தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 12 மாதா தேர்வடப் பாமாலை

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:35, 11 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 மாதா தேர்வடப் பாமாலை


பண்டித ரூபின் வர்மா


வானகத்தார் வையகத்தார் வாழ்த்தும் பனிமயமே


கானகத்தார் செந்தேனே கண்மணியே--


பானிலவைத்


தாட்கொண்ட தாயே தமியர் குறை நீக்கி


ஆட்கொண்டு செய்வாய் அருள்,

பல்லவி

மரியே மாதாவே மரியே மாதாவே
மரியே மாதாவே மரியே மாதாவே

அனுபல்லவி

தேவாதி தேவனைத் தந்த மாதாவே


தினகரன்றனைமடி யுடுத்த மாதாவே


பாவாணர் போற்றியே பணியும் மாதாவே


பனிமய மெனவானோர் வணங்கும் மாதாவே

இரத்ன முடிபுனை அரசர் மூவாறு


அருங்குலத்தினிலவ தரித்த மாதாவே


விரதமார் முனிவர் கன்னியர் தவமே


விளங்கிட அன்னவர் இறைஞ்சும் மாதாவே

வானிடை தவழும் பன்னிரு மீனை


வளர்சுடர் மழுடமாய் வேய்ந்த மாதாவே


கானிடை கடலிடை வருந்துவர் பாது


காவலாயவரிடர் தீர்க்கும் மாதாவே


அழிந்திடா உடலமர் சவியேர் முனிவன்


அருளினாற் பரதர்க்குக் கிடைத்த மாதாவே


இழிந்தமா அலகையின் தலைபொடிபடவே


எழில் திருவடியால் தகர்த்த மாதாவே

உரோமர் கொண்டாடிடும் ரோமர் மாதாவே


உலகிருள் நீக்கிய உலக மாதாவே


சரோருகத் தூய் கழல் சந்திரன் மிதித்த


சந்திர குலத்தவர் போற்றும் மாதாவே

பாரினில் மாந்தர் மகிழ்ந்திடப் புதுமை


பற்பல ஆற்றிடும் புதுமை மாதாவே


சீர்வளர் புதுமையால் மகர் பல பெயர்


சிறப்புறச் சூட்டியே வணங்கும் மாதாவே

அடல்விளை டச்சியர் கொடுமையால்


ஆண்டு ஓரேழ்வாழ் கொற்கை, மாதாவே


கடல்வளை எழுதுறை அடைக்கலத்தாயே


கலவலோர் வாழ்த்தும் பரதர் மாதாவே

மாதாவே யுளைத்தென் பரதர்மா


மைந்தர்யா மழைக்க மறுப்பாயோ


நீ தாயென் முன்னர் காத்த நீள்


நிகழ்த்திட வல்லுனர் யாவர் மாதாவே

அரசருங்குடிகளும் அனைவருமொன்று


ஆதரித்தாட்கொள்ளும் ஆண்டவன் நீயே


வரமருள்,வாய் தமிழ், வளநாடு செழிக்க


வழுவிழாக்குமரியே வானோர் மாதாவே

வடசிந்து நதிவெளி வாழ்ந்த பரவர்கள்


ஐரோப்பியர் பிறையென்றல் மா


தேசிகர் சூழ்ந்த திருமறை நாவலந்


தீவினிறி பரவ அருள் செய் மாதாவே


--Geetha Sambasivam 06:35, 11 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 11 செப்டெம்பர் 2012, 06:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,359 முறைகள் அணுகப்பட்டது.