது.
5. இறுதி நிலை 1,700 கி.மு. கடைசி சங்க காலத்துடன் ஒன்றிப்பாகின்றது.
இலங்கையின் நிகழ்ச்சிக்கோவையான மகாவமிசத்தின்படி, இலங்கைக்கு தெற்கே அமைந்த நிலம் 4,900 கல்தொலைவுகள் (miles) இதாவது 700 காவதம் வரை பரவி இருந்தது. இருந்தபோதிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அதன் துலக்கமான பரவல் இன்னமும் நிறுவப்பட வேண்டி உள்ளன.
தமிழ் மரபுகள் மூன்று பெருஞ் கழக(சங்க)ங்கள் முறையே தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரையில் செயற்பட்டதாகப் பதிவு செய்கின்றன. ஆயினும் அவை கடலால் விழுங்கப்பட்டுவிட்டன.
பண்டைக் காலத்தே ஏழு தமிழ்க் கழகங்கள் செயற்பட்டதாக மகாவமிசம் குறிப்பிடுகின்றது. மேலும், இற்றை மதுரை நகரம்தான் மூன்றாம் தமிழ்க் கழகத்தை ஓம்பியது (hosted) என்பது நிறுவப்பட வேண்டியுள்ளது. கழக(சங்க) இலக்கியங்கள் வண்ணிக்கின்ற விந்திய மலைக்குத் தெற்கே கிடக்கின்ற நிலத்தையும் தீவுகளையும் குறிப்பறிவது ஆர்வமூட்டவதாய் உள்ளது, இது இலெமூரியாக் கண்டத்தினுட்படுவதாகலாம். அதன் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மணிமேகலை தமிழகத்திற்கு அருகே இருந்த சம்புத் தீவையும் அதே போல் சம்புத் தீவு எனப்படும் ஒரு மிகப் பெருந்தீவையும் குறிக்கின்றது.
2. 7 ஆம் நூற்றாண்டு நாயன்மாரான அப்பர் நாவலந்தீவில் வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
மேற்சொன்ன மேற்கோள்களின்படி நாவலன்தீவு என்பது இந்திய மற்றும் அயலக அறிஞர்களால் இலெமூரியா என அடையாளங் காணப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும், இற்றைத் தென்னிந்தியா அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு தொலைந்துபோன இந்தியப் பேராழிக் கண்டத்தின், வேறுவகையில் இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்று அழைக்கப்படுவதன் மீந்தமிச்சமாக உள்ளது.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும் (புற. 6)
செந்நீர் பசும்பொன் உயரியர்க் கீந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே (புற. 9)
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலம்பு. 11-17-22)
மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலி: 104-1-4)
(குமரி என்பது குமரி ஆற்றையும் குறிப்பதாகலாம்)
அகழாய்வுகளின் மூலம் மேற்கொள்ளப் பெறும் நிலத் தொல்லியலால் தமிழ் நாட்டின் ஆழமான தொன்மையை, இதாவது முந்து வரலாற்றுக் காலத் தொன்மையை மெய்ப்பிக்க இயலாமல் போகலாம். நாம் பண்டைய நாகரிகங்கள் மெசபெட்டோமியா, எகிபது மற்றும் சிந்துவெளியில் நிலைப்பட்டிருந்தமையைக் கண்டு வியக்கிறோம். இருந்தபோதிலும், பெரும் நாகரிகங்கள் முந்து வரலாற்று உலகில், குறிப்பாக இந்தியாவில் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னம் செழிப்புற்றிருந்தன. இந்தியாவைச் சுற்றிச்சூழ்ந்து நிலைப்பட்டிருந்த கண்டத்தின் புதிர்மறைவைத் (mystery) தோண்டிஎடுப்பதும், அதன் மடிப்பைஅவிழ்ப்பதும் (unfold) மிகக் கடினமானது. ஆயினும் இன்று கடலடியில் தொலைந்துபோன அரசியத்தின், கண்டத்தின் மீதங்களைத் தோண்டிஎடுக்க அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் நடைமுறைபட்டு வருகின்றன. நம்மை, மூழ்கிய நிலங்களின் புகழ்மிகுக் காட்சியை ஊடுநோக்கச் செய்கின்ற பேராழியில் (oceanography) அல்லது கட்டமைவுக்குலைவு (tectonic) அறிவியல் அமெரிக்காவிலும் ரசியாவிலும் வளர்ந்துள்ளன. இதனால் இலெமூரிய மற்றும் அட்லாண்டிகு போன்ற தொலைந்த கண்டங்கள் பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்கள் கவனத்திற்கு செல்லும்.
