இறைவனைக் காண்போம்-- சின்ன வல்லூறு

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:43, 3 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (42)


சின்ன வல்லூறு

உலகிலேயே அதிக வேகத்தில் பறந்திடும் பறவை ஆங்கிலத்தில் பெரிக்ரீன் ஃபால்கன் (Perigrine falcon) என்றழைக்கப் படும் பறவை. இதன் தமிழ் பெயர் “பொரி லகுடுவாம்.”


(பெரிக்ரீன் ஃபால்கன் - படம் பிடித்தது சுதீர் ஷிவ்ராம்)

இந்தப் பறவை தன் இரையைப் பிடிக்க முயலும் போது மணிக்கு 250 முதல் 300 கிலோமீடர் வேகத்தில் பறக்குமாம். இரையை நெருங்கிடும் கடைசீ வினாடிகளில் தனது இறக்கைகளை உடலோடு மடித்துக் கொண்டு, துப்பாகியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல மணிக்கு 400 - 500 கிலோமீடர் வேகத்தினைக் கூட எட்டிடுமாம்.

(“கடைசீ வினாடிகளில் இறகுகளை உடலோடு மடித்துக் கொண்டு அதி வேகத்தில் பறந்திடும்” – படம் கேரி எ. டேவிட்)


தமிழ் நாட்டில், இப் பறவையின் ஒரு சகோதரன் தான் சின்ன வல்லூறு, ஓணாங்கொத்தி, பைரி என்று பல பெயர்களில் அழைக்கப் படும் ஒரு பறவை. இதன் ஆங்கிலப் பெயர் ஸ்பேரோ ஹாக் (Sparrow hawk). இப் பெயர் வரக் காரணம் இதன் பிரதான உணவு சிட்டுக் குருவிகள் (Sparrows).

பைரியோடு எனது சந்திப்பைப் பாருங்கள்.

(சின்ன வல்லூறு - படம் இணைய தளத்தில் இருந்து)



விஜயவாடாவில் ஒரு நாள் காலை விட்டின் பின்புறம் நான் நின்று கொண்டிருந்த போது ஒரு சிட்டுக் குருவியை ஒரு சின்ன வல்லூறு துரத்திக் கொண்டு வந்தது. குளியல் அறை சுவர் அருகே வந்ததும் சிட்டு சட்டெனெத் தொண்ணூறு ‘டிகிரீ’ திரும்பியது சுவற்றில் மோதிடாமல். ஆனால் பின்னால் வந்த சின்ன வல்லூறு சுவற்றில் மோதி மயங்கிக் கீழே விழுந்தது. அதன் கால் விரல்கள் சுருட்டிக் கொண்டன.  

அதனை எனது கையில் எடுத்து மல்லார்ந்த நிலையில் இடது கை கட்டை விரலுக்கும் உள்ளங்கைக்கும் இடையே பிடித்துக் கொண்டு அதன் வாயில் இரண்டு சொட்டு நீர் விட்டேன். அதன் கண்கள் இரு முறை சற்றே திறந்து மூடின. மேலும் சிறிது நீர் விட்டேன். அதன் கால் விரல்கள் மெல்ல விரிய ஆரம்பித்தன.

அடுத்தகணம் அதன் ஒரு காலின் விரல்கள் என் கட்டை விரலைச் சுற்றி இறுக ஆரம்பித்தன. அதன் ஒரு விரலின் நகம் கிட்டத் தட்ட என் கட்டை விரல் எலும்பு வரை சென்று வலி உயிர் போக ஆரம்பித்தது. அதன் விரல்களைப் பிரித்திட முயன்ற என் முயற்சி பலன் அளிக்க வில்லை.

அப்படியே என் கையை அருகில் இருந்த ஒரு செடியின் பக்கம் கொண்டு சென்றேன். அப்போது அது திமிறிக் கொண்டு என் பிடியில் இருந்து விடுபட்டு என் கை மீது நேராக அமர்ந்து, பின் என் கையில் இருந்துத் தாவி அந்த செடியின் மீது உட்கார்ந்தது. சில நிமிட இடைவெளிக்குப் பின் அது பறந்து சென்றது.

அன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டேன் மாமிசப் பட்சிணிப் பறவைகளைக் கையில் பிடிக்கக் கூடாது என்பதை. அன்று தான் புரிந்து எனக்கு ஏன் வல்லூறுகளைப் பழக்கி அவற்றை வைத்துக் கொண்டு முயல் வேட்டை ஆடுபவர்கள் கை உறை அணிகிறார்கள் என்று.

(கையுறையுடன் முயல் வேட்டை – படம் இணைய தளத்தில் இருந்து)

என் கதையை விட்டு விட்டு சின்ன வல்லூறு கதைக்கு வருவோம்.



சின்ன வல்லூறு இலைகள் அடர்ந்த மரங்களில் உட்கார்ந்து கொண்டு அங்கு ஏதேனும் பறவைகளோ, தரையில் ஊர்ந்திடும் ஓணான், பல்லி, பாம்பு இவைகளோ வருகின்றனவா என உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். ஏதேனும் ஒன்று தென் பட்டால் அடுத்த கணம் அதி வேகத்தில் அதை வேட்டையாடிடும்.


சின்ன வல்லூறு இனப் பெருக்கம் செய்வது மார்ச் முதல் ஜூன் வரையில் ஆன மாதங்களில். அப்போது அது உயர்ந்த மரங்களில், சுள்ளிகளை வைத்துக் கூடமைக்கும். அதனுள்ளே மெத்தையாக காய்ந்த புற்கள், நுண்ணிய வேர்கள் இவற்றைப் பரப்பிடும். சுமார் நான்கு முட்டைகள் இடும்.

கூடு கட்டுவதிலும், குஞ்சுகளுக்கு இரை அளிப்பதிலும் ஆண் பெண் இரண்டுமே பங்கேற்கும்.

இப்பறவை கத்துவது, “சிய்ங்…..சிய்ங்….” என்பது போல இருக்கும்.



இயற்கையில் தான் எத்தனை வித உயிர் வாழ்வன! எத்தனை வினோதங்கள்!!

 நடராஜன் கல்பட்டு


--Geetha Sambasivam 08:43, 3 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam