இறைவனைக் காண்போம்-- சின்ன வல்லூறுமரபு விக்கி இருந்துGeetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:50, 3 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (42)
(பெரிக்ரீன் ஃபால்கன் - படம் பிடித்தது சுதீர் ஷிவ்ராம்)
(“கடைசீ வினாடிகளில் இறகுகளை உடலோடு மடித்துக் கொண்டு அதி வேகத்தில் பறந்திடும்” – படம் கேரி எ. டேவிட்)
தமிழ் நாட்டில், இப் பறவையின் ஒரு சகோதரன் தான் சின்ன வல்லூறு, ஓணாங்கொத்தி, பைரி என்று பல பெயர்களில் அழைக்கப் படும் ஒரு பறவை. இதன் ஆங்கிலப் பெயர் ஸ்பேரோ ஹாக் (Sparrow hawk). இப் பெயர் வரக் காரணம் இதன் பிரதான உணவு சிட்டுக் குருவிகள் (Sparrows).
(சின்ன வல்லூறு - படம் இணைய தளத்தில் இருந்து) விஜயவாடாவில் ஒரு நாள் காலை விட்டின் பின்புறம் நான் நின்று கொண்டிருந்த போது ஒரு சிட்டுக் குருவியை ஒரு சின்ன வல்லூறு துரத்திக் கொண்டு வந்தது. குளியல் அறை சுவர் அருகே வந்ததும் சிட்டு சட்டெனெத் தொண்ணூறு ‘டிகிரீ’ திரும்பியது சுவற்றில் மோதிடாமல். ஆனால் பின்னால் வந்த சின்ன வல்லூறு சுவற்றில் மோதி மயங்கிக் கீழே விழுந்தது. அதன் கால் விரல்கள் சுருட்டிக் கொண்டன. அதனை எனது கையில் எடுத்து மல்லார்ந்த நிலையில் இடது கை கட்டை விரலுக்கும் உள்ளங்கைக்கும் இடையே பிடித்துக் கொண்டு அதன் வாயில் இரண்டு சொட்டு நீர் விட்டேன். அதன் கண்கள் இரு முறை சற்றே திறந்து மூடின. மேலும் சிறிது நீர் விட்டேன். அதன் கால் விரல்கள் மெல்ல விரிய ஆரம்பித்தன. அடுத்தகணம் அதன் ஒரு காலின் விரல்கள் என் கட்டை விரலைச் சுற்றி இறுக ஆரம்பித்தன. அதன் ஒரு விரலின் நகம் கிட்டத் தட்ட என் கட்டை விரல் எலும்பு வரை சென்று வலி உயிர் போக ஆரம்பித்தது. அதன் விரல்களைப் பிரித்திட முயன்ற என் முயற்சி பலன் அளிக்க வில்லை. அப்படியே என் கையை அருகில் இருந்த ஒரு செடியின் பக்கம் கொண்டு சென்றேன். அப்போது அது திமிறிக் கொண்டு என் பிடியில் இருந்து விடுபட்டு என் கை மீது நேராக அமர்ந்து, பின் என் கையில் இருந்துத் தாவி அந்த செடியின் மீது உட்கார்ந்தது. சில நிமிட இடைவெளிக்குப் பின் அது பறந்து சென்றது. அன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன் மாமிசப் பட்சிணிப் பறவைகளைக் கையில் பிடிக்கக் கூடாது என்பதை. அன்று தான் புரிந்து எனக்கு ஏன் வல்லூறுகளைப் பழக்கி அவற்றை வைத்துக் கொண்டு முயல் வேட்டை ஆடுபவர்கள் கை உறை அணிகிறார்கள் என்று. (கையுறையுடன் முயல் வேட்டை – படம் இணைய தளத்தில் இருந்து)
|