இலெமூரியா :
இலெமூரியா இந்தியப் பேராழியின் "தொலைந்த கண்டம்" என்று அடிக்கடி குறிக்கப்பெறுகின்றது. இந்த அமிழ்ந்த நிலப்பரப்பு குறித்துத் தான் இந்தியத் தொல்லியலாளர் இடையேயும் அதே போல் அயலக எழுத்தாளரிடையேயும் பெருத்த ஊகங்கள் நிலவுகின்றன. விசர் எசு. கார்வியின்படி (Wisher S. Carve) 'இலெமூரியா - பசிபிக்கின் தொலைந்த கண்டம்' என்ற அவரது வியத்தகு நூலுள் தொலைந்த இலெமூரியாக் கண்டம் அட்லாண்டிகு, பசிபிக்கு மற்றும் இந்தியப் பேராழியின் பெரும் பரப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்று அவர் நோக்குகிறார். இலெமூரியர்களை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொலைவான மவுண்ட்டு சாஸ்தா பகுதிகளில் காணவியலும் என்று அவர் மேலும் விரித்துரைத்து உள்ளார். அவருடைய கொள்கை பல மேலை மற்றும் அமெரிக்க அறிஞர்களிடமிருந்து ஆதரவைப் பெற்று உள்ளது. அயல்நாட்டு எழுத்தாளர்கள் இலெமூரியாக் கண்டமானது இற்றைய இந்தியப் பேராழியுடன் தொடர்புடையது என்று நம்பினர்.
கழகக்(சங்க) காலத்து உள்நாட்டு இலக்கிய ஆக்கங்களும், அப்பர்த் தேவாரமும் விந்தியத்திற்குத் தெற்கே நிலைப்பட்டிருந்த ஒரு தீவு பற்றிய விளக்கமான வண்ணனையை கொண்டுள்ளன. இத்தீவு அல்லது நிலப்பரப்பே 'சம்புத்தீவு', 'நாவல் பெருந்தீவு' மற்றும் 'நாவலம் பொழில்' என்றும் பலவாறாக அழைக்கப்படுகின்றது.
மேற்சொன்ன தீவுகள் குறித்த சங்க இலக்கிய வண்ணனை பின்வருமாறு செல்கிறது:
"சம்புத் தீவினுட் டமிழக மருங்கில்" மணிமேகலை
"இமிழ் கடல் வரைப்பிற் தமிழக மனிய" சிலப்பதிகாரம்
"இஅமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க" பதிற்றுப்பத்து
"நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து" மணிமேகலை
அப்பர் இத்தீவை பெரு நாவல் தீவு என்று அழைக்கிறார்.
"நாவலும் பெருந் தீவினில் வாழ்பவர்"
இந்தோ- பேராழிக் கண்டம் தென் இந்தியாவை அதன் ஒரு மீந்தபோன, பிணைந்த பகுதியாகவே கொண்டுள்ளது. சம்புத்தீவை திருச்செந்தூரில் தமிழ்க் கழகம் (சங்கம்) நிறுவியதாக நம்பப்படும் ஒரு தமிழ் அரசனே ஆண்டதாக ஊகங்கள் உள்ளன. அவன் ஒரு பேரறிஞன் என்பதோடு அறிஞர்களையும் புரப்பவன். அவன் ஒரு பெரும் முருக பக்தன் என்பதோடு முருகப் பெருமானின் ஆளுமையைப் புகழ்ந்தும் தமிழ் இலக்கணம் மற்றும் சொற்பிறப்பியல் குறித்தும் நூல்கள் பல ஆக்கியவன். தமிழ்க் கடவுள் முருகனது பெருந் தோற்றத்தின் அடியில் பல செவிவழிச் செய்திகளும் மரபுகளும் வளர்ந்தன. அந்த ஆட்சியாளன் குமரவேல் என்று அழைக்கப்பட்டான்.
முதல் தமிழ்க் கழகம் (சங்கம்) தென்மதுரையில் செயற்பட்டது என்பது அறியப்பட்டதொரு உண்மையாகும். இரண்டாம் தமிழ்க் கழகம், தென்பாண்டிய நாடு அமிழ்ந்துவிட்ட பிறகு தென்மதுரையில் இருந்து இடம்மாற்றப்பட்டு கவாடபுரத்தில் செயற்பட்டது. மீண்டும் நிகழ்ந்த இன்னொரு ஊழிவெள்ளம் பாண்டிய அரசன் முடத்திருமாறனை கவாடபுர நகரைக் கைவிடும்படியான கட்டாய நிலைக்குத் தள்ளி, அவன் புதுநகர் மதுரையைத் தலைதநகராய்த் தேர்ந்தெடுத்து அதனையே தமிழ்க் கழகத்தின் தலைமை இருக்கை ஆக்கினான் போலத் தெரிகின்றது.
மேற் சொன்ன நிகழ்வுகள் இந்தியப் பேராழியில் அடிக்கடல் புலனாய்வுகளுக்கான தேவையைத் தெளிவாகச் குறிக்கின்றன.
ஊழிவெள்ளத்திற்கான (deluge) காரணங்கள் பன்மடிப்பானவை (manifold). ஊழிவெள்ளத்திற்கு எல்லாம்வல்லானைக் (almighty) காரணங்காட்டும் மதமுகாமை வாய்ந்த பல கொள்கைகள் உள்ளன. தொன்மக் கதைகள் அறிவியலாளர்களை நம்பகப்படுத்தாமல் (convince) போகலாம். "பெரு வெள்ளம்" போன்று ஓர் இயற்கைத் துன்பியல் (tragedy) நிகழ்வு முந்து வரலாற்று நாகரிகங்களை அழித்திருக்கலாம் என்ற மற்றொரு பார்வையும் உள்ளது.
அறிவியல், நிலக்கோளமானது ஒரு வால்மீனால் (comet) மோதப்பட்டு அதன் மட்கற்புதைமண்ணை (dirt bed) இடம்பெயர்த்தியதால் நாகரிகங்கள் அழித்துள்ளன என்று விளக்குகின்றது. அத்தகு இடப்பெயர்வு அரிதாகப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும்.
1968 இல் இந்தியப் பேராழியின் நடுமோட்டின் (central ridge) மேல் விளக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியப் பேராழியில் காந்த விலக்கங்கள் நிலைப்பட்டிருந்ததை நிறுவியது. இந்த ஆய்வு ஆப்பிரிக்காவும் தென் அமெரிக்காவும் 18 கோடி ஆண்டுகள் முன்னம் வரை கோண்டுவானாக் கண்டத்தின் ஒரு பகுதியாகப் பூட்டிப் பிணைந்திருந்ததை வெளிப்படுத்தியது தொன்மையான கோண்டுவானா நிலத்திலிருந்து முறிந்துபிரிந்த பின்பு இந்தியாவை ஏந்திய நிலவட்டாரம் வடகிழக்குமுகமாக விரைந்து நகரத் தொடங்கியது. இது ஒரு கண்டப் பெயர்வு நிகழ்ச்சி ஆகும். இந்தியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா மற்றும் ஆத்திரேலியா ஆகியனவற்றின் மூலப் பொருத்தம் (original fit) இதுகாறும் நிறுவப்படவில்லை.
மேற்சொன்ன கண்டப் பெயர்வு, மோதல் முதலாயன உலகம் 18 கோடி ஆண்டுகள் முன்னமும், 12.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 5.5 கோடி ஆண்டுகள் முன்னமும், 4 கோடி அண்டுகள் முன்னமும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றது. (National Geographical Association Atlas)
மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில், முந்து -வரலாற்றின் கடந்த காலத்துக்குள் ஊடுநோக்க (peep) உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரு
முழுமையான பேராழி அளக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கலாம். அடிக்கடல் தொல்லியல் அகழாய்வுகள் இந்தியப் பேராழியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பதிவைப் (record) பொருத்தமட்டில், கடந்த நூற்றாண்டின் இறுதிக் காற்பங்கில் (last quarter) அமிழ்ந்து போன துவாரகை நகரையும் பூம்புகார் நகரையும் இடமறிவதற்கு ஏற்கெனவே ஒரு சிறு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டாகிவிட்டது.
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, "Lemuria : The Last and the Lost Continent of Tamils" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "அருங்கலைச் சொல் அகரமுதலி" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி. பின் வரும் தனிக் கட்டுரையும் இலெமூரியாவுடன் தொடர்புடையதால் இக்கட்டுரையுடன் இணைத்து வழங்கப்படுகின்றது.
தமிழகமும் இந்தியப் பேராழியும்
கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது.
இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் "Outline of History" என்ற நூலுள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது. நிலத்தியல் (geological) சான்றுகளின்படி, தென்இந்தியாவானது தொடக்க காலங்களில் கிழக்கில் மியான்மர் முதல் தென்சீனம் வரை கிழக்குமுகமாகவும் மேற்கில் தென்ஆப்பிரிக்கவும் வடக்கில் விந்திய மலைகளிலிருந்தும், தெற்கே ஆத்திரேலியா வரையுமாக விரிந்திருந்த ஒரு பெரும் பரப்புடைய கண்டத்தின் பகுதியாகவே இருந்துள்ளது. அசாம் மூலமாகத் தென்இந்தியா இமயத்தோடு சிறிது தொடர்பு கொண்டிருந்திருக்காலம் என்று அவர் சொன்ன செய்தியைக் அது கொண்டுள்ளது. இக் கண்டம் வடக்கில் அசாமில் இருந்து விரிந்து, கி.பி. முதல் நூற்றாண்டில் செவ்விலக்கிய எழுத்தாளர்களால் எரித்திரியக் கடல் என்று அழைக்கப்பட்ட அரபிக் கடலோடு இணையும் நெடிது நீண்டக் கடலால் கட்டுவரம்பிடப்பட்டு இருந்தது. சற்றொப்ப 82,000 ஆண்டுகளுக்கு முன்னம் உயர் நாகரிகமுற்றிருந்த நிலங்களில் போதிய மாற்றங்களை நிகழ்த்தியபடி காந்த அலைத் தொடர்கள் உலகைச் சுற்றிலும் கிழக்கில் இருந்து மேற்கு முகமாக நகர்ந்தன என்று நிலத்தியலாளரும், அறிவியலாளரும் சொல்லியுள்ளனர். இதன்போது ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கின்ற இலெமூரியாக் கண்டம் தன்னை ஒரு சின்னஞ்சிறு அளவினதாகக் குறைத்துவிடும்படியாக சற்றே மூழ்கத் தொடஙகியது, அதன் விளைவாக கண்டத்தின் மேற்குப் பகுதிகள் ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா, சுமத்திரா, சாவா மற்றும் போர்னியோவை நோக்கிப் பல்வேறு திசைகளில் பிரிந்து சிதறியன.
இலெமூரிய மக்கள் நீல்ஆற்றுச் சமவெளி முதலாய, ஆப்பிரிக்க பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களே பாபிலோன், அசீரியா மற்றும் சுமேரியாவிற்கு நகர்ந்தனர் என்றும் அங்கு பெரும் நாகரிகங்களை நிறுவினர் என்றும் சொல்லப்படுகின்றனர்.
வேறொரு கருத்தின அறிஞர்களின்படி (school of scholars) பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆத்திரேலியாவை உட்கொண்டு தென் அரைக்கோளத்தில் (hemisphere) விரிந்திருந்ததாகத் தெரிகின்ற கோண்டுவானா எனப்படும் ஒரு திரண்ட பெருங்கண்டம் இருந்துள்ளது. இந்த கோண்டுவானா நிலம் பல நூறாயிரம் ஆண்டுகள் முன்னமே பிரிந்து போய்விட்டது என்பதோடு பின்னீடு இந்தியப் பேராழியில் அமிழ்ந்து போன இலெமூரியா இந்த கோண்டுவானா நிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தக் கண்டம் தான் மாந்த இனத்தின் மீதொடக்கத் தாயகமாக இருந்தது என்பதோடு குரங்கு போன்ற விலங்குகளின் வாழிடமாகவும் அது இருந்தது. அதைமுன்னிட்டு, இலெமூரியா மாந்தக்குரங்கினத்தினின்று (anthopoid apes) முதன்முதலாக வெளிப்பட்டு வளர்ந்த மாந்த இனத்தின் தாயகமாகவே கருதப்படுகின்றது. ஆனால் கெடுவாய்ப்பாக (unfortunately), இக்கால் அக்கண்டம் இந்தியப் பேராழி மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கிவிட்டது. இந்தியப் பேராழி தன் சிறகுகளான பெரும்பரப்பான நீர்ப் போர்வையை இந்தியா வரையான தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை நெடுகலும் பரப்பி உள்ளது. கண்டத்தின் பெரும்பால் பகுதிகளின் சரிந்தமிழ்விற்கு (subsidence) முகாமையான காரணங்கள் ஒன்றனுள் கடும் அழிவெள்ளங்களும் (cataclysms) நிலநடுக்க விசைகளுமே ஆகும். அதைமுன்னிட்டு, மிகச் சேய்மையானக் காலந்தொட்டே மக்கள் தோன்றி வாழ்ந்த நிலத்தின் பெரும் பகுதிகள் பேராழியின் அடியில் அமிழ்ந்து போயின. மேலும், இரசபுத்தாராக் கடலின் நிலயெழுச்சியும் கூட இதே விசைகளால் நிகழ்ந்ததே.
இக்கால் உலகம் மாந்தவுயிரைப் பல நூறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிலைக்கவித்துக் கொண்டுள்ளது என்பதோடு கதிரவ மண்டலத்தில் நிகழும் சிறுமையான பிரிகைகளின் (divergencies) காரணமாக மேலே குறிப்பிட்ட கடும் இயல்புக்குலைவுகளுக்கு ஆட்பட்டு வந்துள்ளது. செவிவழிச் செய்திகளும் மரபுகளும் கூட 13,000 ஆண்டுகள் முன்னம் மண்ணுலகைத் தழுவிக் கொண்ட பேரழிவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அக்காலங்களில் அட்லாண்டிக்கையும் இலெமூரியாவையும் அழித்தபடி கடல் சுண்டியெறிந்தும் வீழ்ந்தும், பெரும் ஓத அலைகளாய், வெள்ளமாய் எழும்பியது. நடைமுறையில் இந்த அழிவெள்ளமே உலகின் முடிவாக இருந்தது. பல்வேறு சீன, இந்திய, அமெரிக்க மற்றும் பாலிநேசியச் செவிவழிச் செய்திகளும் தொன்மங்களும் இந்நிகழ்வை குறிப்பிடத்தக்க ஒப்புமையுடன் வண்ணிக்கின்றன.
மேலுள்ள கலந்துரையாடலின் வெளிச்சத்தில் தொல்பழமையில் இலெமூரியாவின் தென்கண்டத்தில் தமிழர்களுடைய ஒரு பண்டைய நாகரிகத்தின் மறுக்கமுடியாத சுவடுகள் இருந்தன என்று சொல்லலாம். இக்கண்டத்து மக்கள் காட்டுவிலங்காண்டிகள் (Barbarians) அல்லர் ஆனால் பெரு நகரங்களையும் நகர நாகரிகத்தையும் கட்டிஎழுப்பிய நாகரிக மக்கள் ஆவர்.
இந்தியப் பேராழியின் திரிவாக்கம் (Evolution of Indian Ocean):
இந்தியப் பேராழியில் ஞாயிறு தீவு (sun island) போலவும், பென்ஹையா தீவு போலவும் பல்வேறு தீவுகள் நிலைப்பட்டிருந்தன. பின்னீடு ஒரு பெருந்திரண்ட நிலப்பரப்பு துண்டு துண்டாகக் கடலடியில் மறைந்து போனது அதோடு இந்தியாவையும் மடகாசுகரையும் இணைக்கின்ற நிலப் பாலம் முறிந்து சிதைந்விட்டது. அதுவே இற்றைத் தீவுகளின் நிலைப்பட்டிருத்தலுக்குக் காரணமாகியது; அவை இலெமூரியாவின் மீதங்களாக இருந்தவை.
இந்திய மற்றும் மேலை அறிஞர்களால் எழுப்பப்பட்ட வினா திராவிடர்களின் மூல தாயகக் கொள்கையை நடுப்படச் சுற்றுகின்றது; அது அவருடைய தாயக நிலம் இந்தியப் பேராழியின் அடியில் மூழ்கிப்போனதா? அல்லது மூலதிராவிடர்கள் ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் அதேபோல் வடக்குநோக்கி இந்தியக் கடற்கரைக்கும் பாரசீகக் குடாவிற்கும் இடம்பெயர்ந்தனரா? என்பதே. இலெமூரியாக் கண்டத்தின் ஊழ் (fate) மற்றும் அதன் மூலக்குடிவாணர் குறித்த இவ் வினாக்களுக்கும் புதிரிகளுக்கும் விடையளிக்கப்பட வேண்டும், இதற்கு மிகஆழ்மான பகுப்பாய்வும் இந்தியப் பேராழி மேற்பரப்பு பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வுமே வேண்டியுள்ளது. கடலடி அகழாய்வுகள் இலெமூரியக் கடைசிக் கண்டத்துடன் பிணைப்புற்றுள்ள பண்டைத் தமிழரது பண்பாட்டுச் சுவடுகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு உயிர் போன்று விளங்குகின்றன.
மேலே கலந்துரையாடிய கொள்கைக்குச் சார்பாகவும் எதிராகவும் இப் பொருண்மைக்கூறு (subject) குறித்த தம் நோக்குகளை வெளிப்படுத்துகின்ற மேன்மைமிகு அறிஞர்களும் உள்ளனர். அவருள் உரூசல் வாலசு (Russel Wallace), எடுவர்டு லென்சர் (Edward Lancer), விசர் எசு. கார்வி (Wisher S. Carve), ஃபெர்டினாண்டு குன் (Ferdinand Kunn), நய் எர்ரண்டு (Knigh Errant), பி. சி மசூம்தார் (B.C. Mazumdar), டி. டபுல்யூ. ஓல்டெர்நெசு (T.W. Holderness), வி.பி. கேட்கர் (V.B. Ketkar), வாடியா மற்றும் பிற பெரும் அறிஞர்கள் அடங்குவர். இலங்கை வரலாற்றியலர் திரு குலரெத்தின, 'இலங்கையானது இற்றைய தீவக்குறை (peninsular) இந்தியா, பெரும் பகுதி ஆப்பிரிக்கா, மேலை ஆத்திரேலியா மற்றும் பிரேசில் ஆகியன அடங்கிய கோண்டுவானா நிலம் எனப்படும் ஒரு பெரும்பரப்பு மூழ்கிவிட்ட கண்டத்தின் பகுதியாக விளங்கியது' என்று சொன்னார்.
முக்காலமும் உணர்ந்தவராக அறியப்படுகின்ற தந்திரஓகி திரு. பிரபாத் ரஞ்சன் சர்க்கார் என்பவர் "Human society is one and indivisible - Part 1" என்ற தம் நூலுள் "விந்திய மலைகளுக்கு வடக்காக திபெத்து வரை கிடக்கின்ற இற்றைய வட இந்தியப் பரப்பு முந்து-வரலாற்றுக் காலத் தொன்மையில் பேராழிக்கடியில் அமிழ்ந்திருந்தது. விந்திய மலைகளுக்கு தெற்கே தென்இந்தியாவையும், இற்றைய அரபிக் கடல், பாலிநேசியத் தீவுகள், மலேசியத் தீவுத்திட்டுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றை உளளடக்கிய பரப்பு கோண்டுவானா நிலம் என்னும் ஒரு பெரும்பரப்பு வட்டாரமாக விளங்கியது. ஆத்திரிக்கு (Austrics) மரபின மக்கள் கோண்டுவானா நிலத்தின் வடபகுதியிலும், நீக்கிரோ மரபின மக்கள் அதன் தென் பகுதியிலும் வாழ்ந்திருந்தனர். அதன் நடுப்பகுதியில் ஆத்திரிக்குகளும், நீக்கிரோக்களும் ஆகிய இருசாராரும் வாழ்ந்திருந்தனர். இக்காலத்து திராவிடர்கள் இந்த ஆத்திரிக்கோ - நீக்கிராய்டு மக்களின் வழிதோன்றல்கள் ஆவர்" என்று கூறியுள்ளார்.
இலெமூரியர்கள் :
இலெமூரியக் கண்டத்துடன் தொடர்புடைய பண்டைய எகிபதின் கையெழுத்துச்சுவடி மூலங்கள் இலெமூரியர்களின் உடலுயரம் (stature), இயல்பு குறித்து ஒரு கவர்ந்தீர்க்கும் குறிப்பை வெளிப்படுத்தி உள்ளன. அம்மூலங்களின்படி, அதில் விளங்காப்புதிர்கள் (Mysteries), மெய்ந்நிகழ்ச்சிகள் (Facts) மற்றும் புனைவங்கள் (Fictions) ஆகியன இலெமூரியரின் வழித்தோன்றல்களைச் சுற்றிச்சூழ்ந்து இருந்தன. இலெமூரியர்கள் வழக்கமாக மலைச் சரிவுகளின் உச்சியில் தம் மனைகளையும், கோவில்களையும், குடியேற்றப் பகுதிகளையும்.கட்டி இருந்தனர். அவர்கள் வலுவானவர்களாகவும் (strong), கரடானவாகுடையவர்களாகவும் (sturdy) இருந்தனர். உருவில் செவ்விந்தியரை ஒத்திருந்தனர், அவர்தம் தோல் மங்கிய நீல மென்சாயம் கொண்டதாய் இருந்தது. அவர்கள் இயல்புவிஞ்சிய பெருந்தலையையும் நெற்றியையும் கொண்டிருந்தனர். நெற்றியின் நடுவே கற்கனிப்பருப்பு (walnut) போன்று 'மூன்றாம் கண்' என்று சொல்லப்படுகின்ற முன்துருத்தம் (protrusion) இருந்தது. இச் சிறப்புக்கூறுகள் தொலைவிலுணர்தல் (telepathy) மற்றும் ஆறாம் அறிவுணர்வு ஆகியனவற்றை வளர்க்கும் உயர் வளர்ச்சி பெற்ற மன ஆற்றல்களைச் சுட்டும். இவ்வகை நெற்றி சிவபெருமானது நெற்றியையும் அதோடு சங்க இலக்கியத்தில் புலவர் நக்கீரரால் குறிக்கப்படும் நெற்றிக் கண்ணையும் நினைவூட்டுகின்றது. சங்க இல்க்கியத்திலிருந்து தெரிவிக்கப்படும் இவ் உண்மைகள் பலநூறாயிரம் ஆண்டுகள் முன்பாக வாழ்ந்த இலெமூரியர்களின் உடலமைப்பிற்கு சில ஒப்புமைகளை ஏந்தி உள்ளன.
மலைஉச்சிகள், இமயம் முதல் இந்தியப்பேராழி (குமரி) வரை வாழும் மக்களால் வழிபடப்படுகின்றன. அமெரிக்கப் பழங்குடிகளும் கூட மலை உச்சிகளை வழிபடுபவர்தாம். இதனால் இலெமூரியர்களுக்கும் அட்லாண்டிக்குகளுக்கும் தொடர்புகள் இருந்தாற் போல் தெரிகின்றது. மறக்கப்பட்ட இக்கண்டத்தினுடைய வியப்பார்ந்த கமுக்கங்கள் (secrets) இன்னமும் அந்த மருட்டும் கடலில் மறைந்துள்ளன, புதையற்பொருளாய் காப்புற்றுள்ளன.
பார்வை நூல்கள்:
Alexander kondratov : Riddle of the Three Oceans
Dr. Rober L. Fisher : The Central Ridge of the Indian Ocean in 1968
H.G. Wells : Outline of Histroy
Henry Yule. CB, FRGS : The Wonders of the east (translated from the latin original), London
Schoff, W.H : Periplus of the Erythraean Sea, Oriental Books reprint corporation, 1974, second edition
Wishar S Carve : Lemuria - The Lost continent of the Pacific
--SelvanUS 06:40, 21 அக்டோபர் 2012 (UTC)செல்வன் --SelvanUS 06:40, 21 அக்டோபர் 2012 (UTC)